உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில்
பாசமும் போட்டியும் எப்படியோ
நிகழ்ந்தே விடுகிறது;
யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்
எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?
அந்த மெச்சுதலில் தான்
தோன்றி போயின எத்தனை கோடுகள் –
நாடென்றும் இனமென்றும் மதமென்றும்
ஜாதியென்றும் –
மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு!
எங்கோ போகிறது நம் வாழ்க்கை
கல்கி பிறப்பார் கடவுள் வருவார்
அதிஷ்டம் அடிக்கும் என்றெல்லாம்
சேர்த்து வைத்திருக்கும் –
நாளைக்கான அத்தனை எதிர்பார்ப்பையும்
தூக்கி எறி;
வா, இன்றைக்காய் இந்த பொழுதிற்காய்
எல்லாம் மறந்து மனிதராய் மட்டும்
கட்டி அனைத்துக் கொள்வோம்!
——————————————-
வித்யாசாகர்
nice really very nice
மிக்க நன்றி சிவா
யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர்
எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ?
nice lines.
yes.we are always taught to succeed in life,without knowing the meaning of success.no matter how we did it.
அன்பு தம்பிக்கு வணக்கமும் நன்றிகளும் உரித்தாகட்டும். உங்களை போன்ற நாளைய சமுதாயம் உணர்ந்தெழுந்து விட்டால்.. கவிதைகள் மேய்க்கப் படும். வாழ்க; வளர்க!
அண்ணன் வித்யாசாகர் அவர்களுக்கு………….மனிதம் பிறபிப்போம் கவிதை மனிதத்தை கொஞ்ச கொஞ்சமாக கொள்பவரின் உயிரை உரசி பார்க்கும்,இறந்து கொண்டு இருக்கும் மனிதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.உங்கள் எழுத்து பயணம் இன்னும் இன்னும் தொடரவும்,அனைவரையும் போய் சென்றடையவும் வாழ்த்துகிறேன்……………
என்றும் அன்புடன்……………
தி.தமிழினியன்
உன் வாழ்த்தில் உயிர் வரை அன்பினால் உறைந்து போனேன்..
உங்களை தொட்டு விட்டதில்; உலகம் எட்டியதாகவே உணர்கிறேன். மிக்க நன்றி இனியா