ஒரு –
உயிர்போன உடலிலிருந்து
ஒவ்வொரு சொட்டாய்
சொட்டி எரிகிறது –
ஈழ விடுதலைக்காய் காத்திருந்த
அறுபது வருடக் காத்திருப்பின்
பொழுதுகளும்;
கைபாதி
கால் பாதியோடு
உறவுகளை தொலைத்துவிட்டு
உயிர் என்னும் –
ஒற்றை சொல்லில்
ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும்
எஞ்சியவர்களின்
விடுதளைக்காவது –
நான் பொறுப்பென
சபதம் –
செய்கிறதா தெரியவில்லை நெருப்பு;
மிக
ஒய்யாரமாக தன்
அகலக் கால் நீட்டி விழுங்குகிறது –
ஒவ்வொரு போராளிகளையாய்!
எரித்துக் கரிந்து
காற்றில் பறந்து – நாசி துளைக்கும்
சாம்பல்களின் ஒவ்வொரு
துளிகளிளிருந்தும் கூட
பிறப்பான் தமிழுக்கான போராளியென்று
நெருப்பிற்கு தெரிய வில்லை போல்;
தெரியப் படுத்தி தீபமேற்றுங்கள்
மாவீரர் தினத்தில்; தீபத்தின் வெளிச்சத்தில் –
பிறக்கட்டும் ஈழ விடுதலைக்கான உணர்வு
ஒட்டுமொத்த தமிழருக்கும்!
——————————————-
வித்யாசாகர்