வானம் என் வீடெனக் கொள்க
பூமி நான் கடக்கும் பாதையெனக் கொள்க
காற்று நிலம் நீர் அண்டமும் என் வழித்துணையெனக் கொள்க
எழுத்து என் முகமெனக் கொள்க
சமூகம் என் உயிரெனக் கொள்க
பிறரின் நலனுக்காய் வாழ்வதே எனது வாழ்வெனக் கொள்க!!
பேரன்புடன்..
உங்களன்பு வித்யாசாகர்
கூடுதல் விவரங்களுக்கு:
Good Intro.
Keep writing. Best wishes.
நம் தளத்திற்கு முதல் தர விமர்சனம் தந்த பெருமை உங்களையே சாரட்டும்! உங்களை போன்றோரின் அன்பினால் எழுதுபவரின் திறன் உலகறியப் படட்டும்!
மிக்க நன்றி என் தோழமையே..
உங்கள் தமிழ் தொண்டுக்கு வாழ்த்துக்கள் . உங்கள் நுலின் பெயர்களைக் கேட்டாலே படிக்க வேண்டுமென்ற ஆவல் பிறக்கிறது . பல செய்திகள் கவிதையாய் வாழ்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது . இளையவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் தூண்டுதலாக அமையும் .
மிக்க நன்றி சிவராஜ். தங்களிடம் பேசிய தருணம் இனிமையானவை. கவிதைச் சாதனைக் குறித்து எல்லோருக்கும் எனையறிந்தோர் அளவிற்கு தெரியப் படுத்தியுள்ளேன். நிறைய படைப்புக்கள் வரலாம். திறமாக நன்றாக முன்னெடுத்துச் செய்வீர்கள் என்று நம்பிக்கை உண்டு. நம் தளத்திற்கான தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு நன்றியும் வணக்கமும்..
சகோ
தங்கள் எழுத்து நம் தமிழ் சமுகத்துக்கு தேவை
எனவே எழுதுங்கள் தங்கள் எழுத்தின் ரசிகன்
தங்களை எம்மோடு இயைத்துள்ளோம் தங்களும் எங்களை
இணை பிரியாது இருக்க
உறவுகளைப் பிரிந்து எங்கே செல்ல; உங்களோடு தானிருப்பேன்.. உருவமாக அல்ல; உயிராக!
கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்!
தங்கள் எழுத்து நம் தமிழ் சமுகத்துக்கு தேவை
எனவே எழுதுங்கள் தங்கள் எழுத்தின் ரசிகன்
தங்களை எம்மோடு இணைத்துள்ளோம், தாங்களும் எங்களை
இணை பிரியாது இருக்க!
தமிழோடு இணைந்ததில்; உங்களோடும் இணைந்தேனென்றே கொள்க, தம்பியாக அணைத்ததில்; அண்ணன் அருகிலுள்ளேன் என்றே உணர்க!
கவிஞனுக்கு கற்பனைதானே உலகம்!!!
பூவிலும் வசிப்பான், பூங்காற்றிலும் வசிப்பான்!!!
கவிதை எனும் மலர்ச்சோலையில் ரோஜாச் செடியாக மலர்ந்திருக்கும் என் அன்பு கவி வித்யாவிற்கு வாழ்த்துக்கள்!!!
மனதை விசாலமாக வைத்துள்ளீர்கள்.உங்கள் அன்பிற்கு நன்றி சகோ!
உங்கள் எழுத்துப்பணி தொடர என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
மிக்க நன்றி உறவே. நண்டு நொராண்டில் நானுமொரு ரசிகன்!
மிக்க மகிழ்ச்சி வித்யாசாகர் அவர்களே
உங்கள் தமிழ் பணித்தொடர நமது தமிழ்த்தோட்டத்தின் சார்பில் வாழ்த்துக்கள்
தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி தமிழ்த்தோட்டம். நேரம் கிடைக்கையில் வெந்து பேசி செல்லுங்கள். யாமும் மகிழ்வோம்!
உங்களின் பூவும் நானும் கவிதையை எமது இவர்களால் சிலிர்க்கும் இயற்கை என்ற தொகுப்பு நூலில் இணைக்க விருப்பம். உரிமை வேண்டும்.
please write to
saba.shiv@shapoorji.com
அன்புடையீர் வணக்கம், மகிழ்வோடு இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி..
சுவிசில் நாளை ஜெனீவா நோக்கி விடுதலைத் தீ!
சுட்டியை சொடுக்கவும்.. http://www.eelamwebsite.com/?feed=rss2
ஒன்று கூடுங்கள் உறவுகளே.. நம் ஒற்றுமை சங்கிலியின் இறுக்கத்தில் உரிமை போரின் வலியை உலகம் அறியும் நுனிப் பொழுதிலாவது பிறந்தெழட்டும் நம் (ஈழ) தேசம்!
romba nalla iruku nanbarae!!!@!
மிக்க நன்றி அருண். உங்கள் வலைத் தளத்தில் உள்ள சில விசயங்களும் சிந்திக்கவே வைக்கிறது!
Its nice to se your site.vaazhththukkal.
Mullai Amuthan London
உங்கள் வாழ்த்துக்களால் பலம் கொள்வேன். பலம் உங்களுக்கான கவிதையை ஓர் நாள் கொடுத்திருக்கும்.
படிப்பிற்கான காரணகர்த்தாக்கள் உங்களை போன்றோர் தான்! மிக்க நன்றி!
Dear Mr. Vidhyasaagar,
உங்கள் எழுத்துப்பணி தொடர என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
regards,
Kanchana
அன்பிற்குறிய காஞ்சனா அவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்துக்கள் உள்ளவரை எழுதிக் கொண்டே இருக்கும் வரம் வேண்டுவேன். மிக்க நன்றிகள் பலதோடு வாழ்த்துக்கள் பல உங்களுக்கும் உரித்தாகட்டும்!
அன்புள்ள வித்யாசாகர்
தங்களின் தொடரும் இலக்கிய பணிகள் என்னை வியப்பில் ஆழ்த்துகின்றன.
தொடரட்டும் தமிழ்த் தொண்டு. வாழ்த்துகள்
நெல்லை முத்து வேல்
உலகின்; வாழ்வின்; எந்த புள்ளியில் இருந்தாலும், நட்பால் – எழுத்தால் – இணைந்தே இருப்போம். தங்களின் தோழமை வாழ்த்தும் அன்பை விட என் பணியென்ன வியப்பு ஐயா.
எனினும் தங்களுக்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!
ungalukum anathu nanrikal urithahattum
Dear Sir,
Thanks for your prompt relpy.
Your story books all of them its very super!!!
உங்களை போன்றோரின் அன்பிற்கு தலை வணங்குவதன்றி, வேறென்ன சம்பாதித்துவிடப் பிறப்பெடுத்தோம் காஞ்சனா. தொடர்ந்து வாருங்கள்..
நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் பூங்காவுக்கு வந்துள்ளேன்
பல புதிய கவிப்புக்கள் மலர்ந்திருக்கிறது மனதுக்கு இதமாக இருக்கிறது
சகோவிற்கு வாழ்த்துக்கள்
வாருங்கள் சகோ..,
இனிய பூக்களாய் நீங்களெல்லாம் பூத்துக் கொண்டிருக்க; உங்களின் அன்பில் நனைந்து, என் கவிமலர் ஓர்தினம் இப்படி கமழ்வதிலே தானே நீல்கிரதேன் பயணம் சகோ!
ஆம் சகோ ஒருவரை ஒருவர் சந்திக்காது விடினும்
இந்த இனய பூங்கா நம்மை இணைக்கிறது பாருங்கள்
உங்கள் கவிப்பூக்களின் வாசத்தால்…. தங்களும் எமது தளத்துக்கு
வந்திருப்பது தெரிகிறது
அன்புடன்
சகோ
இன்னும் நிறைய வருவோம், இணைந்தே இருப்போம் தமிழால், தமிழருக்காய்! மிக்க நன்றி சகோ!
கனவுகள் இரவுகளின் பரிசு
பார்வை கண்களின் பரிசு
கவிதை கவிஞனின் பரிசு
காலம் கடவுளின் பரிசு…
பாதை இருந்தால் பயணம்
பயணம் இருந்தால் பாதை!
கனவுகளோடு இரு…
மனதில் வலியும்
தோளில் சுமையும்
இலட்சியவாதியின் இருப்பும்
இலக்கியவாதியின் பிறப்பும்
சமூகத்தின் கண்.
பார்வையோடிரு_ சமூகப்
பார்வையோடிரு!
என்றும் அன்புடன்
அல்லையூர்,சி.விஜயன் (இத்தாலி)
பின்னூட்டத்தை கூட கவிதையால் பின்னியுள்ள அல்லையூர் சி.விஜயன் அவர்களுக்கு நன்றி. எல்லோருக்கும் காதல் வந்தால் கவிதை வரும் என்பார்கள். நான் காதலித்த போது கவிதைகளை விட அதிக மவுனத்தினுள் தான் வாழ்ந்திருந்தேன். கவிதை என் சமூகத்திற்காய் பிறந்தது. என்று என் சமூகக் கண் விரித்துப் பார்க்க ஆரம்பித்தேனோ அன்றிலிருந்தே கோபம் அழை ஏமாற்றம் அடிமைத்தனத்தின் வலி என அத்தனையும் உள்ளூர புகுந்து பிசைந்ததில் உணர்வுகள் கவிதையானது.
இடையே சமூகத்தில் குடும்பம் உற்றார் உறவு காதல் என எல்லாம் நினைவுர அவைகளும் பதிவாயின; பதிவாகின்றன. தங்களின் வரவிற்கு நன்றி விஜயன். தொடர்ந்து வாருங்கள்.
தங்களின் வளையும் கண்டேன். மிக அருமை. தமிழ் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்!!
அன்பின் நண்பர் வித்யாசாகர்!
உங்கள் தளத்திற்கு முதல் முறையாக பிரவேசித்தபோது
நான் அசந்து போனேன், வாசகனை வளைத்துப் போடும்
வசீகர வார்த்தைகள், சந்தம் பாடும் கவிதைச் சிந்துகள்,
காட்டாறு வெள்ளமாக சலசலத்து ஓடும் அழகிய மொழிவளம்.
வாழ்த்துக்கள் நண்பரே..
உயிரிலிருந்து உச்சிவரை மகிழ்ந்து போனேன் தோழி. பாராட்டினால் பெருமை கொண்டு விடவில்லை, என் மண்ணிலிருந்து ஒரு பெண்; போற்றத் தக்க படைப்பாளி; இத்தனை பெருந்தன்மையாய் தந்த ஒரு மறுமொழிக்கு அகம் குளிர்ந்து போனேன்.
தங்களை போன்றோரின் வாசிப்பிற்காய் மீண்டும் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன். என்றேனும் ஓர் தினம், ஒரு ஜீவன் – இவ்வெழுத்துக்களால் பலம் கொண்டு எழுமென நம்புகிறேன்.
