பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த –
ஜனங்க நாங்க;
சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின –
தமிழன் தாங்க!
உயிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க;
காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் –
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!
முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின –
ஈரம் பாருங்க;
சிங்கள வெறி – பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் –
இனிக்குதோங்க!
முப்பது வருஷம்
வெடி சப்தத்துல –
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;
இப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு –
குண்டு வெடிச்சே சாகலாங்க!
இந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா –
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???
ஈழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!
கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் –
விட்டுப் போங்க;
எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன –
மீந்து போன வரலாறாங்க???
அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,
தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி –
தீபாவளிய கொண்டாடுங்க;
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின –
ஈமச் செய்தி வந்தா
ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின –
ஈமச் செய்தி வந்தா
சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;
இந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல –
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;
நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில –
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
——————————————————–
வித்யாசாகர்
இது ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய கவிதை அண்ணா
அதுவும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் படிக்கவேண்டிய கவிதை
LikeLike
தாய் பசு தன் கன்றுக்குட்டியை பார்த்த சந்தோஷம் ரூபன். வெகு நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட சம்பாசனை இது என்றாலும், அவைகளை தாண்டி கவிதைக்கான மறுமொழியாய், ஆமென ஒத்துக் கொள்கிறேனப்பா.., நலமென்றும் நம்பிக் கொள்கிறேன். வாழ்க!
LikeLike