ஐயப்ப சாமியும் – தீட்டும்

ருமுடி கட்ட புறப்படுகையில்
எதிர்வீட்டு விதவை அக்கா
எதிரே வந்தாள் –
தீட்டுப் படவே-யில்லை ;

ங்கை தலை ஊத்திக் கொண்டாளாம்
வெளியே சென்று வீடு வருகையில்
மறந்து வந்து –
அண்ணாயெனக் கட்டிக் கொண்டாள்
தீட்டுப் படவே-யில்லை ;

ண்பர் –
ரஃபியின் மனைவிக்கு
குழந்தை பிறந்ததாய் சொன்னார்கள்
தூர நின்று பார்த்து வரலாமென்று சென்றேன் –
‘உள்ளே வாங்கண்ணா;
என் குழந்தையை தூக்கி பாருங்கண்ணா’ என்றாள்
தூக்கி பார்த்து முத்தமிட்டேன்
தீட்டுப் படவே-யில்லை;

ன் காலையே சுற்றிவந்த
நாய்குட்டி இறந்துவிட்டது
கொண்டு போய் எங்கள் வீட்டுத்
தென்னை மரத்தடியில் புதைத்துவிட்டேன்
தீட்டுப் படவே-யில்லை;

ன் நிழல் போல்
என்னோடிருக்கும் மனைவியை
நாற்பது நாள் தொடவேயில்லை
நாற்பத்தோராவது நாள் –
இருமுடி கட்டி எழுந்து நிற்கையில்
காலில் விழுந்து கும்பிட்ட போது
ஒரு சொட்டுக் கண்ணீர் – பாதத்தில் விழுந்து
‘பார்த்து போயிட்டு வாங்க’ என்றது;
தீட்டுப் படவே-யில்லை;

தீட்டுகளை எல்லாம்
மிதித்து துவைத்து –
தூர எறிந்துவிட்டு ஐயனிடம் சென்று
பதினெட்டு படி மிதித்து கீழிறங்கி
வந்த போது புரிந்தது –
தீட்டு யாரிடத்திலுமில்லை –
பார்ப்பதில் மட்டுமே இருந்தது!
————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s