எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு..
தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம்.
நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட காட்சிகளும், கண்முன்னே என் இனம் ஒவ்வொரு சிறகினையாக உதிர்ந்துக் கொண்டிருந்த கொடுமையும் உயிர் வரை பதிந்துள்ளது.