மாசிலா மன்னனே.. (தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்)

லகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு
நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க
தலைவனானாய்;

உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக்
கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி
நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்;

புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே
தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு
அண்ணனான அண்ணலே;

வாழ்வது ஒருமுறை; வீழ்வதும் ஒருமுறை
இரண்டில் எதுவாயினும் ஈழத்திற்கேயென
போர்புரிந்த மாவீரனே;

செய்திகளுக்கு தீனி போட்டு..
வீடுகளுக்கு புகழில் வெள்ளையடித்து..
அதிகார வர்க்கத்தில் –
எதையும் அசைத்து விடுவதாய் எண்ணி வாழும்
பல உலகமகா தலைவர்களை தாண்டி
விடுதலையென்னும் ஒற்றை சொல்லுக்காய்
வாழ்வின் அரை தூரம் கடந்து விட்ட மாசிலா மன்னனே;

நீ பிறந்தாய் –
தமிழரின் தனி அடையாளத்தை
உலகம் தெரிந்துக் கொண்டது!

நீ பிறந்தாய் –
தமிழரின் தீரம் இதுவென்று கண்டு
உலகமே அதிர்ந்து நின்றது!

நீ பிறந்தாய் –
சிங்களனின் திமிரெங்கோ
தலைகவிழ்ந்து வீழ்ந்தது!

நீ பிறந்தாய் –
ஈழ தேசம் ஒட்டுமொத்த தமிழரின்
கனவு தேசம் ஆனது!

இதோ.. கனவு தேசம் கைகூடும்
நாளின்னும் வெகு தொலைவிலில்லை..

எங்களின் ஒற்றை தலைவனே..
கனவு தேசம் இனி எங்களின் –
லட்சிய தேசமென முழங்குவோம்;

இந்த லட்சிய தேசம் வெல்லும் நாளில்
உன் பிறந்த தினம் தானே – எங்களின்
முடிசூடும் ஈழ திருநாளாகும்!
————————————————-

வீர எழுச்சி மிகு அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் நல்
வாழ்த்துக்களுடன்…

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

3 Responses to மாசிலா மன்னனே.. (தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்)

  1. selva சொல்கிறார்:

    மாசில்லா மன்னன்,எங்கள் ராஜராஜ சோழருக்கு கவிதை தந்த வித்யாவுக்கு நன்றிகள் பல.

    Like

  2. selva சொல்கிறார்:

    அவருக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s