இணைய வசதியோடு தமிழில் தட்டச்ச..

இணைய வசதியோடு தமிழில் தட்டச்ச இந்த இணைப்பை சொடுக்கவும்:-  “தமிழ் தற்காலிக மென்பொருள்”

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அறிவிப்பு and tagged , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to இணைய வசதியோடு தமிழில் தட்டச்ச..

 1. வித்யாசாகர் சொல்கிறார்:

  http://www.google.co.in/transliterate/indic/Tamil இப்பக்கத்தில் சென்று இணைய இணைப்பு மூலம் தமிழில் தட்டச்சு செய்து, பிறகு அதை அங்கிருந்து நகலெடுத்து எங்கு வேண்டுமோ அங்கு பதிந்துக் கொள்ளளாம்.

  ஆனால் அதில் ஒரு கோளாறு நேரலாம், என்னவெனில், ஒருமுறை புதுப்பித்துவிட்டால் பழவி அத்தனையையும் இழக்க நேரிடும்.

  எனவே இப்பக்கத்தில் வலது புறத்தில் New! Download Google Transliteration IME என்று இருக்கும் அதை சொடுக்கினால் வேறொரு புதிய பக்கம் திறக்கும். அதன் வலதுபுறத்தில்Download Google IME என்றிருக்கும். அதற்கு மேலே IMEக்கு சென்று தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டு தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

  இதை ஒருமுறை செய்துவிட்டால், அதன் பிறகு இணையத்தின் அவசியமின்றி வேர்ட் பைலில் கூட எழுதலாம். இணையத்தில் வலைத்தளம், முகநூல், இத்யாதி.. இத்யாதி.. என எங்கு வேண்டுமாயினும் உச்சரிப்பின் படி தட்டச்சு செய்து ஸ்பேஸ் கொடுத்தால் போதும், தமிழில் எழுத்துக்கள் அழகாக பிறக்கும்!

  Like

 2. இராஜ.தியாகராஜன் சொல்கிறார்:

  வணக்கம் கவிஞரே!

  மிகவும் பயனுள்ள பதிவிது. இணையத் தமிழன்பர்கள் பலரும் ஆர்வமுடன் பயன்படுத்துவார்கள். மேலும் சில கூடுதலாக சில தகவல்கள். என்னுடைய குடும்பம், செந்தமிழ், இவற்றிற்கு அடுத்தபடியாக என்னைப் பிடித்த பிசாசு (!!) கணினிச் செயல்பாடு, தமிழ் மெல்லியங்கள், ஒருங்குறி எழுத்துரு உருவாக்கல், இவைகளே.

  2003இல் என்னுடைய தளத்தில், காலஞ்சென்ற ஜனாப் உமர்தம்பியின் ஒருங்குறி எழுத்துரு எழுதியை வலையெற்றி வைத்திருக்கிறேன். இதனை இணையத் தொடர்பு இல்லாமல் இருக்கும் போதும் பயன்படுத்திப் பலன் பெறலாம். html ஐ வலைப்பக்கமாக சேமிக்க வேண்டும் அவ்வளவே! இழை: http://www.pudhucherry.com/pages/umar.html

  அத்துடன், இணையத்தில் கிடைத்தத் தமிழ் ஒருங்குறி எழுத்துருக்கள் சிலவற்றுடன், நான் உருவாக்கியவற்றை இலவயமாக ஒரு மெல்லியப் பொட்டலமாகவும் வலையேற்றி வைத்திருக்கிறேன். மேலும் escape பித்தானுக்குக் கீழிருக்கும் grave பித்தானை இயக்கி, இந்திய உருவா சின்னத்தை தட்டச்சு செய்யும் படியும் என்னுடைய எழுத்துருக்களை மாற்றியமைத்துள்ளேன். இந்த பொட்டலத்தின் சிறப்பென்ன வென்றால், administratorஆக இயக்கினால், அனைத்து விண்டோஸ் இயங்குதளங்களில் ஒருங்குறித் தமிழ் எழுத்துகளை அதுவாகவே fonts folderஇல் நிறுவிவிடும். மேலும் c:/temp என்ற folderஇல் அனைத்து எழுத்துரு, எழுத்துரு ஏற்றும் செயலி இவற்றைச் சேமித்தும் வைத்துவிடும், பிற்கால பயன்பாட்டுக்கு. நான் உருவாக்கிய எழுத்துருக்களின் பெயர்கள்: TAU Paavender.ttf, TAU Thirumurugan.ttf, TAU Pudhuvai.ttf, TAU Vaigarai.ttf, TSCVaigarai.ttf (TSCII font), TSCu_Vaigari.ttf(TSCII/Unicode font), திரு உமர் உருவாக்கி நான் மேம்படுத்திய எழுத்துருக்கள்: TAU Umar.ttf, TAU Umartex.ttf. பதிவிறக்க இழை: http://www.pudhucherry.com/text/uni.exe.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   மிக்க நன்றி ஐயா. தங்களின் நன்றியுணர்வும், சேவை மனப்பான்மையும், தணியாத தமிழ்பற்றும் மிக போற்றுதலுக்குறியது!! உயர்மதிப்பும் நன்றியுமானேன்!!

   நம் நட்புறவுகள் அனைவரும் இனி இச்சேவையினால் மிக்க பயனுறுவார்கள்…

   வித்யாசாகர்

   Like

 3. Abu சொல்கிறார்:

  கனவும் மெல்ல கதை பேசும், நான் நினைத்ததைவிட அதிகமாய் மீநீளம் கொண்டதாய் உங்கள் களம்

  Like

 4. KEERTHIGA சொல்கிறார்:

  வணக்கம் ஐயா,
  தங்களின் இந்த சேவை மிகவும் பயனளிக்கின்றது. இணைய தளத்தில் இந்த சேவையை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.உங்களின் படைப்புகள் யாழின் இசை போல, தென்றலின் குளுமை போல, தேனின் இனிமை போல மனதிற்கு இன்பம் அளிக்கின்றது. நன்றி

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   என்னன்புறவிர்கு வணக்கமும், மிக்க நன்றிகளும் உரித்தாகட்டும். பிறர் பயன்படுத்தப் படுகையில் தான் ஆற்று நீருக்கும் வீசும் காற்றிற்கும் பறந்த பூமிக்கும் படைப்பின் நோக்கம் நிறைவு ஆகிறது. அங்ஙனம், உங்களின் அன்பில், தொடர்ந்த நல்கருத்தில், வார்த்தைகளுக்கிடையே காட்டும் பெருமதிப்பில்; நானும் எங்கோ பயன்படுகிறோமே என பூரித்தே போனேன் அன்பு கிருத்திகா..

   Like

 5. subrmanian,dubai சொல்கிறார்:

  வணக்கம் அண்ணா, என் எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலிக்கிறது உங்களின் எழுத்து, அருமையான வரிகள் ஒவ்வொன்றும், படிக்கும்போதே நெஞ்சம் வலிக்கிறது சில இடங்களில்!!

  Like

 6. shanthi சொல்கிறார்:

  vanakkam ……..ungal padaippugal ellam migavum nandraga irukkirathu….thodarattum ungal ezhuthum & ennamum.:)

  Like

 7. அ.கருணாநிதி சொல்கிறார்:

  வணக்கம் ஐயா,
  தங்களின் இந்த சேவை மிகவும் பயனளிக்கின்றது. இணைய தளத்தில் இந்த சேவையை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s