ஏழைகளின் ஏசு கிருஸ்த்து

லகம் புரட்டிப் பார்த்த வரலாறு
இன்னும் திகட்டிவிடாத பெரும் பேரு;
காலம் கட்டிக் கொண்ட மதம் பாரு
கருணை ரத்தமாய் சொட்டிய நிஜம் பாரு!

ழைக்கெல்லாம் இனி ஏது கண்ணீரு
ஏற்றத் தாழ்வு ஒழித்த கடவுள் பாரு;
உனக்கும் எனக்கும் கி.மு; கி.பி ஏது
ஏசு பிறந்து எத்தனை மாறியது பாரு!

முள்கிரீடம் அணிந்து கையில் ஆணியடித்து
சிலுவையில் அறைந்த ‘அந்தோ’ கொடுமை பாரு;
உயிர் பிரிந்து சென்றும் நமக்காய் –
மூன்றாம் நாள் விழித்து வந்த அதிசயம் பாரு!

ட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்
வெறும் வாய் வார்த்தையா(?) இல்லை கேட்டுப் பாரு;
கண்மூடி கேட்டால் பிதாவின் கருணை புரியும்
ஒரே – ஒருமுறையேனும் ஜபித்து பாரு!

ஜாதி வேரறுத்து ஏழை குடி காத்த
எங்கள் கர்த்தரை பாரு –
பிறர் பாவங்களுக்கும் அறியாதிழைத்த தவறுகளுக்கும்
ஏசு கொடுக்கும் கருணை மன்னிப்பும்; மறுவாழ்வும் பாரு!

லகெல்லாம் பறந்து விரிந்த கர்த்தரின்
விசுவாசம் பாரு;
கடைகோடி வீட்டில் கண்ணீரென்றாலும் – போக்க
பிறப்பெடுத்த ஏழைகளின் ஐயா; ஏசு கிருஸ்த்து பாரு!

ரண்டாயிரம் வருடம் தொலைந்தும்
தொலையாத கிறிஸ்மஸ் பண்டிகை பாரு;
இரத்தமாய் சிந்தி; அறைந்த சிலுவையில் – உயிரை விட்ட
பிதாவின் அன்பிற்கு –
நாம் காட்டும் ஒரு நன்றி; கிறிஸ்மஸ் கொண்டாட்டம் தானே ஜோரு!
——————————————————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s