மனிதன் தொலைத்த மனிதம்
வெகுநேரமாய்
பார்க்கிறேன் –
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;
எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;
என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,
ஒன்றுமில்லை – நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,
உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் –
கொண்டு சென்று
இலங்கையில்
கொடுப்பேனென்றது!
—————————-
வித்யாசாகர்