என் விரல் பிடிக்காத –
வானம்;
என் கால்கள்
மிதித்திடாத பூமி;
என் தலை மேல் தாங்குமென்
வாழ்விடம்;
அவ்வப்பொழுது தொட்டு
சிலிர்க்க வைத்து –
தன்னை முழுதாக அறிந்து கொள்ள
விடாததொரு –
காலம் விழுங்கிய தோற்றம்;
நிறைவுறாத இயக்கம்
நம்மை எல்லாம் இயக்கி
இணைக்கும் தமிழுக்கும்,
அத்தமிழை சிறப்பிக்குமென்
தமிழுறவிற்கும் –
அன்பு வணக்கங்கள்!