ஓ.. மனிதா!
ஒரு கால தூர இடைவெளியில்
நிகழ்கிறது –
உனக்கும் எனக்குமான போர்;
நேற்றைய அண்ணன்
இன்றைய பங்காளிகளல்ல நாம்;
மனிதன் பிறப்பிலிருந்தே
சுயம் அறுக்காதவன் –
நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான்
எப்படி இன்றோ;
இடையே பிறந்து
ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது
பாசமும் நட்பும் காதலும்;
கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ
விதியென்றோ சொல்லி
விலகிக் கொள்கிறோம் –
உண்மை எல்லோராலும் விளம்பப் படுவதேயில்லை!
உண்மையை மரணம் பேசுகிறது
எல்லாம் உதறி தனியே செல்கையில்!
——————————————————
வித்யாசாகர்