மேலும் –
சாதித்ததொன்றுமில்லை; சாதிக்க எல்லாம் உண்டென்ற உண்மைக்குள் அடங்கி நன்றியறிவித்தலோடு விடைகொள்கிறேன்.
நண்பரே! முடிந்தால் என் வலைத்தளத்தையும் கொஞ்சம் பாருங்களேன்.
http://www.farveena.blogspot.com
ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டை கூட, சிந்தை குளிர கேட்கப் பாடும் தமிழர் பண்பு மறவாது, தங்கள் மகளின் பிறந்த தின வாழ்த்திற்கு கவியெழுதி வாழ்த்தியுள்ள தங்களுக்கு பாராட்டுக்களும்; இத்தனை அன்பிற்குறிய அந்த அன்புக் குழந்தைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், ஆசியும் உண்டாகட்டும். .
பர்வின் என்று பெயர் கண்டதால் தோழியென்றுணர்ந்தேன். தோழர் என திருத்திக் கொள்கிறேன்.
தங்கள் வலைக்கு ‘நாச்சியா தீவு பர்வின் பக்கம்’ என்று சூட்டியதை காட்டிலும் ‘பர்வினின் கவிதை பூங்கா’ என்று வைத்திருக்கலாம் போல். அத்தனை அழகான தளம். வார்த்தைகளால் உணர்வுகளால் இதயம் நனைக்கும் கவிதைகளும், சமூக அவலத்திற்கு சவுக்கடி சொடுக்கும் முயற்சியாகவும் தங்களின் எழுத்துப் பணி நெஞ்சில் நீண்ட இடம் கொள்கிறது.
தங்களின் இந்த கீழ்வரும் கவிதை வாழ்தலின் ஆதாரக் கவிதை எனலாம்.
//கனவுத் தூரிகை படம் வரைந்து வாழ்க்கைக் குறிப்பில் பதிந்து வைக்கும்
சேவல்கள் உறங்கிப் போய்விட்ட நடுச்சாமத்து நிமிசங்கள் இருளில் புதைந்து அமைதி காக்கும்
தூரத்தில் சில்வண்டுகளின் ஓசை இருந்தும் காதுகளுக்கு எதுவும் கேட்காது
சோம்பல் முறித்து மெல்லச் சிணுங்கும் மகளின் அதிர்வுகளால் மனைவியும் நானும் கண் விழிப்போம்
மனைவியின் தாலாட்டிட்கு அசைந்து கொடுக்காமல் அழும் மகளின் அதரங்களை நானும் மனைவியும் தட்டிக் கொடுப்போம்
என்னையும் மனைவியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே சிரித்தும் அழுதும் விளையாடியும் என் மகள் நேரம் கடத்துவாள்
மகளின் விளையாட்டுடன் சில இரவுகள் விடிந்தும் போய் உள்ளன
என் உம்மாவும் வாப்பாவும் என்னோடும் இப்படித்தான் காலம் கடத்தியிருப்பார்கள்
சாமத்தில் எப்படி கனவு காண்பது விளித்திருகையில் இருந்தும் விழித்திருத்தல் பிடித்தித்திருகிறது என் மகளுக்காக………….//
திருத்த வேண்டிய சில எழுத்துப் பிழைகளும், வரிசை அமைப்பும் கூடுதல் பலம் சேர்க்கலாம். தொடருங்கள் மெல்ல காலூன்றி எழுந்து நிற்க முயன்றவர்களுக்கு; எட்டி வானத்திற்கு மேல் தொடுவதொன்றும் அத்தனை கடினமான சவாலல்ல.
வெல்வீர்கள்; வாழ்த்துக்கள்!
நன்றி வித்யாசாகர்!
உங்களின் விமர்சனமும் கருத்துக்களும் மெச்சத்தக்கவை எழுத்துப்பிழைகளை எத்துனை முயற்சித்தும் சிலபொழுதுகளில் தவிர்க்க முடிவதில்லை, இருந்தும் பிழை பிழைதான். உங்கள் வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றிகள்.
மிக்க நல்லது தோழரே. உணர்வு வருடும் கவிதைகளில் தவறுகள் மறைந்து தான் போகிறது. நமக்கே அது பிறகு படிக்கையில் தெரிய வருகிறது. தவிர, கணினியில் செய்யும் தமிழ் தட்டச்சினாலும் பிழைகள் ஏற்படுகின்றன. பார்வையை மறைத்தும் விடுகின்றன. நம் வலையிலும் நிறைய ஆங்காங்கே பிழைகள் உண்டு. நண்பர்கள் வருகையில் கூறுகிறார்கள் பின், சரி பார்த்து திருத்திக் கொள்கிறேன்.
தவறுகள் நிகழ்வது இயல்பு; திருத்திக் கொள்வதே மனிதத்துவம் என எண்ணுகிறேன். என் எண்ணத்தையே தங்களுக்கும் சொன்னேன். தொடருங்கள். நிறைய எழுதுங்கள். பதிவதில் தேர்ந்தெடுத்து புத்தகமாக்குங்கள். நாளைய தலைமுறைக்கு நாம் கிடைக்க மாட்டோம், படைப்பு; நம் சுவடாக இருக்கும்! மீண்டும் வாழ்த்துக்கள் இனிய தோழரே!
“எழுத்து என் முகமெனக் கொள்க”
அடையாளம் மிக அருமை.
வாழ்த்துகள் அன்பரே!
என் அடையாளம், உலகிற்கு என்னை காட்டி ஈர்த்த எனக்கான விலாசம், எதையேனும் சாதிப்பேனென்று நினைவு தெரிந்த நாள் முதல் நான் கொண்ட நம்பிக்கைக்கான காரணம், என் எதிர் நோக்கும் ஒரே அங்கிகாரம்…………….. எல்லாமே எழுத்திற்கானது மித்ரன். தங்கள் வாழ்த்து மேலும் எனக்கு பலம் கூட்டுமென நம்புகிறேன். மிக்க நன்றி அன்பிற்குரியோரே!
hai
வணக்கம் தோழரே.., உங்கள் பெயரும் வித்யாசாகர் என்பதில் மகிழ்ச்சி. இணைந்தே இருங்கள். நம் இணைப்பில் இன்னும் பல இலக்கியம் பிறக்கட்டும்!
hai
வணக்கம் பிரபு, வார்த்தைகளை விருப்பமோ நேரமோ விழுங்கிக் கொண்டு விடுகின்றனவா.. எதுவாயினும், ஒரு சின்ன அழைப்பில் பெரிய சிநேகம் கொள்வோம். வருகைக்கு நன்றி!
அன்பின் தோழர் வித்யாசாகர்,
உங்கள் எழுத்துக்கள் மிகவும் அருமையானவை.. வாசிக்க வாசிக்க இன்பமளிக்கும் அருமையான கவிதைகளைக் கொண்டு ஒரு இலக்கியத் தளத்தினை தொடர்ந்து தனிமனிதனாக செயல்படுத்தி வரும் உங்கள் விடாமுயற்சி பாராட்டத்தக்கது…
என் தளத்திற்கு தொடர்ந்து வருகை தந்து குறை நிறைகளைக் கூறி எனது வளர்ச்சியில் பெரும் பங்கெடுத்துள்ளீர்கள் என்பதை இந்நிமிடத்தில் நினைத்துப் பார்க்கிறேன். என் கோடி நன்றிகள்.
நான் உங்கள் எழுத்துக்களை உங்கள் தளத்திலும், ஈகரையிலும் தொடர்ந்து படித்து வருகிறேன் என்பதைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள்…. சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்…
பாராட்டுவதற்கோ, வாழ்த்துவதற்கோ இச்சிறுவனுக்கு வயதுள்ளதா என்று தெரியவில்லை… என் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
அன்புடன்
மன்னார் அமுதன்
இலங்கை
என் அன்பிற்கும் தோழமைக்குமுரிய மன்னார் அமுதனின் இதயமார்ந்த வாழ்த்திற்கு நன்றிகள் பல. வாழ்த்த வயதை கடந்து மனதும் போதும், நீங்களோ மனம் முழுக்க நிறைத்து வைத்துள்ள பெருந்தன்மை போதாதா அமுதன். தங்களின் அன்பில் நெகிழ்ந்தேன் என் சகோதரன் என்னை மெச்சினதாய் உள்ளம் குளிர்ந்தேன், பாசத்தால் நிறைந்தேன்.
என்னால் இயன்ற மட்டும் இயங்கினாலும்; உங்களை போன்றோரின் அன்பாலும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும் மட்டுமே மீண்டும் மீண்டும் மனிதனாகிறேன் அமுதன். அந்த மனிதம் கொண்டுள்ள பாடத்தையே எழுத்தாக்குவதில்; உங்களால், உங்களை போன்றோரால் வளர்வதில், உங்களை போன்றோரின் வளர்ச்சிக்கும் நான் பொறுப்பில்லையா??
தீயதை எங்கு கண்டாலும் கர்ஜிக்கத் தயங்காதீர்கள்’ என்று சொல்லும் நான் நல்லதை எங்கு கண்டாலும் போற்றாமலும் இருப்பதில்லை அமுதன். நீங்கள் போற்றக் கூடியவர் போற்றினேன் அன்றி வேறில்லை. உங்களின் விசால மனமும் உயர் எண்ணமும் இன்னும் உங்களை வளர்க்கும், தமிழுக்கு மத்தியில் நின்று நிலைக்கும். வாழ்க; வளர்க!
மிக்க நன்றிகளும்….
அன்பிற்கினிய அன்பரே! வணக்கம்!!!
அயல் நாட்டில் அயரா பணிகளுக்கிடையில் தாங்கள் ஆற்றும் பணியையும், தங்களின் (நம்) தமிழின பற்றையையும், மொழியின் வேட்கையையும், மீட்சியையும் கண்டு நான் பூரிப்படைவதோடு, உங்களின் இக்கவிப்பயணம் நம் இக்கால மற்றும் எதிர்கால சந்ததியினற்கு இனம், மொழியின் தேவையை உணர வைக்கவும் தூண்டவும் செய்யும்.
வாழ்த்தும் நெஞ்சம்,
ஆ. இராசேந்திரன்,
பொள்ளாச்சி.
மனதார்ந்த வாழ்த்திற்கு நன்றிகளைய்யா. உங்களை போன்றோரின் வாழ்த்துக்களாலும் கோரிக்கையாலும் வேண்டுதலாலும் தவிர கண்ணீர் சிந்தியழ வைக்கும் சில சமூகக் கொடுமைகளை கண்டு சகிக்க இயலாமையாலும் தானே நீள்கிறதிந்த எழுத்துப் பயணம்.
நாளைய சந்ததி என்று சொல்லி சொல்லியே, நாளைக்கும் அவர்கள் அதையே பேசி அடுத்த சந்ததியை திருத்தும் நோக்கில் காலம் கடத்தி விடுவார்கள் போல். எனவே நாம் இந்த சந்ததியிலிருந்தே, நம்மிலிருந்தே நமக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வோம் என்பதே எண்ணம்.
