இரவின் – இருட்டின் உள் கூரைக்கு
மேலே படர்ந்த – சிமினி விளக்கின்
வெளிச்சத்தில் விழுந்த
இங்குமங்குமாய் நடந்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் நிழலில் –
அப்பாவின் மனமே தெரியவில்லை தான்;
ஆனால், எனக்குத் தெரியும்
நாளைக்கு அப்பாவிற்கு சம்பளம்;
வீட்டு வாசலில் நின்று
கழுத்தை நெரிக்கப் போகும்
கடன் காரர்களுக்கு –
என்ன பதில் சொல்வதென்ற பயத்தில்
தூக்கத்தை தொலைக்கவே –
சிமினி விளக்கின் வெளிச்சத்தில்
அப்பாவின் நிழல் –
இங்குமங்குமாய் நடக்கிறது!
———————————————–
வித்யாசாகர்