கழுகு
கழுகாரே..
கழுகாரே..
முக்கால் மைல் தூரம்
மேலே பறந்தாலும்
கீழேயுள்ள
உயிர்கள் கூட
உனக்கு நன்றாகத் தெரியுமாமே;
நீ –
மகாவிஷ்னுவிற்கே
வாகனமாமே;
கொஞ்சம் மேலே பறந்து
வட்டமடித்து வா –
எங்கள் தமிழீழ மண்ணில்
புதைக்கக் கூட இல்லாமல்
காடுகளில் ஆங்காங்கே –
அழுகிக் கிடக்கும்
ஒவ்வொரு உடலுக்குள்ளும்
ஒவ்வொரு வரலாறிருக்கும்
சொல்வாயா (?)
ஏனப்படி பார்க்கிறாய்?
சரி விடு;
மண்ணினல் புதைந்து போன
வரலாறு நமக்கெதற்கு –
புதைந்துபோகட்டும்;
எஞ்சியுள்ள உயிர்களையாவது
முள் கம்பிகளுகுள்ளே இருந்து
மீட்டெடுக்க
கொஞ்சமுன் கடவுளை
கண்திறக்கச் சொல்ல்வாயா (?)
நீதான் –
மகாவிஷ்ணுவின் வாகனமாயிற்றே!!
———————————————–
வித்யாசாகர்
ஈழம் சார்ந்த கவிதைகளை தொடர்ந்து பதிவு செய்யவும்.
நன்றி.
LikeLike
இதோ இப்போதே பதிந்து விடுகிறேன் கவி..
LikeLike