அந்த எண்ணம் முழுமையாய் பரவி, பின் வருவோர் மனதில் நின்று நிலைத்து நல்வழி பயிற்குமானால்; மகிழ்வேன் ஐயா.
தங்களின் வாழ்த்திற்கு நன்றி!
//சாதிச் சண்டைகள் ஏராளம்
வாள் வெட்டுக்கள் ஏராளம்
சாதித்ததுதான் என்ன?//
//வாழ்வித்ததுதான் எவ்வளவு?//
//முட்டாள் மனிதனே
மனிதத்தை விடவும் உயரியது எதுவோ…..//
உங்கள் பதிவுகளுக்கு தலை வணங்குகின்றேன்.
நன்றி.
உங்கள் அன்பில் அடக்கம் கற்கிறேன். எழுதுவது என் கடன் உறவே. அது சரியெனில் மகிழ்வோம். மீண்டும் லட்சியத்தை நோக்கி பறக்கும் பறவையினை போல்; என் எழுத்திற்காய் தயாராகிறேன்.. மிக்க நன்றிகளுடன்!!
அன்புள்ள வித்யாசாகர்… உங்கள் படைப்புக்கள் அனைத்தும் மிகக் காத்திரமாக இருக்கின்றன. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். றேனுகா
மிக்க நன்றி றேனுகா. தங்களின் வருகை மகிழ்ச்சிக்குரியது. காத்திருமாக இருக்கத் தான் முயல்கிறேன்.. ரசிப்பும், தவிப்பும், அக்கறையும், நிகழும் கொடுமைகளால் கொந்தளித்த உணர்வுகளும்.. படைப்பாகி வரும் இடையிலும்; உங்களை போன்றோரின் வாழ்த்துக்களில் மேலும் எழுச்சி கொள்ளத் துணிகிறது மனம்.
வலையுலகம் சென்றடையும் எழுத்துக்கள் தங்களை போன்றோரின் உள்ளம் நிறைதலில் புற உலகும் பரவுமென நம்புகிறேன்…
மிக்க அன்பும் நன்றிகளும் உரித்தாகட்டும்..
உங்களது பதிலுக்கு மிக்க நன்றி. ஈழம் சார்ந்த உங்கள் படைப்புக்கள் அனைத்தையும் எனது பிரத்தியேக மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மிக உதவியாக இருக்கும். அத்துடன் ஒரு தலைமையின் கீழ் ஈழத்தமிழர்கள் ஏன் ஒன்றுபட வேண்டும் என்பது தொடர்பிலும் உங்கள் ஆக்கம் ஒன்றினை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்களுடன் றேனுகா
*மிக்க நன்றி உறவே..* அங்ஙனமே செய்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன். தங்களின் மேலான வருகைக்கும், வாழ்த்திற்கும், அன்பிற்கும்; நன்றிகளால் நெஞ்சம் நிறைகிறேன்…
வணக்கம் உங்கள் படைப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.. அண்ணா..
மிக்க நன்றிப்பா.. தொடர்ந்து படிங்க, மனதில் படிப்பவை நிற்கத் தகுந்ததா??? எந்தளவு நிற்கிறது?? வேறென்ன கருதுகிறீர்களென தெரியப் படுத்துங்கள். உங்களை போன்றோரின் விமர்சனங்களில் தான் மேலும் நகர்வதற்கான நம்பிக்கையையும், மாற்றி சிந்திக்கும் பலத்தையும் கொள்ள முடிகிறது. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பார்கள்; உங்களையெல்லாம் என் உடையவர்களென்றே எண்ணுகிறேனப்பா. வாழ்க; வளர்க!!
I am So Happy to See this,
Ayyappan.K
மிக்க நன்றி ஐயப்பன். உங்களின் மகிழ்வில் என் எழுத்தும் வளம் கொள்ளுமென நம்புகிறேன்!
இதுவரை உங்களுடைய ஆக்கங்களையும், கவிப்புலமையையும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வாயிலாகத்தான் நான் பார்த்து வியந்ததுண்டு. ஆனால் வித்தியாசாகர் என்ற பெயரோடு உங்கள் திருமுகத்தை இன்றுதான் தரிசனம் பெற்றேன்.
எழுத்துக்கள் அழகானவை. அதைவிட கவிதைகள் அழகானவை. கவிதைகளைவிட அழகானவை உங்கள் “விற்கப் படும் நிலாக்கள் “
வேறொன்றுமில்லை முகிலன், பிறர் நலன் கண்டு மகிழும் அல்லது பிறர் உயர்வு கண்டு பாராட்டும் உயர்ந்த மனநிலையை அதிகமாய் கொண்டுள்ளீர்கள் போல். என்னை கண்டு இத்தனை மகிழத் தக்க உண்மை பயனை நான் நம் சமூகத்திற்கு தந்தேனா தெரியவில்லை.
எனினும், மீண்டும் மீண்டும் முயல்கையில், உங்கள் மனது வரை தொட முடிந்துள்ளதை பெரும் பேராக கருதி ‘நன்மைகள் அவனால் நடத்தப் படுகின்றன’ என்றொரு கோட்பாட்டிற்கே அத்தனையையும் சமர்ப்பித்து; என் நீளும் பயணத்தில் ‘எழுத்தாய் ‘எப்பொழுதுமாய் உங்களை போன்றோருக்குள் வளம் வந்தே, வாழ்நாள் தீர எண்ணுகிறேன்..
‘முகில்’ என்பது, நான் பார்த்து பார்த்து, தேடி தேடி, ரசித்து, என் அன்பு மகனுக்கு (முகில் வண்ணனென) வைத்த பெயர். மிக்க நன்றி.. முகிலன்.., தங்கள் அன்பில் கரைந்து போனேன் என்பதே நிஜம்!
very happy to read ur articles. so interesting. keep writing….I’m really sorry for not writing in Tamil.. next time i’ll do it. Manamaartha vaazhthukkal.
உங்கள் படைப்புக்களை வாசிதத்தில் பெருமகிழ்ச்சி. மிக ஆர்வம கூடிய படைப்புகள். இன்னும் நிறைய எழுதுங்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
கடிகார முட்களின் சப்தம் மட்டுமே டிக்.. டிக்.. -கென்று நகர்ந்து இரவை விழுங்கிக் கொண்டிருக்கிறது. நானென்னவோ இரவையும் தூக்கத்தையும் ‘உங்களை போன்றோரின் இதயம் நுழைந்த எழுத்துக்களுக்கு விற்று கொண்டிருக்கிறேன். கேட்பவருக்கு கொடுக்காமல் வைத்திருந்தென்ன பயன்? கொடுப்பதற்கென்றே எழுதுகிறேன். நீங்கள் கேட்கும் வரை கொடுக்க நீளும் பாதை என் வெற்றிக்கான, ‘பூ.. தூவி விடுத்திட்ட அழைப்பன்றி வேறில்லை!
தங்களின் அன்புள்ளம் நிறைந்த வாழ்த்திற்கு மிக்க நன்றி கிரிஷ்!!
வணக்கம் அண்ணன் வித்யாசாகர்..
நீங்கள் குவைத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சிக்கு உரிய விஷயம், நானும் இருப்பதாலோ என்னவோ. உங்களின் படைப்புகள் அருமையாக யதார்த்தம் நிறைந்ததாக வந்திருப்பதை படித்ததும் பதிகிறேன்; உங்கள் பேனா விரல்களுக்கு என் முத்தத்தை. இன்னும் சத்தமில்லாமல் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
நன்றி …
அன்பின் முத்தத்தில் அண்ணனாய் நனைந்தேன் கார்த்திக். மிக்க நன்றி. எழுத்தும் தமிழும் என் உறவுகளோடு என்னை சேர்த்து வைப்பதில்; இரவெல்லாம் எழுத்தாய் விருப்பமுற்று கரைகிறது காலம். தொடர்ந்து வாருங்கள். நிறைய பேசுவோம்…
நீங்களிருக்கும் குவைத்தில் நானும் வசிப்பதற்கு மகிழ்ந்து கொள்கிறேன்!!
Hello Sir. Really superb…. Still tamil is living … Very happy. Want to express my hapiness in Tamil… But dont know the technology to write in Tamil. Anyway,… Keep posting….
Could you please help me sir… Ungalidam nalla Tamilzh ulladhu. Ennidam nalla KURAL Ulladhu. Adhai veli konara ungal udhavi thevai. Please sir…. Could you please give me any contact number of Cine field persons….Want to become a Voic over or Dubbing Artist. use to sing even sir…. Please sir. My email id is lakshmipriya.iyer@gmail.com.
Mikka NANDRI. Jai Ho !!!
மிக்க நன்றிமா.. உங்களை போல் தாகத்தோடு ஆத்தமார்த்தமாக தமிழை நேசித்து வாசிக்கிறவங்க இருக்க வரை தமிழ் கனகம்பீரமாகவே வாழும்.
தமிழில் தட்டச்சு செய்ய நம் தளத்திலேயே ‘அறிவிப்பு’ எனும் பக்கத்தில் இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. இதை சொடுக்கி நீங்கள் தலிழிலேயே கூட இனி எழுதப் பயன்படுத்தலாம். http://www.google.co.in/transliterate/indic/Tamil
தவிர, தங்களுக்கு இனிய குரல்வளம் இருப்பதாக சொன்னீர்கள், மிக்க வாழ்த்துக்கள். உங்கள் நம்பிக்கையும் முயற்சியும் நிச்சயம் வெற்றியடையும். வெகு விரைவில் இசையின் இன்னொரு நட்சத்திரமாக மின்னப் போகிறீர்கள். பொதுவாக இது போன்ற தளங்களில் பதிந்து விட்டாலே அது தானாக நிறைய பேரை சென்றடைந்து விடும். அதிலும் நம் தளம் மிக முக்கியமான நிறைய பேர் வந்து செல்லும் தொடர்ந்து வாசிக்கும் தளமென்பதால் கண்டிப்பாக யாரேனும் உங்களை தொடர்பு கொள்வார்கள்.
அதின்றி, சில தொடர்புகளை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன். அவர்களை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
மிக்க வாழ்த்துக்கள்மா.. நல்லா வருவீங்க, நம்பிக்கையோடு இருங்க. ஒரு விசயத்தை அடையணும்னா; அதுவாவே நாம மாறனும். நான் ஒரு பாடகி என்னும் ஒரு மிடுக்கு ஒவ்வொரு நகர்விலும் ஆழப் பதிந்த நம்பிக்கையாக இருத்தல் வேண்டும். எதை நினைக்கிறோமோ அதை அடையும் வரை அதையே மனதில் சங்கல்பம் செய்தல் அதை அடைவதற்கான வழியை வெகு விரைவில் சுலபமாய் ஏற்படுத்தும். சங்கல்பம் எனில் – வேறொன்றுமில்லை, சதா அதையே நினைத்துக் கொண்டிருப்பது.
