குறிச்சொல் தொகுப்புகள்: வாழ்த்துக் கவிதைகள்

குழந்தைகளின் கையில் கடவுளின் பொம்மைகள்.. (அணிந்துரை)

உலகின் தலைகீழ் விகிதாச்சாரங்களை நேர்படுத்தும் வித்துகளே குழந்தைகள். வாழ்வின் பல மாற்றங்களை குடும்பத்தின் வேரில் ஊடுருவி ஒரு வானெட்டும் தீப்பந்தவெளிச்சத்தை அவ்வேரின் நுனியிலிருந்து பிடுங்கி உலக இருட்டைப் போக்க காண்பிக்குமொரு நெருப்புவிருட்சத்தின் தீப்பொறியை ஒவ்வொரு குழந்தைகளும் ஏந்திக் கொண்டேப் பிறக்கின்றன. அந்த குழந்தைகளின் மகத்துவத்தை கவிதைகளாக்க முயன்றிருக்கிறார் இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் முனைவென்றி நா. சுரேஷ் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிறந்தநாள் பாடல் தமிழில் – இசை ஆதி!!

உறவுகளுக்கு வணக்கம், முன்பறிவித்திருந்தது போல் எங்களால் இயன்றவரையிலான முயற்சியில் பிறந்தநாள் பாடலை தமிழில் செய்துள்ளோம்… பாடல் கேட்டுவிட்டு கருத்துப் பதியுங்கள். காத்திருக்கிறேன். ஒரு கூடுதல் தகவல், சிலர் இப்பாடலை இத்தனைப் பெரிதாக இருப்பதாகக் கருதலாம். நாங்களும் கருதினோம். அதற்கான விளக்கம் யாதெனில் – நாமெல்லாம் பிறந்த தினத்திற்குப் பாடும் ஆங்கிலப் பாடல் வெறும் இரண்டு வரியிலானது … Continue reading

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 15 பின்னூட்டங்கள்

24) ஹேப்பி பர்த்டே இனி எதற்கு? பிறந்தநாளுக்கு தமிழிருக்கு!!

இன்னும் எத்தனைக் காலத்திற்கு அன்று நாம் வாங்கிய அடிகளை மறந்தும், சிந்திய ரத்தத்தை மறந்தும், விட்டுப்போன அவனின் காய்ந்திடாத எச்சத்தில் ஊறிப்போயும் கிடப்போம்? எம் தமிழர் பிறந்தநாளில் வெறும் ஹேப்பி பர்த்டே படிப்போம்? செம்மொழி செய்தும்கூட எம்மொழி எம் மொழியோயென்று ஏளனப்படவே ஆனோமே இனமே? ஆங்கிலம் என்ன அத்தனை என் வீடு தாண்டி என் உள்ளம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கவிஞர் மன்னார் அமுதனின் “அக்குரோனி” க்கு வாழ்த்து!!

  என்றோ எவனோ வீசிய எச்சில் இலைகளைத் தின்று உயிர்க்கும் – பிச்சைக்காரி “பாவம், தின்னட்டும்” குரல் கொடுக்கும் கனவான்கள் உண்டு வைத்ததை தின்று மீந்ததை ஈந்து – சில நாய்களோடு சொந்தம் சேர்வாள் நன்றிப் பெருக்கால் நாய்களும் அவள் பின்செல்லும் இருளைப் போர்த்தியவள் உறங்கும் இரவுகளில் – நாய்கள் துணை தேடித் தெருவிற்குள்  செல்லும் … Continue reading

Posted in அணிந்துரை, வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!!

உனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து இக்கடிதத்தில் கோர்த்திடவா; நீ அழயிருக்கும் கண்ணீரை – கோடி; விலைவைத்தேனும் வாங்கிடவா! நீ வெல்லும் ஒரு சபைக்கு நான் காலதவம் செய்திடவா; நீ செய்த ஒரு தவரிருப்பின் – அதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா! நீ சொல்லுமொருக் கட்டளையில் இவ்வுலகை மாற்றி போட்டிடவா; நீ சென்று பார்க்கும் தெருமுனையில் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்