ஈழத்து வெளிக்குள்ளே;
ஈழத்து
முட்கம்பிகளுக்கு வெளியே
ஒரு பட்டாம்பூச்சி
பறந்து போனது..,
ஒரு குழந்தை
என்னிடம் வந்து –
அந்த பட்டாம்பூச்சியை
பிடித்துத் தரச் சொல்லிக்
கேட்டது;
அந்த பட்டாம்பூச்சிக்கு
இருக்கும் சுதந்திரம்
எனக்கில்லை யென
அந்தக் குழந்தியிட மென்னால்
சொல்லமுடிய வில்லை!
—————————————
வித்யாசாகர்