இரவு படுக்கும் முன்னும் காலையில் எழுந்ததும் என அவ்வப்பொழுது மனதிற்குள் ‘சீக்கிரம் எனக்கு வாய்ப்பு கிடைத்து விடும்.. சீக்கிரம் நிறைய சாதனைகள் செய்வேன்.., சீக்கிரம் நான் பெரிய ஆளா வருவேன்னு மட்டும் நினைத்துக் கொண்டே இருத்தலில், ஆழ்மனதில் நம் தேவை கட்டளையாக பதிந்து போதலில், மேல் மனமும் உடலும் அதை அடைவதற்கான அத்தனை ரசாயன மாற்றத்தையும் தானே ஏற்படுத்திக் கொள்ளும். ஆக, ஒரு சாதனைக்கு தயாராக இருந்து அதையே தேடும் உங்களின் பார்வையின் ஏக்கத்தை முயற்சியை சமுதாயம் எளிதாய் கண்டு கொள்ளும்.
வாய்ப்பு என்பது முயற்ச்சி மற்றும் நம்பிக்கையினூடே தான் கொட்டிக் கிடக்கிறது. முயன்று பெற்றுக் கொள்ளுங்கள். மீண்டும் வாழ்த்துக்கள்!
Dear V. sagar, I have seen you recent webpage writings. You appreciated the ravanan picture with whole heartedly. It is inducing me to see the film also. Your attracting words are ornament of the film.
I watched oru siragaikodu.. also. I am searching for the words to appreciate your writings. I wish you and your dreams to get success with out fail.
Also, thank u sir. Because, You are giving confident to Laxmipriya through your writings. Yes I like this attitude of creators like Bharathi…
vanakkam.
அன்பர் வி.சாகர். தற்காலிகமாக தங்களின் தளம் கண்டேன். இதயபூர்வமாக ராவணன் படத்தை போற்றியுள்ளீர்கள். அது என்னையும் படம் பார்க்க விழையச் செய்கிறது. தங்களின் கவர்ந்திழுக்கும் வார்த்தைகள் படத்தை மேலும் ஜோடிக்கவே செய்கிறன்றன…
ஒரு சிறகை கொடு கவிதைகளும் வாசித்தேன். உங்களை புகழ வார்த்தையை தேடவே வைக்கிறது உங்களின் எழுத்துக்கள். தோல்வியற்று; தங்களின் கனவுகள் வெற்றியுற வாழ்த்துகிறேன்.
தங்களின் மற்றொரு பதிவில் லக்ஷ்மி பிரியா அவர்களுக்கு நம்பிக்கையை தரும் எழுத்தையும் கண்டு நன்றியறிவிக்க கடமை கொண்டேன். காரணம், பாரதியை போன்று சமூக நாட்டம் கொண்ட படைப்பாளிகள் என் விருப்பத்திற்குரியவர்கள்.
மிக்க நன்றி. வணக்கம்.
பெரு அன்பிற்குறிய ஐயா அவர்களுக்கு..,
//Dear V.sagar//
தயவு செய்து வித்யாசாகர் அல்லது வித்யா என்று அழையுங்களேன். இம்மண்ணில் உடலாக இல்லாத ஒரு என் உறவு தங்கையின் பெயரை, சுவாசமாக இல்லாவிட்டாலும், வெறும் பெயராகவேணும் நிலைக்கட்டுமே என்றும்.. என்னோடு இணைய முடியாத இன்னொரு உறவின் நெருக்கம் குறித்துமே வித்யாசாகர் எப்று பெயர் கொண்டேன்.
எல்லோருக்கும் தமிழில் பெயர் சூட்டி நான் மாற்றிக் கொள்ளாத காரணமும் வித்யா எனும் எங்களையெல்லாம் விட்டுச்சென்று விட்ட தங்கையின் பெயரை நிலைக்க செய்ய மட்டுமே. இப்படி ஒருவள் வாழ்ந்தாலென இம்மண்ணிற்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கும் நோக்கமே விதய்சாகர். எனவே ‘வித்யா’ என்பதே முதன்மைக்கானது சாகர் அல்ல.
அதற்காக வருத்தம் கொள்ளாதீர்கள், தங்கையின் நினைவு நாளை கூட ‘அன்றைய தினத்தில் உணவிற்கு வழியில்லா வறுமையில் உள்ள சிலருக்கேனும் உணவளித்து’ மகிழும் ஒரு விழா நாளாகக் கொண்டாடும் அளவிற்கு கால மாற்றத்தின் கட்டாயத்திற்கு வந்து விட்டோம். நினைவு கொள்கிறோம். நினைவு வலிக்கிறது. வலியாகவே வாழவில்லை, என்பதையும், உங்களை சோகத்தில் ஆழ்த்தத் துணியாத காரணத்தின் பேரில் தெரிவிக்கிறேன்.
நல்லவனாக வாழ இயலுவதே பெரும் பேரென்பார்கள். நீங்களோ எனை மிக நல்ல படைப்பாளியாக உருவாக்க விழைகிறீர்கள். இல்லாததை இருக்கென்று முழங்கி இருக்கப் பெற்ற மாமனிதக் குளம் நாம். அவ்வழியில் எதை எனக்குள் இருத்த இப்படி எல்லோரும் முயற்சிக்கிரீர்களோ அந்த படைத்தவனே அறிவான்.
எதற்கும் சாயாத நேர்பார்வை, உண்மை பேசும் மனது, எல்லாம் அவன் செயலென கொள்ளும் பணிவில் எழுத்துக்கள் இதம் கொண்டு விடுகிறது போல். அன்றி என் திறனென சொல்லேன்.
பொதுவாக நாம் பெறுவதை பிறருக்குக் கொடுத்தாலே எல்லோரும் கொடையாளிகள் தான்; என்ற நோக்கமே பிறரையும் முன் கொணர எண்ணுவது. நான் யாசிக்காமலேயே நிறைய நல்லவைகள் எனக்குக் கிடைக்கிறது. அந்த நல்லவைகளை பெரும் வாய்ப்பிற்கு மட்டுமே என்னை தயார் படுத்திக் காத்திருக்கிறேன். ஆக, யாசிக்காமல் நான் பெரும் நல்லவைகளை கேட்கும் என் சக சகோதரிக்கு எப்படி மறுப்பேன். உதவ முயன்ற ஒரு இயல்பு நிலை மானிடப் பண்பே தங்கை பிரியாவிற்கு செய்ததும் அன்றி வேறில்லை.
நேரம் ஒதுக்கி நிறைய எழுதியுள்ளீர்கள். தவிர பேசும் வாய்ப்பு கிடைக்கையில் சற்று நல்ல விசயங்களை பகிர்ந்துக் கொள்ளுதலில் ஒரு நல்ல அதிர்வை இவ்விடம் ஏற்படுத்தலாமே என்றே பொதுவாக நானும் சற்று கூடுதல் எழுதுவது. நாளை நானில்லாது போனாலும், யாராலாவது எழுத்துக்கள் காக்கப் படுமென்று நம்புகிறேன். எனவே தூக்கம், சுய தேவைகளுக்கு அப்பால் நின்று கூட எழுத்துக்குள் அதிகமாய் வாழ்கிறேன்.
இதற்கிடையே, தங்களை போன்றோரின் வாழ்த்து என்னை மிகையாய் பலம் கொள்ளவும், மேலும் சீரிய கருத்துக்களை சிந்திக்கவும், இன்னும் அதிகப் படியான பொறுப்பிற்கு ஆளாக்கவுமே செய்கிறது. மிக்க நன்றிகளையா தங்களின் வருகைக்கு. மீண்டும் மீண்டும் இன்னும் நிறைய பேசுவோம். நம் வளமையான பதிவுகளால் நாளையை இன்றிலிருந்தே தலை நிமிரச் செய்வோம்!
மிக்க.. மனம் நிறைந்த நன்றிகளையா தங்களின் அதி மேலான வாழ்த்திற்கு..
வணக்கம் உங்களின் கவிதை மிக நன்றாக உள்ளது. ஞானமடா நீயெனக்கு மிக பிடித்திருந்தது. தங்களின் எழுத்துப் பயணம் தொடர ஆண்டவனை வேண்டி வாழ்த்துகிறேன்..
உங்களை போன்றோரின் ஆசியும் ஆண்டவனை வேண்டி வாழ்த்தும் மனசு தான் எனக்குத் துணை என்று நம்புகிறேன் சகோதரி. ஞானமடா நீயெனக்கு ஒரு உண்ணத படைப்பாக வரவேண்டும் என்று எண்ணம்.
இன்னும் மூன்றேனும் மாதங்களில் பிறக்கப் போகும் இன்னொரு வரவுக் கவிதைக்காய் காத்திருக்கிறேன். அவரும் பிறந்த பின்; இருவருக்காகவும் சேர்த்து “ஞானமடா நீயெனக்கு” முழுமை செய்யப் பட்டு வெளியிடப் படும்…
அன்பிற்குறிய சகோதரிக்கு மிக்க நன்றிகள் உரித்தாகட்டும்!
வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம் !!
வித்யாசாகரின் எழுத்து பயணம் என்ற வலைப்பூவை பார்த்தேன். நன்றாக வடிவமைத்து உள்ளீர்கள். எளிய நடையிலும், அழகிய தமிழிலும், சிறப்பாக உள்ளது தளம்.
அருமை அருமை !!!
‘கத்தாமா’ வை படித்து கண்களில் கண்ணீர் கசிந்தது.நல்லவேளை அதற்குள் கதை முடிந்தது. அப்படா… ம்ம்!!
உங்களின் கற்பனைகளும்.. கனவுகளும்.. கதைகளும்.. கவிதைகளும்.. மற்றும் சிறந்த படைப்புகளும்.. மென்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன் !
இப்படிக்கு உங்கள் இனிய நண்பன்
ச. நூருல் அமீன்
என் இனிய தோழமையே,
இதயம் நீண்டு நிறைந்தது போல் என் வலை முழுக்க மனதால் நீன்டவரே. மிக்க நன்றியானேன். ‘கத்தாமா’ ஒரு மனதை அழுத்திய ஒரு பார்வை. வலிகள் மனதாய் இழுத்துத் தான் பிடித்துக் கொள்கின்றன. எனவே உருத்தியும் வலித்தும் பிடித்தும் இருக்கலாம். எனினும் உங்களுக்கெல்லாம் பிடித்ததில் தானே அது எழுத்தாகவும், கதையாகவும், படைப்பாகவும்; நான் படைப்பாளியாகவுமானேன்.
எனை படிப்பவர்கள் உங்களை போன்றோரே எனில்; நன்றிகளாய் நட்பாய் நிறைகிறேன்.. ச. நூருல் அமீன்!
Dear Vidhyasagar,
My Heartily Greetings for your Writings in Tamil.I am Appreciate your work for Tamil.
Have a Pleasant Day.
Best regards,
S.Manivannan
இனிய வித்யாசாகர்,
என் மனதார்ந்த வாழ்த்துக்கள் உங்களின் தமிழுக்கு. பெருமை கொள்கிறேன் உங்கள் தமிழ் பணியை எண்ணி.
