பாலா என்றாலே
இதயம் மீளா அன்பு தானா
நீ பிறந்த நாள் உலகின்
இன்னொரு விழா நாளா;
இனிக்க இனிக்க கொண்டாடுவோம்
சலிப்பு வேணாம்
இதயம் நிறைத்து நிறைத்து வாழ்த்திடுவோம்
சற்றும் குறைய வேணாம்;
ஊரு உலகம் போற்றட்டும்
பேரும் புகழும் வரும், தானா;
யாரு என்ன சொன்னாலும்
அடக்கம் கொள்ளு பாலா;
ஆசையெல்லாம் நிறைவேறும்
பேராசை வேணாம்
கொட்டி கொட்டி கொடுத்தாலும்
சும்மா ஏதும் வேணாம்;
தொட்ட இடம் சிறக்கட்டும்
தேடாமலெல்லாம் கிடைக்கட்டும்
வாழ்க்கை கூட உன் விருப்பத்திற்கு
தக்கதாகவே அமையட்டும்
பிறந்ததின் பேரு இதுவென்று
பிறருக்கு காட்டு பாலா –
நீ முயன்று முயன்று முன்னேறு
கடவுளும் எங்கள் வாழ்த்துமுண்டு; நீடு வாழு பாலா!
அன்பு தம்பிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
I went through your site. It is really good. I will through the complete artcle and come back to you with my comments.
Thanks and Regards
உங்கள் வலைத்தளம் பார்த்தேன். மிக்க அருமையாக இருந்தது. இயன்றவரை இனி படித்துவிட்டு என் விமர்சனங்களையும் பதிவுசெய்கிறேன்.
மிக்க நன்றிகளோடும் வணக்கத்தோடும்..
M.R. செந்தமிழ் அரசு
LikeLike
மிக்க நன்றி ஐயா. தங்களின் வருகை மேலும் எனக்கு மேன்மையை சேர்க்குமென உணர்கிறேன். உங்களின் உயர் மதிப்பான விமர்சனங்களுக்காய் ஏற்று நடக்கக் காத்திருக்கிறேன்..
மிக்க நன்றிகளும் அன்பும் உரித்தாகட்டும் ஐயா!
LikeLike