பிரிவுக்குப் பின் – 1

ன் இனியவளே…!
இதையம் வலிக்குமென்பதே தெரியாமல் தான்
வெளிநாடு –
வந்துவிட்டேனா…?

இதோ.. உன்னைவிட்டு
கடைதூரம் வந்த பின் –
மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் – நீ
எங்கோ இருக்கிறாயாம்!

எங்கிருப்பாயென என்னைக் கொஞ்சம்
தட்டிச் சரிபார்த்துக் கொள்கையில் –
நான் குவைத் வந்துவிட்டேனென்பதை
தாரை இறங்கிய விமானம் சொன்னது!

நான் தோளில் –
சுமந்த பையாக
மனதை சுமந்துக் கொண்டு..
இந்த வெட்டவெளித் தரையில் கால் பதித்து
கொஞ்சம் –
இங்குமங்குமாய் சுற்றிப் பார்கிறேன்..
மயானமாய் கனக்கிறது இதையம்!

யாரோ –
அரபி ஆள் ஒருவர் வந்து –
“ஏய்..ஏய்…! போ..போ…!
பொய் வண்டியில இரு” என கோபம் கொள்கையில் –
தாரை தாரையாய் வழிந்தது
உனக்கான அத்தனை கண்ணீரும்!

துடைக்கவும் தோனாமால்
வெறும் உடலாக அசைகையில் –
“ஐயோ இறைவா; என் கடவு சீட்டு ஏதேனும்
தவறாக இருந்தாவது என்னை –
திருப்பி அனுப்பிவிட மாட்டார்களா???
என தவித்து போய் –
ஓரமாக நிற்கிறேன்..,

என்னை அழைக்க வந்தவர் ஓடிவந்து
“வா, எல்லாம் முடிந்துவிட்டது போகலாம்” என்கிறார்.

விமான நிலையம் தாண்டி
வேறு வாகனம் பிடித்து
ஜன்னலோரம் சென்றமர்ந்து வெளியே பார்க்கிறேன் –
‘அகண்ட பாலைவனம் நோக்கி
விர்..ரென்று செல்கிறது – எங்கள்
சதிகார பேருந்து!

வேறென்ன, எல்லாம் முடிந்துவிட்டது தான் – என
கவலை கொள்கையில் –
அருகிலிருப்பவர் கேட்கிறார்..
“புதுசா…?”
“ம்..!”
“கல்யாணம் ஆயிடுச்சா…?”
“ம்..!”
“வரும்போது –
மனைவி அழுதாங்களா?”

ஆமென்று என்னால் சொல்லமுடியவில்லை
கண்ணீர் தடுக்கிறது.

“சரியாயிடும்.. சரியாயிடும்..
ரெண்டு வருடம் தானே…!”
அவர் கேட்டாரா(?) சொன்னாரா(?)
தெரியவில்லை;

நிமிடங்களும் நொடிகளும்.. மனதில்
சுடுநீராய் எரிக்க –
இரண்டு வருடம்.., எங்கே போக?????

கேள்விகளின் பயணத்தில்
கை கால் நடுங்க –
கண்ணீராலும்..
கவலைகளாலும்..
என்னை –
மறைக்க முடியாதவனாய் –
கைகுட்டையில்
முகத்தைப் பொத்திக் கொண்டு சற்றும் அமைதியாகிறேன்.

என்னை அழைத்து வந்த நண்பர் ஓடிவந்து –
“நண்பரே…. வாசு நீங்க தானே …?”
“ஆமாம்”
“உங்க வீட்டிலிருந்த தான் போன்,
உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க”

என்னால் கத்தி அழவும் முடியாமல்
பேசவும் முடியாமல் –
‘எங்கு என் விசும்பலின்
சப்தம் –
என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ’ என்ற
படபடப்பில் –
அலைபேசியின் இணைப்பைத்
துண்டித்துவிட்டேன்.

என் பேருந்து – எனக்காக உடனே
நின்றுவிடவில்லை;
அகண்ட பாலைவனம் நோக்கி –
சென்றுகொண்டே இருக்கிறது!!
—————————————————–
வித்யசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

3 Responses to பிரிவுக்குப் பின் – 1

 1. siva சொல்கிறார்:

  அருமையான கவிதைகள்
  மனம் நிறைந்து கூறுகிறேன்

  இதோ.. உன்னைவிட்டு
  கடைதூரம் வந்த பின் –
  மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன் – நீ
  எங்கோ இருக்கிறாயாம்!

  என்னை அழைத்து வந்த நண்பர் ஓடிவந்து –
  “நண்பரே…. வாசு நீங்க தானே …?”
  “ஆமாம்”
  “உங்க வீட்டிலிருந்த தான் போன்,
  உங்க மனைவி பேசுறாங்க பேசுங்க”

  என்னால் கத்தி அழவும் முடியாமல்
  பேசவும் முடியாமல் –
  ‘எங்கு என் விசும்பலின்
  சப்தம் –
  என் மனைவிக்குக் கேட்டுவிடுமோ’ என்ற
  படபடப்பில் –
  அலைபேசியின் இணைப்பைத்
  துண்டித்துவிட்டேன்

  Like

 2. குந்தவை சொல்கிறார்:

  //“சரியாயிடும்.. சரியாயிடும்..
  ரெண்டு வருடம் தானே…!”

  😦

  It’s difficult…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s