மகிழ்வான மனது பூரிக்கும் நாட்களாகட்டும்..
உவகையுடன்..
S . மணிவண்ணன்.
மிக்க நன்றியானேன் மணி. எங்கேனும் சற்று அலுத்தோ அல்லது வீழ்த்தப் பட்டோ வீழும் மனதை கூட உங்களை போன்றோரின் வாழ்த்துக்கள் தூக்கி நிறுத்தி இன்னும் எழுதுவதற்கான நம்பிக்கையை எனக்குள் எப்போழுதிற்குமாய் தக்க வைத்துவிடுகிறது மணி…
மிக்க மகிழ்ந்தேன்!!
//நாளைய சந்ததி என்று சொல்லி சொல்லியே, நாளைக்கும் அவர்கள் அதையே பேசி அடுத்த சந்ததியை திருத்தும் நோக்கில் காலம் கடத்தி விடுவார்கள் போல். எனவே நாம் இந்த சந்ததியிலிருந்தே, நம்மிலிருந்தே நமக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வோம் என்பதே எண்ணம்//
அருமையாக சொன்னீர்கள் வித்யா.., உங்கள் வலைதளத்தின் நோக்கம் புரிகிறது. தமிழன் என்று வெறுமனே மார்தட்டிக் கொள்ளாமல், தழைத்தோங்க வழி செய்யச்சொல்லும், தமிழ் தாயின் தலை மகனாய் பார்கிறேன் உங்களை.
உங்களின் இந்த எழுத்து பக்தியை உங்கள் எழுத்துகள் மூலமாக தமிழ் சமூகத்தின் ரத்ததிற்குள் புகுத்துங்கள். நாளை என்பதை மறந்து; இன்றே செயல்படுவோம். உங்களோடு நாங்களும் பின் தொடர்கிறோம்..
அன்பு சரளாவிற்கு..,
ஒரு பிடி அன்பை கேட்டேன் உயிர் பெரும் அன்பை தருகிறீர்கள். இந்த ஈர்ப்பு; நம் மொழியையும், இனத்தின் வளமையையும், உலகின் பார்வையின் முழுக்க மனிதத்தையும் நிறைக்கும்; செழிப்பென எழுத்துக்களால் மலர்விக்கட்டும் சரளா.
மிக்க நன்றிமா..
அன்புடன் வித்யாசாகருக்கு, உங்கள் ஆக்கங்களில் ஒன்று எனது நிகழ்ச்சியில் இடம்பெற்றதன் பதிவினை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்காக நீங்கள் எழுதியிருந்த ஆக்கம் அதுஇன்னும் சில உங்கள் கவிதைகள் காட்சிகளுடன் இருக்கின்றன. அனுப்பி வைக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி. கீழ்க்காணும் லிங்கில் சென்று பார்வையிடவும்.
றேனுகா
அன்பு றேனுகாவிற்கு,
என்ன செய்தீர்கள் றேனுகா.., இத்தனை பெரிய உபகாரம் செய்திருக்கிறீர்களே. எழுதி விட்டேன் எங்ஙனம் தலை மேல் சுமப்பேன், உலகின் பார்வையில் கிடத்துவேன் என்றெல்லாம் தவிக்கும் தவிப்புக்களுக்கிடையே எழுதிக் கொண்டிருக்கும் என் நோக்கத்தை உலகின் பார்வைக்கு அழகாய் எடுத்து சொல்லி முன் வைத்திருக்கும் தங்களின் பேருதவிக்கு மிக்க நன்றியானேன். மிக்க நன்றியானேன்..
அன்புடன் வித்யாசாகருக்கு….
எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா.
என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக தமிழரளவில் ஒருசிலரின் சிந்தனையிலேனும் இருத்தப் பட்டிருக்கும் என்பதேயன்றி வேறில்லை.
அன்புடன் வித்யாசாகருக்கு….
உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.
நன்றி.
என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா
அன்புள்ள தம்பிக்கு, உங்களின் ஒவ்வொரு வரிகளிலும் ஓராயிரம் அர்த்தங்கள் இருக்கிறது. சோகத்தில் உறங்கும் உள்ளங்களை தட்டி எழுப்பும் விதத்தில், உணர்வுகளில் விழிப்புணர்வை கொண்டுவரும் சக்தி உங்கள் கரங்களின் நுனியில் இருப்பதை நான் உணர்கிறேன். உங்களின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் ஒருவரிகூட விடாமல் பார்த்துவிடவேண்டும் என்று என் உள்மனது உந்துகின்றது. உங்களின் எழுத்துக்கு அந்த அளவு வலிமை இருப்பதை நான் உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
பெரும் அன்பிற்குரிய சகோதரருக்கு,
//அன்புள்ள தம்பிக்கு// இந்த இரு வார்த்தைகள் போதுமே இதயம் முழுதும் நிறைந்து விட. எத்தனை எழுதி இருக்கிறீர்களே!!! எனக்காக சிரத்தை யெடுத்து, சிரமம் பாராமல் இப்படி ‘அத்தனை பேரும் பார்க்க எழுத எத்தனை உள்வாங்கியிருக்க வேண்டுமென்னை.
மிக்க நன்றிகளென்று கூறி; இதோடு முடித்துக் கொள்ளும் இடமல்ல இது, இந்த அன்பிற்கு பதில் அன்பொன்றே; உடன் இச் சமூகம் சூழ்ந்த எனக்கான கடமைகள் இன்னும் கடலளவு உள்ளதை மேலும் நினைவிலேற்றிக் கொள்ளும் தருனமெனக் கொள்கிறேன் சகோதரர்.
மிக்க….. வார்தையிலடங்கா நன்றிகளுக்கும் அன்பிற்குமானேன்..
இன்று தாங்கள் தந்த வலைதள முகவரியில் முதல்முறை தங்கள் கவிதைகளை படித்தின், ரசித்தான், மகிழ்ந்தேன்.
வாழ்க உங்கள் தமிழ்தொண்டு
அன்பு சகோதரருக்கு, தங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல. உங்களைபோன்றோரின் ரசனையில் தான் எங்களை போன்றோரின் வெற்றிகள் உருவாகிறது…
நீங்களெல்லாம் ரசிக்க ரசிக்க;நாங்களெல்லாம் வளர்கிறோமென்றே அர்த்தம்!
இனிய வித்யாசாகர் அவர்களுக்கு வணக்கம் !!
வித்யாசாகரின் எழுத்து பயணம் என்ற வலைப்பூவை பார்த்தேன். நன்றாக வடிவமைத்து உள்ளீர்கள். எளிய நடையிலும், அழகிய தமிழிலும், சிறப்பாக உள்ளது தளம் அருமை !!!
மென்மேலும் வளர உளமார வாழ்த்துகிறேன் !
இப்படிக்கு உங்கள் இனிய நண்பன்
அன்பிற்கினிய நண்பருக்கு மிக்க அன்பும் நன்றிகளும். உங்களை போன்றோரின் விமர்சனங்களால் ‘தெளிந்த நீரில் தெரியும் கல் போல எண்ணி மகிழ்கிறேன் எனை. எழுதுவதில் பட்டம் பெறுவதும் உலகின் பெருத்த இடத்தில் நிற்பதும் அல்ல நோக்கம், எழுத்தின் பயனில் உலகின் ஒரு ஓரமேனும் தொட்டு நிற்க எண்ணுவதே லட்சியம். அந்த லட்சியப் பாதைக்கு உங்களை போன்றோரின் வாழ்த்துக்களும், தெளிந்த விமர்சனங்களும் பலம் சேர்க்கின்றன.
உங்களின் தளமும் பார்த்தேன். குழந்தை வைத்திருப்பவர்கள் பார்க்க வேண்டிய தளம். மிக பயனுள்ள எழுத்துக்கள் தங்களுடையது. உங்களுக்கும் வாழ்த்துக்களும்.. நன்றியும்..
thanks for such a rapid response and reply . good night and bye sir
தங்களின் இந்த விரைவான, பொறுப்புமிக்க பதிலுக்கு நன்றி மற்றும் நள்ளிரவு வணக்கமும்!
நள்ளிரவு வணக்கமும் நாளைய மகிழ்ச்சி தினத்திற்கான வாழ்த்துக்களும் அபிற்கினிய நண்பரே.
நம் நட்புறவில், ஏதேனும் ஒரு தாத்தாவின் மூக்குக் கண்ணாடியையாவது, ஏதேனும் ஒரு பிள்ளையோ, பேரப் பிள்ளைகளோ மாற்றி புதிதாக வாங்கிக் கொடுக்கும் சந்தோஷம் பூக்கட்டும்!
“என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி” எனும் சிறுகதை படித்தேன்.
ஒரு சாமான்ய, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை நடப்புகளை யதார்த்தத்தை இயல்பாக கண்முன் நிறுத்தியிருக்கிரீர்
மிக நெகிழ்ச்சியை இருந்தது…
மனமார்ந்த வாழ்த்துகள்.. தொடருங்கள் தோழர்!
என்னன்பு தோழமைக்கு வணக்கம்,
ஆம்; மிகையாய் அன்பு நிறைந்த ஒரு உணர்வோடு யாரையுமே தவறாக காட்டிவிடக் கூடாதென எழுதிய கதை தான் அது தோழர். தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியாவேன்! தொடர்ந்து எழுத்தினால் இணைந்திருப்போம். நம் இணைப்பில் இணையம் தமிழால் நிறையட்டும்!
அன்புள்ள தோழருக்கு,
ஒரு மாதமாக உங்கள் கவிதை மற்றும் கட்டுரைகளை படித்து வருகிறேன். உங்கள் எழுத்தில் ஒரு வீரம் இருக்கிறது. யாருக்கும் பயப்படாமால் உங்கள் பேனா உண்மையை சொல்கிறது. உங்கள் எழுத்துக்கு என்று பக்கபலமாக இருப்பேன். தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்…
என்று நட்புடன்
விடுதலைவீரா
துபாய்
மிக அன்பிற்குரிய வீரா, உங்களின் மென்மையான பற்றுதனில் பெரும் மகிழ்வு கொள்கிறேன். மிக்க நன்றி தங்களின் தொடர் வருகைக்கு..
கண்டிப்பாக தவறானதையோ, இகழ்வானதையோ, அவசியமற்றதையோ, பிற மனிதம் மிக்கவர் வருந்துமாறோ, நீதி சொல்லாத.. பயனே இன்றி படிக்கும் ஒரு வரிகளாக, வெறும் வேற்று வார்த்தைகளாக எல்லாம் எழுத வேண்டாம் என்பதில் இயன்றவரை கவனத்தோடு இருக்கிறேன்.
ஒரு சிறு கவிதையோ நாவலோ, எழுதும் முன்னே இதை எழுத்வதால் யாருக்கு என்ன பலன் இருக்க முடியும் என்று சிந்திக்கிறேன். பிறர் நலன், நாளைய விடியல் நமக்கான சமுக அக்கறை சார்ந்த படைப்புகளை அமைப்பதால் தவறு செய்பவர் எவருக்குமே அஞ்சுவதில்லை.
