Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

ஏய்.. பயங்கர வாத சமூகமே
என் மீது காரி உமிழ்வாய்
என் கருவருப்பாய்
என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய்
நான் எள்ளி நகைக்கவா?????

ஏனென்று கேட்டால் என்னை
தீவிரவாதி என்கிறாய்;

நீ சுட்டுப் பொசுக்குவாய்
புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய்
மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய்
வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய்
என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை
வெளியே எடுத்து –
நீ தானே.. நீ தானே… என
கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி
அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு
வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்………………

நீ போராளி?
நான் தீவிர வாதியா??????

பாருங்கள் உலகத்தீரே..
எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது
அப்படி வேடிக்கை பார்கிறீர்களே,
ரத்தம் உலகத்தீரே; ரத்தம்;

எங்கள் உயிர் பொருள் பாரம்பரியம்
அத்தனையும் பறிபோனது –
மிச்சமுள்ள அடையாளத்தையாவது
காத்துக் கொள்ள –
எத்தனை பேர் இனியும் மிச்சமுள்ளோமோ(?)!

தெல்லாம் தாண்டி –
எங்களின் போராட்டங்கள் திரிக்கப் பட்டும்
திரிக்கப் பட்டவை பரிகாசமாகவும்
பரிகாசம் விளம்பரமாகவும்
விளம்பர இடைவேளையில் –
ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவதும்
நியாயமா உலகத்தீரே?????

ங்களுக்கு உங்கள் தோள்கள் வேண்டாம்
எங்களிந்த போராட்டங்கள் –
உங்களுக்கானதும் என்பதை மட்டும்
நினைவில் கொள்க!

புது வருட கொண்டாட்டம்
மிக சிறப்பாக நடைபெறட்டும் –
எங்களுக்கான வலிகளும்
காயங்களும்
உயிர் துறந்த வீரர்களின் எண்ணிக்கையும்
அதற்கு காணிக்கையாகட்டும்!!

ஹேப்பி நியூ இயர்……
——————————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்... Bookmark the permalink.

4 Responses to Happy New Year – தமிழன் தானென் உலகமெனில்

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    மிக்க நன்றி சிவா..

    Like

  2. shanmugam சொல்கிறார்:

    very nice

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s