வாழ்க்கையை வாழ காசு தேவை, படுக்கை வாங்கவும் காசு தேவை, உணவு உண்ணவும் காசு தேவை, பிறருக்கு உதவவும் காசு தேவை, புத்தகம் அச்சிடவும் காசு தேவை. என்ன தான் உழைத்து உறக்கத்தையும் வியர்வையையும் எழுத்தாக்கினாலும்; அவைகளை புத்தகமாக்க பிறரின் உதவியும் தேவை படுகிறது உறவுகளே.
பார்த்தியா, முதலில் படியுங்கள் என்றான், இப்போது பணம் கொடு என்கிறானென்று எண்ணி விடாதீர்கள். படிப்பது உங்களோடு போகும்; புத்தகம் பிறரையும் படிக்க வைக்கும். படிப்பு பிறருக்கு ‘படிப்பினை கொண்டு’ எவ்வினையையும் செய்விக்கும். எனவே புத்தகங்கள் வாங்குங்கள் என வற்புறுத்த இந்த புத்தகத்தை திறக்கவில்லை. நிறைய பேர் நம் புத்தகங்களை பெற ஆர்வம் காட்டி மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். அவர்களுக்கு நம் புத்தகம் பற்றிய விவரத்தை அறிவிக்கவும், படித்துவிட்டவர்கள் புத்தகத்தை பற்றி ஏதேனும் கருத்து தெரிவிக்க எண்ணினால், அதை இங்கு (அப்புத்தகங்களின் கீழ்) தெரிவிக்கவுமே இப்பக்கம் திறக்கப் பட்டுள்ளது.
பொதுவாக, நம் புத்தகங்களின் மூலம் வரும் வருமானத்தில் பாதி அடுத்த புத்தகம் அச்சிடுவதற்கும், மீதி, எனை எழுதவைத்த ‘சமுகத்தின் இயலாமைக்கு ‘தன் அணிலளவு பங்கினையாவது கொடுத்து உதவவுமே ‘பயன்படுத்த படுமென்று ஆரம்பத்தில் சொன்னதை, இன்று வரை செய்து வருகிறோம். உண்மையை சொல்வதென்றால், பாதியளவு வருமானம் கூட வராமல் இரண்டையுமே இன்று வரை செய்து வருகிறோம். படிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் ‘அங்கிகாரம் கடந்தும், ஆகும் செலவுகளை கடந்தும், படைப்புகளின் பயணமும் தொடர்கிறது. இனியும், உங்களின் ஆதரவும், இறைவனுமே துணை.
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
தற்காலிகமாக கிடைத்த, பெருமைசெய்த ஐந்து விருதுகள் அதற்கான தன் மதிப்பினை கூடவே கொண்டு வந்ததா? அல்லது, காலம் இப்படி தான் வருத்தத்திற்குப் பின் மகிழ்வினையே தருமா எனும் வியப்பான வாழ்பனுபவத்தோடு இன்னொரு மகிழ்வினையும் உங்களோடு பகிர்வதில் மகிழ்கிறேன் உறவுகளே!!
என் படைப்புக்களில் எண்ணூற்றி ஐம்பது புத்தகங்களை மலேசியாவில் உள்ள ஐம்பது நூலகங்களுக்கு தருவதற்காக பணம் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம். இது தொடர்ந்து மலேசியாவின் மொத்த கடைகளிடமும் தமிழரிடமும் நம் படைப்புக்களை கொண்டு செல்ல இருப்பதாகவும் பூரிப்பு செய்தி தெரிவித்துள்ளது.
தற்போதைக்கு, மாணவர்களுக்கு பயன்படுவது போல ஊக்கம் தரும் சிந்தனை தூண்டும் சிறுகதை மற்றும் குறுநாவல்கள் நிறைந்த தொகுப்புகளாகிய திறக்கப் பட்ட கதவு, சாமி வணக்கமுங்க, வாயிருந்தும் ஊமை நான் மற்றும் கவிதை தொகுப்புகளாகிய வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு, இதோ என் வீரமுழக்கம், எத்தனையோ பொய்கள், வலிக்கும் சொர்கமிந்த வாழ்க்கை மற்றும் பிற நூலகங்களுக்கு என பிரிவுக்குப் பின் கனவு தொட்டில் (நாவல்) மொத்தம் 850 புத்தகங்களை பெற்று மறைமுகமாக என் படைப்புக்களின் விற்பனைக்கு எனபதை விட என் புதிய புத்தகங்களுக்கான வழியை வகுத்தமைக்கு மலேசியாவின் “ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம் சார்ந்த நிர்வாகிகளுக்கு” என் மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
பிரசுரங்களுக்கு அனுப்ப வேண்டிய, செலவிட்ட பணம்தான் இதுவும், என்றாலும் அதை என் கையில் என் படைப்புக்களுக்காக என்று வாங்குகையில் என்னவோ நான் என் இத்தனை வருடம் எழுதி உழைத்த உழைப்பிற்கு முதல்மாத சம்பளம் பெறுவது போல் உணர்ந்தேன்!