நல்ல ஒரு வாசகனுக்கு மட்டும், நல்ல ஒரு மனிதருக்கு மட்டும், தவறான ஒரு கருத்தை என் சந்ததிக்கு கொடுத்து விடக் கூடாது என்பதில் மட்டும் அதிக கவனமும் எங்கு அதில் எடை குறைந்து போவோமோ என்பதற்கு மட்டுமாய் அஞ்சவும் செய்கிறேன்!
ஒரு மாத காலமாக படிப்பதாக சொன்னீர்கள். பெரும் மகிழ்வளிக்கிறது. உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவருக்கானதாக மட்டுமின்றி ஒருவரின் மானுட விழிப்பிற்காகவாவது இவ்வெழுத்துக்கள் பயன்படும் என்ற நம்பிக்கையிலும், உங்களை போன்றோரின் அன்பின் வாழ்த்துக்களாலும், எல்லோரும் கொடுத்திடும் ஊக்கத்தின் பலத்தாலும், சமுகம் அவ்வப்பொழுது என் சட்டையை பிடித்து ‘என் முகத்தில் ‘எனை போன்றோரின் முகத்தில் ‘காரி உமிழ்வதாலும் ‘இனிதே தொடர்கிறது என் பயணம்!
அருமை வாழ்த்துக்கள்….
பூப் பூவாய்.. பூக்கிறது எனக்கான அன்பு இதயங்களிங்கே
பதிலுக்கு மீண்டும் – நன்றி சொல்லும் முகமாய்
எழுத்தாகவே கரைந்துக் கொள்ள காலதவம் பூனுகிறேன்..
மிக்க நன்றி மதிசுதா…
வணக்கம்…
பெருமதிப்பிற்குரிய வீரியம் பொருந்திய எழுத்து விதைகளை பருவம் பார்த்து, எம் போன்ற கலர் நிலமும் களவிளைச்சல் காணும்படி விதைக்கும்… சொல்லேர் உழவன் வித்யாசாகருக்கு… என் பாராட்டுக்கள். இந்த இரவு உமை தாலாட்டட்டும்.
காலைச் சூரியக்கரம் கொண்டு ஆயிரம் அணைப்புகள் என்னை ஆரத் தழுவும் எனும் நம்பிக்கையில் உங்கள் தம்பி கார்த்திகேயன்.
குவைத்தில் இருந்து ஒரு குயவன் பூமிப் பானையை செய்கிறான்… எனும் போது என்னுள் ஆச்சரியம் அப்பிக் கொண்டது.
ஹஹஹ்ஹ … இது பானைக்கு மேல் பூசும் காவிநிறம். இது கருக்கும் போது அடிசோறு.. ஐந்தாறு பேருக்காவது ..பசியாற்றி இருக்கும்…நம்புகிறேன்.
ஈழத்தில் தமிழ் பொழுது முளைக்கும். இதோ மீண்டும் என் காலை வணக்கம். எனது வலைப்பூவுக்கு வருகை தர வேண்டுகிறேன்.
என் அன்பு தம்பிக்கு,
உதிக்கும் சூரியக் கதிர்களை போல் மனதில் விகாசிக்கும் என்ன அலைகளின் ஆயிரமாயிரம் கைகொண்டு அனைத்தவனாய் அண்ணன் எழுதுகிறேன். தங்கள் தளம் கண்டேன். மிக ரசனை மிக்க தளம். உதடுகளின் ஈரத்தில் பூத்த மலர்கள். காணுமிடமெல்லாம் காமம் கலக்காது காதலின் நளினமாடும் வார்த்தைகள். உதட்டை பற்றி மட்டுமே பேசினாலும் உள்ளத்தையும் காட்டுகிறது நிறைய கவிதைகள்.
//இன்னும் என்ன பயம்
மூடி வைத்திருக்கிறாய்
உன் உதடுகளை.
அவிழ்த்துவிடு …உன் வெட்கத்தையும்
என்னையும் // அருமை. நிறைய எழுதுங்கள். உங்களின் எண்ணம், அதாவது என்னை பற்றி என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்து சிறப்பு மிக்கது. எனினும், இந்த உதட்டு பயணத்தை விரைவில் ஒரு புத்தகமாக்கி நிறுத்திவிட்டு, நிறுத்த வில்லை என்றாலும் சற்று சமுகத்தின் மற்ற அங்கங்களின் அவலங்களையும் சேர்த்துக் கொள்வீர்களாக. புகழ் மாலை உங்களுக்கு காத்தே கிடக்கிறது. விரைவில் புத்தகம்வேளியிடுங்கள். மிக்க வாழ்த்துக்களோடு.. நிறைந்து நிற்கிறேன்!
அன்பின் வித்யாசாகர்,
உங்களின் ஒவ்வெரு படைப்புகளும் நம் தமிழர்களின் கிரீடமாக.. மகுடமாக… திகழ்கின்றது. உங்கள் ஆக்கங்களுக்கு எனது உளமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்..
இப்படிக்கு..,
உங்களின் புதிய வாசகன்
த.ரூபன்
உயிர்மெச்சிப் போனேன் ரூபன். என் தமிழருக்கு என் எழுத்து பயன்படுமென்றாலே போதும்; மனிதனாய் பிறந்ததன் பலன் கொள்வேன்!
மிக்க அன்பும் வாழ்த்தும் உங்களுக்கும்!
வணக்கம் வித்யா சாகர் .எனும் புனை பெயர் கொண்ட உங்களுக்கு ……….
.தாங்கள் ஈழம் தந்த திருமகன் என் அறிவதில் பெருமைபடுகிறேன். மாவீரருக்கான கவி ஒன்று என் யாழ் இணையம் எனும் தளத்தில் இன்று கண்டேன்.அதன்பின் உங்கள் தளம் நோக்கி வந்து இந்த கலைஞன் க்குள் இருக்கும் பிரகாசத்தை கண்டு கொண்டேன். நான் ஒரு சிறு துளி வலைத் தள உலகில் .புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கிறேன் . என் ஓய்வு நேரம் என்னை வலைத்தளம் நோக்கி ஈர்த்தது வாசிகக் மிகவும் பிடிக்கும். கவிபுலமை உள்ள உங்களை கண்டு கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி வார்த்தையாலும் தோற்றத்தாலும் வசீகரிக்கும் உங்கள் திறமை , புலமை மிளிரவேண்டும்.வித்யாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .உரித்தாகுக.
நட்புடன் நிலாமதி
நிலாமதிக்கு அன்பு வணக்கமும் மிக்க நன்றியும் உரித்தாகட்டும்..
சமுக அவலம் கண்டு கண்மூடிச் செல்ல இயலாமையே எழுத்தின் மிளிர்ப்போ அல்லது சிலிர்க்கச் செய்வதெல்லாமோ இருக்கலாம். மனிதன் துளிர்க்கும் அத்தனை இடமும் மனிதம் அழியும் வலிகளாகவே இருக்க எழுதுகோல் கொண்டு கிருக்கவேணும் செய்திடாத நம் கைகள் வேறெதற்குத் தான் படைக்கப் பட்டனவோ எனும் ஒரு துடிப்பு தாங்கிய பயணமிது நிலாமதி.
இப்பயணத்தின் நடுவே உங்களை போன்றோரின் நல்ல மனமும் அன்புமே எம் பலமாய் எமை இன்னும் சீரிய வழி நோக்கி ஆட்படுத்தப் பணிக்கிறது.
அதற்கான நன்றியும் உங்களுக்குமான வாழ்த்துக்களும் நிறையட்டும் உறவே..
வித்யாசாகர்
வித்யாசாகர். சாகர் என்பது கடல். கடல் போல் பொங்கட்டும் உங்கள் அழகு கவிதைகள்..
ஒரு கவிதையின் வாழ்த்தாக எடுத்துக் கொள்கிறேன் தங்களின் அன்பான வாழ்த்தினை. மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!!
கவிதைகள் அனைத்தும் நன்றாக உள்ளது உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்
நீங்களெல்லாம் வந்துசெல்லும் வார்த்தைகளின் நிறைவில் மீண்டும் மீண்டும் முளைக்கிறது கவிதை. வந்து வாழ்த்தியமைக்கு நன்றி..
வித்யாசாகரின் எழுத்து பயணம் என்ற வலைப்பூவை பார்த்தேன். நன்றாக வடிவமைத்து உள்ளீர்கள்.
குழந்தை விழுந்து விழுந்து எழுந்து பின் சரியாக நடக்க முயன்றதைப் போல நானே தவறி தவறி சரிசெய்துக் கொண்ட தளமிது. உறவுகளின் வருகைகள் ஒன்றுசேர்ந்து என் உழைப்பின் நிறத்தை எல்லோருக்கும் பிடித்த வண்ணங்களாக்கி சிறப்பாகத் தந்துள்ளது போல்.. தங்களின் வருகைக்கும் நன்றி!!
கவித் தம்பி..! வணக்கம்.
கண்டுபல நாளானாலும்
கவிதையும் கருத்தும்
காண்கிறேன் பொழுதும்!
எழுத்தைத் தவமாய்
இயற்றுவது எப்படி
என்பதைக் கற்க…
எல்லாரும் அணுக வேண்டிய
இனிய முகவரி தங்களுடையது
என்பதை அறிவேன் நான்!
என்
கங்கை மணிமாறன் .வேர்ட் பிரஸ்.காம்
கண்டு பதிலிடுக. நன்றி
தீ பொறி பறக்கும் கனல் கொண்ட தமிழில்
வாழ்வின் வசந்தம் பரப்பப் பேசும் – சந்தக் கவி
எம் சொந்தக் கவி
ஒல்லிக் கவிஞனாய் இருந்தாலும் – தன்
வெல்லும் வார்த்தைகளை எக்காலத்தையும் தாங்கும் கவி
நான் பார்த்து ரசித்த கவி
பேசினால் இவர் போல் பேசவேண்டும் என்று
முதன்முதலாய் நான் கண்டு வியந்த கவி
இத்தனை அருந்தும் அன்பிலும் பண்பிலும்
வானம் கடந்து நிற்கும் என்றைக்குமான எங்களின்
குவைத் மக்களின் மனமெலாம் நிறைந்த –
பெரும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய
ஐயா அவர்களுக்கு இணையத்தின் பெரு – வரவேற்பும்
மிக்க அன்பும் வாழ்த்துக்களும் வணக்கமும் நிறையட்டும்!
தங்களின் இந்த வலைப் பூவைப் பற்றி வேறென்ன சொல்ல ஐயா, இரண்டு
சொல்லலாம். ஒன்று, இப்படி தன்னை அறிமுகப் படுத்தவே அத்தனை தன் மீது அசரா உறுதியும், நம்பிக்கையும் – அவசியப் பட்டால் நல்லவைக்கே சமுகம் எரிக்கும் தைரியமும் வேண்டும்.
