நீ நின்று கொன்ற இதயம்

அன்பே..உலகம் தொட்டிடாத
வார்த்தையொன்று –
தொண்டை குழி உடைத்து
உனக்காய் கவிதை புனைய தவிக்கிறது;

இதயம் உடைக்கும்
பார்வையேந்தி –
ஈரம் சுரக்காத உன் காதலுக்கு
கடவுள் கூட – கர்வியென பெயர் சூட்டலாம்;

துடிக்கும் உயிர் நாதமெல்லாம்
நீயே நீயே உயிர் கொண்டிருக்க
எதை கொண்டு என் காதலை நான்
தொல்வியென்பேன் சொல்லடி;

நீ காதலிக்கிறாயென
உன் இமைகள் சிமிட்டி –
உன் இதயம் சொன்ன – ஆயிரம் பொழுதுகளை கடந்து
எப்படி ஒப்புமென் சிறு இதயம்
நான் மட்டும் காதலிப்பதாய்;

வேண்டுமெனில், இப்படி சொல்லலாம்..

நான் காதலிக்கிறேன்
உன்னிடம் சொல்லிவிட்டு,
நீயும் காதலிக்கிறாய் –
என்னை மட்டும் கொன்று விட்டு!

இந்த கொலைக்கு பெயரும்
கொலையென்று ஆகாமால்
ஒருதலை காதலென்பதே விசித்திரம்!
——————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s