இரும்பெனக் கொண்ட இதயத்தில் தான்
எத்தனை எத்தனை ஓட்டைகள்
வாழ்வின் பயங்கள்..???
அத்தனையையும் –
அன்பினாலும்,
விட்டுக் கொடுத்தலாலும்,
உண்மை புரிதலாலும்,
விசால மனம் கொள்ளும் தெளிவிலும்
அடைத்து விடுகையில் –
நமை அறியாதெழும் நம் கம்பீரம்;
வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே!
இனிய அன்பு வணக்கம்!