இரண்டு; நீங்கள் சொன்ன அத்தனைக்கும், உங்களின் இத்தனை அழுத்தமான நம்பிக்கைக்கும் மிக முழு தகுதியானவர் நீங்கள்.
மிக்க வாழ்த்துக்களும், இன்னும் பல சாதனை படைக்க இறை அருளும் நிறையட்டும் ஐயா..
வீட்டில் சகோதரிக்கும், குழந்தைகளுக்கும் வணக்கத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள். அவர்கள் மிக நன்றாக வருவார்கள் என்று எனக்கு அழுத்தமான நம்பிக்கை உண்டு!
பேரன்புடன்…
வித்யாசாகர்
கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்..
வணக்கம் சகோதரி, நலமா? வெகுநாட்களாக இவ்விடம் காணவில்லையே? எங்கிருப்பினும் நலமாகவும், வளம் நிறைந்தும் இருக்க வேண்டுதல்கள் நிறையும். அன்பும் வாழ்த்தும்..
பலரும் வலம்வரும வலைப்பூவில்-நானும்
பங்கு பெறவெனும் களிப்பாலே
மலரும் நினைவால் புலவர்குரல்-இன்று
மலர்ந்ததே சாகர் புதியவரல்
வளர நீங்கள் வாழ்த் துங்கள்-கவிதை
வடித்து மகிழ்வில் ஆழத்துங்கள்
உளமே மகிழ சாற்று கிறேன்-கவிதை
ஊற்றென உம்மை போற்றுகிறேன்!!
புலவர் சா இராமானுசம்
புலவர்குரல் சென்னை 24
மிக்க நன்றி ஐயா. உங்களைப் போன்றோரின் வருகை எனக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. அந்த தமிழே வந்து எனை வாழ்த்திவிட்டதோர் நெகிழ்வு!!
நன்றி மறப்பது நன்றல்ல-எனவே
நன்றியை உமக்கு நான்சொல்ல
ஒன்றின கவிதை உள்ளங்கள்-என்ற
உணர்வை என்றும் கொள்ளுங்கள்!!
புலவர் சா இராமாநுசம்
(http://pulavarkural.blogspot.com/)
குறிப்பு-இரண்டு நாட்களாக தமிழ்மணம் இதழில் என் பெயரில்
என கவிதைகள் வருகின்றன படித்து கருத்தறிய
எழத வேண்டுகிறேன்
வணக்கம் ஐயா, நிச்சயமாக எழுத்தால் தமிழால் ஒன்றியே இருக்கிறோம். தங்களின் மடலுக்கு பதிலெழுதும் துரிதமல்ல; வார்த்தைகளுக்கான விடுபட்ட மதிப்பைச் சேர்க்கும் பற்று. மிக நட்பும் மதிப்பும்..
அன்பு நண்பரே!
தங்களின் தளத்தை இன்றுதான் பாரிவையிடும் வேளை கிடைத்தது. மிகவும் சந்தோசம்!
தங்களின் எழுத்து பணி மேலும் மேலும் சிறக்கவேண்டும் என்று மனதார வாழ்த்துக்கிறேன்!
தங்களின் வருகை எமை பெருமை கொள்ள செய்யட்டும். வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்!!
நல்ல கவிதைகளுக்கு காலம் பரிசு கொடுக்கும். உம கவிதை மழையில் எம் தமிழ் சமூகம் நனையட்டும்!!
குடிக்கத் தண்ணீர் இல்லை அதனால்தான்
நம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு
எம் தமிழீழ மக்களைப் பற்றி எண்ணி
கண்ணீர்விட முடியவில்லையோ???!!
திரையரங்கில் இருக்கும் ஆர்வம்; ஏன்
எம் தமிழ் சமூகத்தின் மேல் வரவில்லை தமிழர்களே???
ஈழம் வெல்லும்; அதை காலம் சொல்லும்!!
நாகராஜன்
தங்களின் வார்த்தைகளுக்கான மனசு விசாலமாக இருந்தும் அதன் உணர்வுகளை பதியாமல் விடுபட்டுள்ளது. நிச்சயம் தமிழருக்கான விடியலுண்டு. வெல்வோம். தங்களின் வாழ்த்திற்கு நரியும் வணக்கமும்!!
HAI SIR
KEEP ON WRITING … ALL THE BEST SIR……… THANKS TO THE ALMIGHTY WHO GAVE A WONDERFUL GIFT (VIDYASAGAR) TO THIS WORLD ……. HAVE A NICE TIME AND DAY SIR…………..
HAI SIR
KEEP ON WRITING … ALL THE BEST SIR……… THANKS TO THE ALMIGHTY WHO GAVE A WONDERFUL GIFT (VIDYASAGAR) TO THIS WORLD ……. HAVE A NICE TIME AND DAY SIR………….. waiting for ur writing…
உங்களின் பெரும்நம்பிக்கைக்கு என்றுமே பாத்திரமாக இருக்கவேண்டிய கட்டாயத்தில் கடவுளின் அருள் கொண்டு இயன்றதை செய்ய முயல்கிறேன் தீபிகா; என் படைப்புக்கள் என்றுமே உங்களுக்கானதாக இருக்க உங்களைப் போன்றோரே காரணமெனும் நன்றியோடு!
அன்பிற்க்குரிய கவிஞர், எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களே, வணக்கம்.
தாங்கள் எழுதிய சில நூல்களை நான் படிக்க நல்ல ஒரு வாய்ப்பினை இறைவன் எனக்கு அருளியது என் பாக்கியமாக கருதுகின்றேன். இறைவனுக்கு அதற்கான நன்றி.
“சாமி வணக்கமுங்க” புத்தகம் பற்றி:
அருமை அருமை மிக அருமை!
புத்தகம் கையில் எடுத்து படித்து முடித்துதான் கிழே வைத்தேன். உங்கள் உரையாடல் போன்று கருத்து தெரிவிக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் கருத்து சொல்லும் விதம் வித்தியசமாகவும், ஏற்று சிந்திக்க சுலபமாகவும் அமைந்த’ கதை சொல்லும் முறை நன்று!
பக்கம் 32 கவிதை மிக மிக அருமை!
பக்கம் 57, 58 கடவுளை காண்பிக்கும் விதம் பிரமாதம்!
பக்கம் 61,62 நம்பிக்கை மீது நம்பிக்கை வரவைக்கும் வார்தைகள் அற்புதம்!
பக்கம் 74 குழம்பனும் நல்ல குழம்பனும்…குழம்ம்பி குழம்பி யோசிக்கணும், தேடனும் ஆழ்ந்து தேடனும்’’ என்று சொல்லிய தெளிவு பிறபிக்கும் வரிகள் பிடித்திருக்கு
மொத்ததில் குடும்பம் , சமுதாயம் , நாடு என்று கடவுளை உணர.. இந்த கால கட்டதுக்கு ஏற்ப சொல்லியுள்ளீர்கள்.
“எத்தனையோ பொய்கள்” புத்தகம் பற்றி:
படித்தேன், சிந்தித்தேன்.
பக்கம் 59,60.61 பட்டாம்பூச்சி கவிதை மிகவும் பிடித்து இருந்தது.
மிகவும் எளிய முறையில், மிக நல்ல ஆழ கருத்துக்களோடு சிறு சிறு கவிதைகள் இருந்தன. படிக்கும் போது அக்கவிதைகள் மேலான ஈர்ப்பும், நன்கு ரசிக்கும் தன்மையையும் ஆத்மார்த்தமாக ஏற்படுகிறது.
“வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை” புத்தகம் பற்றி:
எவ்வளவு அருமையான தலைப்பு.
அத் தலைப்பிற்கேற்ப ‘நம்மை சுற்றி நிகழும் தருணங்கள் அனைத்தும் அங்கே பதிவாகியிருப்பதைக் கண்டேன். உண்மையை உணர்த்தும் நிறைய அருமையான வரிகளைக் கண்டேன்.
எல்லா கோணங்களிலும் பார்த்து, மனம் கொள்ளைகொள்ளும்
அளவிற்கு மிக நேர்த்தியாக அழகாக நிறைய கவிதையைச் சொல்லி இருக்கீங்க.
என்னக்கு பிடித்த கவிதை :
பக்கம் 29: அதொரு காலம்
பக்கம் 35 : காதலின் கால நகர்தல்
பக்கம் 47: உன் கால் கொலுசு சப்தமிட
பக்கம் 49: குருட்டு ‘பெண்ணின் கருப்பு வாழ்கை …மிகவும் அருமை .
பக்கம் 54: பாவமமிந்த பைத்தியக்காரன்…. மிக நன்றாக இருந்தது.
கடைசி கவிதை நேஞ்சுக்குளே நேஞ்சுக்குளே …கண்களைள் கலங்கச் செய்தது. மொத்தத்தில் இப்புத்தகத்தின் மொத்தக் கவிதைகளும் மிக நன்று!!!
“பிரிவுக்கு பின்” புத்தகம் பற்றி:
அருமை! அருமை! அருமை!
காதலின் ஏக்கம்…, மனைவியின் வலி, கணவனின் அன்பு, உறவின் பரிவு, சுற்றத்தார் அக்கறை என’ எல்லாமே மனதை ஒரு கணம் கலங்க வைத்தது. மிகவும் அருமையான படைப்பு!
வேறென்னவென்று சொல்வது…, வார்தைகள் தெரிய வில்லை எனக்கு, அவ்வளவு அருமை!
“வாயிருந்தும் ஊமை நான்” (சிறுகதை) மற்றும் “கனவுத் தொட்டில்” நாவல் பற்றி:
எண்ணற்ற.., சமுதாயம் சார்ந்த சாடல்களும் பதிவுமாகவுமே இவ்விரு புத்தகங்களும் எனக்குப் பட்டது. அத்தனைப் பிரமாதமாக கதையை கொண்டு செல்லும் படைப்புக்களாகவே இரண்டும் இருந்தன.
நம்மை சீரழிக்க போவதாக அச்சுறுத்தும் சக்திகளை நம்மால் வேரறுக்க முடியும்” என்பதனை எவ்வளவு அழகாக உங்கள் கதையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
“அவளின்றி இறந்தேன் என்று அர்தம் கொள்” புத்தகம் பற்றி:
ஆழமான காதலின் பரவச வெளிப்பாடு எனலாம். அவ்வளவு உணர்ந்து எழுதி உள்ளீர்கள்.. காதலைப் பற்றி. மிக நன்று.
காதலின் அழகையும், இனிமையும், ஏக்கத்தையும், வலியையும்,
நேர்த்தியையும் ஓர் அளவீடு கொள்ளத் தக்க வெளிப்பாடாக, உணர்ச்சிப் புர்வமாக வெளிபடுத்தி இருகிறிர்கள்.
