நூல்: எத்தனையோ பொய்கள்
ஆசிரியர் : வித்யாசாகர்
ஆய்வு : கவிஞர் முனு.சிவசங்கரன்
இந்த கவிதை புத்தகத்தின் பின் அட்டையை படிக்கும் வாசகர் இதயம்
தன் அகத்தை புறத்தில் காட்டும் கவிஞர் வித்யாசாகரின் எழுத்தான்மையால்
கவரப்படுகிறது.
புத்தகம் வாசித்தல் என்பதை ஏதோ மூடப்பழக்கமாய் கருதி
சின்னத்திரைமுன் தன்னை ஒப்பு கொடுத்துவிட்டு சீரழியும் இந்த சமூகத்தின் மீது தன் முதல் கவிதையிலேயே தார்க்குச்சி சுழற்றுகிறார்.
எழுத்தோடு வாழ்க்கை இரண்டற கலந்துவிட்ட இவரின் எண்ணங்களுக்கும்
செயல்களுக்கும் இடைவெளி இல்லா நிலையில் எழுத்துக்களில் இருந்து
இவரை பிரித்தெடுப்பது என்பது இயலாத செயல்.
தன்னைத்தானே விலாசிக்கொள்ளும்
ஒரு கழைக்கூத்தாடியின் படீர் படீரேனும் சாட்டை சப்தம்
இவர் கவிதைகளில் கேட்க நேரிடுகிறது.
//உடல் எரிக்கும்
நெருப்பிற்கு
உள்ளமே விரகாகிறது//
இந்த வரிகள்; போதி மரத்தின் வேர் ஒன்றாக
நம்மோடு புலனடக்கம் பேசுகிறது.
//வழிக்க வழிக்க
முளைக்கிறது
தாடியும் ஜாதியும்//
மனதில் முளைவிட்டுகொண்டே இருக்கும் சாதீய உணர்வுகளை
மழித்துக்கொண்டே இருப்பது நம் அன்றாட கடமையென
தன் தாடி கவிதையில் கோடிட்டுக் காட்டுகிறார்.
வாங்குவோருக்கும் விற்போருக்கும் மத்தியில் இரும்புத்திரை விழுந்துவிட்ட இன்றைய சூப்பர் மார்கட் கலாச்சாரத்தில் வணிகமயமாகிப் போன நம் சமூகத்தை நமது பண்டமாற்று வணிகத்தின் பழம்பெருமையை திரும்பி பார்க்க வைக்கிறது – இவரின் பழக்கூடைக்காரியின் கவிதை.
சார்புநிலை சமூக அரசியலை மனித நேயத்தோடு
சிந்திக்க தூண்டுகிறது இவரின் எத்தனையோ பொய்களின் ‘எத்தனையோ கவிதைகள்.
கடவுள் என்பது பெயர்ச்சொல் அல்ல
அது ஒரு வினைச்சொல் என்பார் நம் அறிஞர் ஒருவர். அதுபோல்
தனக்குள்ளாகவே தன்னைக் கடக்கும்; பகுத்தறிவு மிளிரும்; ஆண்மிக முயற்ச்சிகளை ஆங்காங்கே கவிதைகளால் கல்லில் செதுக்குகிறார்…!
காதல் கொப்பளிக்கும், கண்களால் அழகை ரசிக்கும் எந்த ஒரு இதயமும்
அந்த அழகை உள்வாங்கி பிரதிபலிக்கும் கண்ணாடியாய் மிளிரும் என்பதை
இவரின் பவுடர்பூச்சு கவிதை பண்போடு பகர்கிறது…!
காலக்காற்றில் கரையும் கற்பாறையில்
ஏதோ ஒரு வடிவத்தை நம் கண்கள் காண்பது போல்
இப்புத்தகத்தில் சுயம்புவாய் உருவேறி இவர் ஒரு சிறந்த கவிஞரென
நம்நெஞ்சில் அழியா சித்திரமாய் பதிந்து விடுகிறார்…கவிஞர் வித்யாசாகர்!
—————————————————————————————
விலை : 70 உருபா
வெளியீடு : முகில் பதிப்பகம் (96000 00952)
கிடைக்குமிடம் : தமிழலை ஊடக உலகம் (9786218777)
வணக்கம் அண்ணன்,
உங்கள் கவிதை தொகுப்பு இரண்டு முழுக்க முழுக்க படித்துஇருக்கி@றன்…
அருமையான கவிதைகள். இவை பல பத்திரிக்கைகளில் வந்தால் நல்லா இருக்கும்
‘பிரிவுக்கு பின்’ ‘எத்தனையோ பொய்கள்’ இரண்டும் படித்துள்ளேன்..
//கிழிந்த சட்டை காலதலனுக்கு
காதலை சொல்லக் கூட
ஐலவ் யூ தான்
இனிக்கிறது//
இந்த கவிதை மிக நன்றாக இருக்கிறத.
இப்படிக்கு
அசன் முஹம்மது (B.B.A, D.C.எ)
சென்னை தமிழ்நாடு
LikeLike
மிக்க அன்பிற்குரிய தம்பி அசன் முஹம்மதிற்கு, மனதார்ந்த நன்றிகள். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது கிடைக்க வேண்டியவர்களின் கையில் உரிய நேரத்தில் கிடைத்தால் நமக்கான நல்ல அங்கிகாரம் கிடைக்குமென்று. பல இதழ்களில் வெளிவந்து உங்களை போன்ற இளைஞர்களின் நெஞ்சில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தும் சிறந்த படைப்பாகவே ஒவ்வொன்றும் இருக்க வேண்டும் என்பது தான் என் முயற்சியும்..
பார்ப்போம்.., இறையின் அருள் எதுவோ அதன் படி, விரைவில், எல்லாம் நல்லதற்காகவே நடக்குமென்று நம்புவோம் அசன்!
LikeLike
வணக்கம் வித்யாசாகர் அவர்களே, உங்களின் பல கவிதைகளை படித்துள்ளேன் அதில் என்னை பாதிப்பது ஈழ தமிழர்களைப் பற்றி நீங்கள் எழுதும் ஒவோவ்று வார்த்தைகளிலும் உண்மை உண்டு. படிக்கும்போது என்னையும் அறியாமல் பலமுறை நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன். உங்களைப் போன்றவர்களின் எழுத்து மூலமாவது அவர்களுக்கு சுய உரிமையுடன் விடுதலை கிடைக்கட்டும். நன்றி!!!!!!!!!!!!!!
LikeLike
வணக்கம் திரு ராஜேஷ். தங்களின் நம்பிக்கைக்கு நன்றி. மெல்ல மெல்ல நகர்துவோம் நம் துளி துளி கண்ணீரையேனும் சேர்த்து ஒரு மக்கள் வெள்ளம திரட்டுவோம். விடுதலை உணர்வு படரும் மூச்சும் சுதந்திர நடையும் சிந்தனையுமே ஒருவருக்கு நிம்மதியைத் தரும். அந்த நிம்மதியை நம் முன்னும் பின்னுமாய் சுற்றி இரண்டாம் பட்சமாக வாழும் நம்முறவு மக்களுக்கு தர நம்மால் இயன்றதை எழுத்தின் வாள் கொண்டேனும் சுழற்றுவோம். அதுவரை ஓய்ந்துக் கொள்ளும் உணர்வல்ல இது. மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வலிக்கும் வரை; நமக்கும் வலித்தல் வேண்டும்..
LikeLike