நிலா இரவில்
நடைகொண்ட வாழ்க்கை;
சிறிது வெளிச்சம்
நிறைய இருட்டாகத் தான்
நம் மெத்த பயணமும்;
இடையே,
மின்னும் நட்சத்திரமும்
கால் தட்டும் கற்களுமாய்
தெரிந்தும் தெரியாததுமென
பல யதார்த்தங்களை கடந்தே
மரணமென்னும் –
ஒற்றை சொல்லில்
நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்;
எப்படியோ,
தவிர்க்க இயலா மரணம் தாண்டி
காலம் நம்மை கேட்காமலே கடந்து
சூரியனை தொட்டுவிட்ட பிறகும்
நிறைய பேருக்கு –
விடியாததே சாபம்!
————————————————————–
வித்யாசாகர்