உங்கள் காதல் கவிதை எல்லாமே புதுமையும் அருமையும்…
“வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு” புத்தகம் பற்றி:
மிகவும் அர்த்தமுள்ள’ வாழிவின் பதிவுகள். நியாயமான உண்மையை மிக சுவாரஸ்யமாக, கவிநயத்தோடு படைத்துள்ளீர்கள். உங்கள் ஆழமான, தெளிவான ஞானம் இவ்வாறான படைப்புக்களில் வெளிப்படுகிறது.
முழுக்க முழுக்க ஒரு சமூகப் பற்று கொண்டவர் படைப்பிது என்பதை’ கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சாட்சியாய் நின்றுச் சொல்கிறது .
கடவுள் : பார்க்கும் விதத்தில் தெரியும் கண்ணாடி! (பக்கம் 13 )
குடும்பம் : மனம் வீசும், மலர் போன்ற, உறவுகளின் முட்கள் மீது, வண்ணங்களோடு ஜொலிக்கும் மென்மையான சேலை. (பக்கம்17 )
வாழ்க்கை : மனிதனின் பக்குவதிற்கேற்ப மாறுப்பட்ட சித்திரம்.
தமிழ்பேசு மனமே தமிழ் பேசு: (பக்கம் 51) அருமையிலும் அருமை!
“துடித்து எழுந்து புஜங்கள் உடைத்து,
வீரத்தோள் தட்டி
உலகையே தமிழுக்கு சொந்தமிடு” என உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி தமிழுக்கென பேசவைக்கும் உங்களின் எழுத்துக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் , வாழ்துக்களும், நன்றிகளையும், மனம் நிறைந்த அன்பினையும் இங்கே சமப்பிக்கின்றேன்.
அன்புடன்,
ஆசிரியை உமா தேவி
மலேசியா.
ஒரு மாணவன் படித்துப் பெருமை கொள்வான் எனில், தன்னை தன் தவறிலிருந்து சரிசெய்து திருத்திக் கொள்வானெனில்’ நான் ஜெயித்துவிட்டதாய் அர்த்தம் என்று கூறியுள்ளேன்.
இங்கே ஆசிரியை ஒருவரின் வாழ்த்திற்கு வாக்கப்பட்ட என் எழுத்தினை தந்த இறைசக்திக்கே நன்றிகள் அனைத்தும்!!
அதையும் கடந்து, படித்ததோடு நின்று விடாமல், சிரமம் பாராது, இத்தனை விரிவான விளக்கமான கருத்துரை அளித்த தங்களின் மனநிலைக்கும், நல்லுணர்விற்கும் என் என்னிலடங்கா நன்றியுணர்வும் வணக்கங்களும் உரித்தாகட்டும் உமா..
வண்டமிழ் வந்தனங்கள், உங்கள் நலம் செழிக்க எனது பிரா(ர்)த்தனை தூவல்கள். தங்களின் தளத்தை இன்று பாரிவையிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் சந்தோசம்!
தங்களின் எழுத்து பணி மேலும் மேலும் சிறக்கவேண்டும் என்று மனதார வாழ்த்துக்கிறேன்!இறைவனை பிராத்திக்கின்றேன் ..!!தொடந்து விடாது உங்கள் ஆக்கங்களை மனம் விரும்பி பார்ப்பேன் .
தங்களின் வருகை என் நிறைவில் அடங்கும். மிக்க மகிழ்ந்தேன் தங்களின் வருகையும் வாழ்த்தினையும் கண்டு, காட்சியின் நெடுகளில் சிந்தியுள்ள கண்ணீர்த்துளிகளுக்கான காரணங்களை தேடி அலைபவனுக்கு உங்கள் வார்த்தையும் அன்பும் பலம சேர்க்கிறது. தொடர்ந்து வாசித்து கருத்தளியுங்கள். தமிழின் தூயவள் பேசும் வார்தைக்கென காதுகொடுத்துக் காத்திருக்கும் என் படைப்புக்களும்…
சகோதரர் வித்யாசாகர்….அவர்களுக்கு….
நா எழவில்லை…..எழுதக் கையும் வரவில்லை….இரண்டையும் மீறி
ஆனந்தக் கண்ணீர் வருகிறது….ஏழு கடலையும் ஒருங்கிணைத்த
எழுத்து சங்கமம்….உங்கள் எழுத்துக் கடல். எதை சொல்ல…எதை விட..
படித்து முடிப்பதற்குள் என் வாழ்வே முடிந்து விடும் போல…..எத்தனை
எண்ணங்கள்…! உங்கள் இதயக் கோட்டை காவலின்றி…ஊருக்காகவே..
உற்சாகமாக உழைத்திருக்கிறது…!அதிகம் எழுத்துக்குப் பரிச்சயப் படாதவள்
நான்…..கண்ணதாசனின்…அர்த்தமுள்ள இந்து மதம்..படித்து வியந்திருக்கிறேன்..
பாலகுமாரனின்…எழுத்தில்…மகிழ்ந்திருக்கிறேன்….
ஆனால்..இன்றோ…உங்கள் எழுத்தைப் படிக்கும் போது…ஒரு ஆழம்…
இதயத்தை ஊடுருவும் தன்மை..ஒவ்வொரு வரியிலும் உண்மை..ஆணித்தரம்..
தமிழ் உங்களுக்கு வசப் பட்டது போல் எண்ணத் தோன்றுகிறது.உங்களது
எழுத்துப் பணி இது சாதாரணம் இல்லை…..பொழுது போக்கும் இல்லை…
புகழுக்காகவும் இல்லை…..இது ஒரு வேள்வி…..யாகம்….உமது ஆன்மாவின்
தீராத தாகம்….!அணையாத அற்புதச் சுடர். உலகெங்கும் ஒளி தரக்கூடிய
எழுத்துச் சூரியன்….அஸ்தமனமே இல்லாத கதிரவன்….! நாளை…விடியல்…
என்பதைத் தாண்டிய சாசனம்….!உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளும்…..
இன்னும் ஞானமும்….வர்ஷிணியாக……வழங்க எல்லோருடனும் கூட
நானும் நித்தம் வேண்டிக் கொள்கிறேன்.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
—
அன்புச் சகோதரிக்கு வணக்கம்,
வானில் நீந்த ஆசைப்பட்டு தெருவில் நடக்கும் குழந்தைக்கு நட்சத்திரங்களை பரிசளித்து விளையாடச் செல் என்றதுபோலுள்ளது’ இத்தகைய பெரிய வார்த்தைகள் கேட்கையில். எழுதாத நாட்களை எண்ணி மட்டுமே கவலைப் படுமெனக்கு எழுதிக் குவிந்தவைப் பற்றி அத்தனைப் பெரிய ஆசுவாசம் இல்லை. என்றேனும் என் மக்கள் கண்டுகொள்வார்கள். என் உறவுகளால் என் எழுத்துக்களும் கண்டுக் கொள்ளப்படும் எனும் நம்பிக்கை ஒன்றே எனை இயக்கிக் கொண்டுள்ளதாய் எண்ணினாலும், எவர பொருட்டும் வருந்தாதா ஆத்மா ஒன்று உள்நின்று எழுத்தாகவே கரைந்துக் கொண்டுள்ளதை படைத்தவனொருவனே முழுதாய் அறிந்திருக்கக் கூடும் சகோதரி. தங்களின் அன்பான வார்த்தைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் வணக்கமும்… பெருமதிப்பும்..
வித்யாசாகர்
வணக்கம் உங்கள் படைப்புக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..
யாரும் கேட்காது பெய்யும் மழைப்போல பொய்யாக் கவியருளும் அவனுக்கே புகழனைத்தும் என்றாலும் அதன் பின் தொடரும் முயற்சிக்கும் உழைப்பிற்கும் உதவியாய் நின்று உந்துசக்தியாய் நிற்கும் உங்களைப் போன்றோருக்கே நன்றிகள் அனைத்தும்.. உரித்தாகும் திரு.முனிராஜ்!
superb intro.keep it up.all the best for your bright future
நன்றி சுகா. வானத்துக் குடைதனில் அகம் புறம் அடங்க; எழுத்தாக கரையுமோர் புள்ளி அளவேனும் இடம் எனக்காகவும் இருக்கும். அதை எனைப் படிப்போருக்காய் படைத்துக் கொள்வதில் பெருமிதம் எய்துகிறேன்!
என்னைப் பற்றி ஒரு கவிதை சொல்லுங்க வித்யா..
நேரில் கண்டாலே தட்டுத் தடுமாறி வரைபவன்
எனை பார்க்காமால் வரை என்றால் என்செய்வேன்?
இன்னொரு சுழற்சியில் சந்திப்பேன் எனில் அங்கே
கவிதையாய் களம் மாறிப் போவேன்; அதுவரை மன்னிப்பீராக!!
என்னெவென்று சொல்வது..
தங்களிடம் தமிழ் தஞ்சமடைந்துள்ளதா???
இல்லை தாங்கள் தமிழுக்கென்றே தஞ்சமடைந்து விட்டீரா…
அருமை..தங்கள் எழுத்துப்பணி. மூலம் தமிழின் சிறப்புகளை இன்னும் வெளிக்கொணர எனது வாழ்த்துகள்….
தமிழிடம் தஞ்சமாகிப் போனேன் என்று சொல்வதில் பெருமைகொண்டுப் போவேன்!
இனிது இனிது ஏதேதோ இனிது; அதைச் சொல்லும் தமிழ் அதனனைத்தினும் இனிது.. என்பேன்!!
தங்களின் வாழ்த்து எனை மானசீகமாய் மெச்சுகிறது. பலம் கொள்ளச் செய்கிறது. நன்றியும் வணக்கமும்..
Dear my brother Mr.Vidhayasagar…
recently i have studied ur poem entitled on Pirivikku Pin…. a soulful…hearttouched peace of work…my best wishes tour literary journey….many poems in this work really touched my heart..
தங்களின் அன்பிற்கும் மெச்சுதலிற்கும் பெருநன்றி உரித்தாகும். தமிழ் எமது அடையாளம், மொழி நமது உயிர்க்காற்று, எழுத்தென்பது அதன் வாழ்தல். வாழ்தலில் வல்லமை பொருந்தியதொரு சமுதாயம் படைப்போம்.. எழுத்தாலும் உணர்வாலும் இணைந்திருப்போம்.. வாழ்க தோழர்!!
thanks for ur reply bro
unga vaithakal anaithume super anna
மிக்க நன்றியும் நிறைய அன்பும்மா..
தயவுசெய்து சூப்பர்னு சொல்லாதீங்கம்மா, நம்ம தமிழ்மொழியை நாமதாம்மா பிறமொழி கலக்காம பேசணும். நல்லாருக்குன்னு சொல்லுங்க. ஆகா ஓகோன்னு பாராட்டுங்க. நல்லாயில்லைன்னா கூடத் திட்டுங்க. ஆனால் தமிழில் திட்டுங்கள், அது உடனே உணர்வைச் சுடும்.. தன்னை திருத்திக்கொள்ள எண்ணம் விழையும்..
நன்றிமா…
நானோ எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் .. தகவல் தரவும்
வணக்கம் ப்ரியா..
https://vithyasagar.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81/