பொதுவாக படைப்புக்களுக்கு குறைந்த விலையே வைக்கிறோம். பதிப்பகத்தாரிடம் வைக்கும் வேண்டுதலில் இதுவும் முக்கியமான ஒன்று. என்றாலும், என் படைப்புக்களின் முதலில் குறிப்பிட்டுள்ளவை போல, புத்தக வருமானத்தின் முதல் பாதி என் படைப்புக்களை வாங்கும் சமூகத்தின் ஏழ்மையை என்னளவு அகற்றவும், மறுபாதி புதிய ஆக்கங்களை கொண்டுவரவுமே இதுவரை பயன் படுத்தப் படுகிறது. உண்மையில் பார்க்க போனால், வராமலே கொடுத்தவை தான் அதிகம்.
நான்காயிரம் புத்தகமெல்லாம் விற்றதாய் சொல்கிறார்கள். வெறும் சொல்கிறார்கள் அவ்வளவு தான். முதலாய், முதலாய் இப்போது தான் என் படைப்புக்களுக்கென மொத்தமாய் கொடுக்கப் பட்டுள்ளது. எனினும், இதில் பிரசுரங்களுக்கான அச்சு கோர்ப்பு செலவுத்தொகை போக, மீதியுள்ள எனக்கான பணத்தில் பாதி ஈழத்தில் மழைவெள்ளத்தால் துன்புறும் உறவுகளின் நிவாரண நிதிக்கும், மீதி புதிய புத்தகங்களின் அச்சு செலவிற்கும் கொடுக்கப் படுகிறது. (ஈழத்து உறவுகளுக்கான உதவி வழங்கிய பின் அதை அவர்கள் பெற்றுக் கொண்ட ரசீது இங்கே மறுமொழி இடுமிடத்தில் நகல் செய்து பதியப் படும்)
வாழ்வின்; நல்லவைக்கென சொட்டிய ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும்; பிறகு கிடைக்க இருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி, இரட்டிப்பு மதிப்பு, இரட்டிப்பு வெற்றிக்கான மூலதனமின்றி, வேறில்லை; என்பதனை, வாழ்வின் நிறைய நிலைகளில் அனுபவமாய் உணர்ந்து வருகிறேன். அந்த உணர்தலின் விளிம்பில் சில சொட்டுக் கண்ணீர் துளிகள் மீண்டும் நன்றியாய் இறைவனை நோக்கியும் சிந்துகின்றன!!
எப்பொழுதும் என் எழுத்திற்கு பலமாய் இருக்கும் எல்லோருக்குமான நன்றிகளோடு..
வித்யாசாகர்
LikeLike
அப்பு வாழ்த்துக்கள் வித்யாசாகர் !
LikeLike
அன்பு வாழ்த்துக்கள் வித்யாசாகர் !
LikeLike
உங்கள் படைப்புக்கு இந்த நூலகங்கல் போதாது கவிங்கரே . உங்கள் புகழ் உலகில் வாழும் அணைத்து தமிழர்களிடம் சென்றடைய வாழ்த்துக்கள்!!
சந்திரா முனியாண்டி
LikeLike
விருதுகளும் வாழ்த்தும், நம் எழுத்திற்கு கிடைக்கும் அங்கீகாரம் தானே தவிர; நம்மை நிறம் மாற்றும் சாவியல்ல’ என்பதை திண்ணமாய் கொண்டுள்ளேன் உறவே..
நாம் செய்வதை செய்வோம், நடப்பவை எல்லாம் உங்களை போன்றோரின் அன்பினால் நன்றாகவே நடக்கும் என்று நம்பிக்கை உள்ளது. மிக்க நன்றி சந்திரா..
LikeLike
மிக்க நன்றி திரு. வித்யா அவர்களே,
உங்கள் எழுத்து வடிவமாக உருவாகிய தங்கள் புத்தகங்களை மலேசியாவிற்கு கொண்டு வருவதில் எங்கள் ஓம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆத்மிக மார்கம் பெருமை கொள்கிறது. தங்கள் நற்பணி தொடரட்டும். பகவான் அருளோடு தங்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்து தருகிறோம். படிக்கும் பழக்கத்தையும், மொழி பற்றும் நம் தமிழ் சமூகத்தினரிடையே பெருக்குவதே எங்களின் நோக்கம்.
இதை போன்று பிற நண்பர்களும் தங்களால் இயன்ற முயற்சியில் இறங்கி , செயல்பட்டு நம் தமிழ் எழுதாளர்களின் பணி தொடர ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம் .
நன்றியும்!! வாழ்துக்களும்!!!
Aum Sri Ramakrishna Athmiga Margam,
Kulai,Johor, Malaysia.
LikeLike
மிக்க நன்றி கூறலானேன். இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருந்து படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் நிச்சயம் இச்சமுதாயம் தனக்கு தேவையான மாற்றத்தை இனி வருபவர்களால் பெற்றுக் கொள்ளும். உங்களின் இன் நற்செயல் நிச்சயம் நம் படைப்புகளின் விற்பனையில்; முக்கியமாக நம் எண்ணங்களை எழுத்தினை எல்லோரிடமும் கொண்டு சென்று சேர்த்ததற்கான பெருமையில் சேரும். இதை கேள்வியுற்று இன்னொரு ரமேஷ் எனும் என் நெருங்கிய நண்பர் ஒருவரே கூட இங்ஙனம் செய்ய முன் வந்துள்ளார். முடிவாக விரைவில் ஆலோசித்து சொல்வதாக சொன்னர். இயன்றதை நல்லதென எண்ணி, நல்லதை இயன்றளவில் செய்வோம், நடப்பவை இறை அருளால்; நன்றதாகவே நடக்கட்டும்!!
LikeLike
நன்றாக உள்ளது..
LikeLike
மிக்க நன்றி முருகன். உங்கள் ஒற்றை ‘நன்றாக உள்ளது’ தான் நிறைய எங்களை நன்றாகவே ஆக்குகிறது..
LikeLike
unmajaana manithan ithai thaan seivaan ithai naan verum vaai vaarththajaaha sollavillai enakum ivaaraana aasai kanavuhal ellaam ullana ippo mudijavillai enathu vatungkaalaththilaavathu niraiverumaa thetijalai paarpom.thangalin padaippuhal marupadium enthu email address itku varavendum ena naan ethir paarkiren.
LikeLike
இருக்கும் காலத்தில் உலகையே புரட்டிப் போடலாமென நம்புவோம் சுகந்தினி. உங்களின் முயற்சிக்கும் பற்றிற்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். என் படைப்புக்கள் என்றுமே உங்களைப் போன்றோரை நாடி நிற்கும்!!
LikeLike
Dear Vidyasaagar,
I will like to receive your books by VPP .Kindly arrange to send to my address R.C.Palaniappan,1/23,3rd Street,P.S.K.Nagar,Rajapalayam-626108,Tamilnadu,India. Phone: 9442535185.
RCP
LikeLike
அன்பு வணக்கமும் நன்றியும் உரித்தாகட்டும் ஐயா, விரைவில் புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன். கிடைத்ததும் தெரியப் படுத்துங்கள். தம்பி கலைவாணன் தங்களை அழைத்துப் பேசுவார்..
LikeLike
பிங்குபாக்: உடைந்த கடவுளும், சில்லறை சப்தங்களும் வெளியாகியுள்ளன.. | வித்யாசாகரின் எழுத்து பயணம்
அன்பிற்க்குரிய கவிஞர், எழுத்தாளர் திரு வித்யாசாகர் அவர்களே, வணக்கம்.
தாங்கள் எழுதிய சில நூல்களை நான் படிக்க நல்ல ஒரு வாய்ப்பினை இறைவன் எனக்கு அருளியது என் பாக்கியமாக கருதுகின்றேன். இறைவனுக்கு அதற்கான நன்றி.
“சாமி வணக்கமுங்க” புத்தகம் பற்றி:
அருமை அருமை மிக அருமை!
புத்தகம் கையில் எடுத்து படித்து முடித்துதான் கிழே வைத்தேன். உங்கள் உரையாடல் போன்று கருத்து தெரிவிக்கும் விதம் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் கருத்து சொல்லும் விதம் வித்தியசமாகவும், ஏற்று சிந்திக்க சுலபமாகவும் அமைந்த’ கதை சொல்லும் முறை நன்று!
பக்கம் 32 கவிதை மிக மிக அருமை!
பக்கம் 57, 58 கடவுளை காண்பிக்கும் விதம் பிரமாதம்!
பக்கம் 61,62 நம்பிக்கை மீது நம்பிக்கை வரவைக்கும் வார்தைகள் அற்புதம்!
பக்கம் 74 குழம்பனும் நல்ல குழம்பனும்…குழம்ம்பி குழம்பி யோசிக்கணும், தேடனும் ஆழ்ந்து தேடனும்’’ என்று சொல்லிய தெளிவு பிறபிக்கும் வரிகள் பிடித்திருக்கு
மொத்ததில் குடும்பம் , சமுதாயம் , நாடு என்று கடவுளை உணர.. இந்த கால கட்டதுக்கு ஏற்ப சொல்லியுள்ளீர்கள்.
“எத்தனையோ பொய்கள்” புத்தகம் பற்றி:
படித்தேன், சிந்தித்தேன்.
பக்கம் 59,60.61 பட்டாம்பூச்சி கவிதை மிகவும் பிடித்து இருந்தது.
மிகவும் எளிய முறையில், மிக நல்ல ஆழ கருத்துக்களோடு சிறு சிறு கவிதைகள் இருந்தன. படிக்கும் போது அக்கவிதைகள் மேலான ஈர்ப்பும், நன்கு ரசிக்கும் தன்மையையும் ஆத்மார்த்தமாக ஏற்படுகிறது.
“வலிக்கும் சொர்க்கம் இந்த வாழ்க்கை” புத்தகம் பற்றி:
எவ்வளவு அருமையான தலைப்பு.
அத் தலைப்பிற்கேற்ப ‘நம்மை சுற்றி நிகழும் தருணங்கள் அனைத்தும் அங்கே பதிவாகியிருப்பதைக் கண்டேன். உண்மையை உணர்த்தும் நிறைய அருமையான வரிகளைக் கண்டேன்.
எல்லா கோணங்களிலும் பார்த்து, மனம் கொள்ளைகொள்ளும்
அளவிற்கு மிக நேர்த்தியாக அழகாக நிறைய கவிதையைச் சொல்லி இருக்கீங்க.
என்னக்கு பிடித்த கவிதை :
பக்கம் 29: அதொரு காலம்
பக்கம் 35 : காதலின் கால நகர்தல்
பக்கம் 47: உன் கால் கொலுசு சப்தமிட
பக்கம் 49: குருட்டு ‘பெண்ணின் கருப்பு வாழ்கை …மிகவும் அருமை .
பக்கம் 54: பாவமமிந்த பைத்தியக்காரன்…. மிக நன்றாக இருந்தது.
கடைசி கவிதை நேஞ்சுக்குளே நேஞ்சுக்குளே …கண்களைள் கலங்கச் செய்தது. மொத்தத்தில் இப்புத்தகத்தின் மொத்தக் கவிதைகளும் மிக நன்று!!!
“பிரிவுக்கு பின்” புத்தகம் பற்றி:
அருமை! அருமை! அருமை!
காதலின் ஏக்கம்…, மனைவியின் வலி, கணவனின் அன்பு, உறவின் பரிவு, சுற்றத்தார் அக்கறை என’ எல்லாமே மனதை ஒரு கணம் கலங்க வைத்தது. மிகவும் அருமையான படைப்பு!
வேறென்னவென்று சொல்வது…, வார்தைகள் தெரிய வில்லை எனக்கு, அவ்வளவு அருமை!
“வாயிருந்தும் ஊமை நான்” (சிறுகதை) மற்றும் “கனவுத் தொட்டில்” நாவல் பற்றி:
எண்ணற்ற.., சமுதாயம் சார்ந்த சாடல்களும் பதிவுமாகவுமே இவ்விரு புத்தகங்களும் எனக்குப் பட்டது. அத்தனைப் பிரமாதமாக கதையை கொண்டு செல்லும் படைப்புக்களாகவே இரண்டும் இருந்தன.
நம்மை சீரழிக்க போவதாக அச்சுறுத்தும் சக்திகளை நம்மால் வேரறுக்க முடியும்” என்பதனை எவ்வளவு அழகாக உங்கள் கதையில் எடுத்துக் காட்டியுள்ளீர்கள்.
“அவளின்றி இறந்தேன் என்று அர்தம் கொள்” புத்தகம் பற்றி:
ஆழமான காதலின் பரவச வெளிப்பாடு எனலாம். அவ்வளவு உணர்ந்து எழுதி உள்ளீர்கள்.. காதலைப் பற்றி. மிக நன்று.
காதலின் அழகையும், இனிமையும், ஏக்கத்தையும், வலியையும்,
நேர்த்தியையும் ஓர் அளவீடு கொள்ளத் தக்க வெளிப்பாடாக, உணர்ச்சிப் புர்வமாக வெளிபடுத்தி இருகிறிர்கள்.
உங்கள் காதல் கவிதை எல்லாமே புதுமையும் அருமையும்…
“வீழ்ந்தது போதும் வாழ்ந்து காட்டு” புத்தகம் பற்றி:
மிகவும் அர்த்தமுள்ள’ வாழிவின் பதிவுகள். நியாயமான உண்மையை மிக சுவாரஸ்யமாக, கவிநயத்தோடு படைத்துள்ளீர்கள். உங்கள் ஆழமான, தெளிவான ஞானம் இவ்வாறான படைப்புக்களில் வெளிப்படுகிறது.
முழுக்க முழுக்க ஒரு சமூகப் பற்று கொண்டவர் படைப்பிது என்பதை’ கவிதை வரிகள் ஒவ்வொன்றும் சாட்சியாய் நின்றுச் சொல்கிறது .
கடவுள் : பார்க்கும் விதத்தில் தெரியும் கண்ணாடி! (பக்கம் 13 )
குடும்பம் : மனம் வீசும், மலர் போன்ற, உறவுகளின் முட்கள் மீது, வண்ணங்களோடு ஜொலிக்கும் மென்மையான சேலை. (பக்கம்17 )
வாழ்க்கை : மனிதனின் பக்குவதிற்கேற்ப மாறுப்பட்ட சித்திரம்.
தமிழ்பேசு மனமே தமிழ் பேசு: (பக்கம் 51) அருமையிலும் அருமை!
“துடித்து எழுந்து புஜங்கள் உடைத்து,
வீரத்தோள் தட்டி
உலகையே தமிழுக்கு சொந்தமிடு” என உறங்கும் உணர்வுகளை தட்டியெழுப்பி தமிழுக்கென பேசவைக்கும் உங்களின் எழுத்துக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் , வாழ்துக்களும், நன்றிகளையும், மனம் நிறைந்த அன்பினையும் இங்கே சமப்பிக்கின்றேன்.
அன்புடன்,
ஆசிரியை உமா தேவி
மலேசியா.
LikeLike
ஒரு மாணவன் படித்துப் பெருமை கொள்வான் எனில், தன்னை தன் தவறிலிருந்து சரிசெய்து திருத்திக் கொள்வானெனில்’ நான் ஜெயித்துவிட்டதாய் அர்த்தம் என்று கூறியுள்ளேன்.
இங்கே ஆசிரியை ஒருவரின் வாழ்த்திற்கு வாக்கப்பட்ட என் எழுத்தினை தந்த இறைசக்திக்கே நன்றிகள் அனைத்தும்!!
அதையும் கடந்து, படித்ததோடு நின்று விடாமல், சிரமம் பாராது, இத்தனை விரிவான விளக்கமான கருத்துரை அளித்த தங்களின் மனநிலைக்கும், நல்லுணர்விற்கும் என் என்னிலடங்கா நன்றியுணர்வும் வணக்கங்களும் உரித்தாகட்டும் உமா..
LikeLike
நம் படைப்புக்கள் சென்னை ஹிக்கீம்பாதம்சிலும், தி.நகர் புதிய புத்தக உலகத்திலும் மற்றும் இதர நிறைய கடைகளிலும் கிடைக்கும். தவிர இணையம் வழியே பெருவதெனில் http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&si=2
http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&si=2&x=0&y=0
இவ்விடம் சென்றுப் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து நட்புறவுகளுக்கும் மிக நன்றியும் வணக்கமும்..
வித்யாசாகர்
LikeLike
நீங்கள் அழகு …உங்கள் மொழி அழகு …உங்கள் கவிதைகள் மிக மிக அழகு ……
LikeLike
ஹ ஹ.. வணக்கம் தோழமை. உங்களின் அன்பிற்கு நன்றி… கவிதையை ரசித்தமைக்கு நன்றி. மொழியுணர்வை பாராட்டியமைக்கு நன்றி..
LikeLike