காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

யிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பத்தி ஆறாம் வருடம் ‘மே’ மாதம் இருபத்தி ஐந்தாம் நாள் பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்று, இரண்டாம் அப்துல்லா மன்னரால் ஆளப் படும் ஜோர்டானிய தேசம்.

ஐம்பத்தி ஒன்பதாயிறத்து ஐநூற்று அறுபது சதுர மைல்கள் நீண்டு பரப்பி, ஆறு கோடியே ஒரு லட்சத்து தொன்னூற்றி எட்டாயிரத்து ஆறுநூற்றி எழுபத்தேழு ஜனங்களை தாங்கிய ஜோர்டானின் தலைநகராகிய அம்மானில் நின்றுக் கொண்டு எட்டுத்திக்கும் ஒலிஎழுப்பி ‘இதோ ஒரு தமிழன் பேசுகிறான்.

“வணக்கம்!

என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்.

தென்னிந்திய தமிழ்நாட்டின் சென்னையின் ஒரு ஓரப்பகுதியான மாதவரமென்ற கிராமம் எனது சொந்த ஊர்.

மன ஆராய்ச்சியில் ‘ஆய்வியியல்’ முடித்து காற்றின் ஓசை யென்ற தலைப்பில் நானெழுதிய என் முதல் புத்தகம் தான் என் முதல் அடையாளம்!

உளவியல் சிந்தனை, இறைமையின் ஆழம், வாழ்க்கை தத்துவம் போன்றவைகள் பற்றி கருத்து பரிமாறி, மேடையில் பேசி புத்தகங்கள் எழுதி.. எழுதி.. எழுதி.. இன்று இதோ ஜோர்டானின் தலைநகர் கைதட்டியழைக்க இங்கு உங்கள் முன் வணக்கம் தெரிவித்து நிற்கிறேன்” என்று கைகூப்பி மாலன் ஆங்கிலத்தில் பேசி நிறுத்த, அரங்கம் தன் மெச்சலை கைதட்டலால் காண்பித்து.

ஜோர்டானின் தலைநகரில் ஒரு தமிழன் நின்று பேசுவதை கேட்க இத்தனை அந்நிய மக்கள் கூடி நிற்பதை அமைதியாய் கண்டு, குறிப்பெடுத்துக் கொண்டது காற்றும்!

‘மனிதமும் மேன்மையும்’ என்ற சேவை மையமொன்று சில நாடுகளை தேர்ந்தெடுத்து புதிய புதிய மக்களை சந்தித்து கருத்து பரிமாறி பிரசங்கம் செய்து மனிதம் வளர்க்க மாலனை தேர்ந்தெடுத்துள்ளது.

மாலன் நிறைய பேசுகிறார். நிறைய பேசுகிறார். அரங்கம் அமைதியாய் அவர் பேச்சிக்கு கட்டுண்டு கைகட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது. முடிவில்…

“ஒரு காற்றின் அசைவுகளுக்கு இடையே எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் பொதிந்திருக்கிறதோ; காற்றிடம் சற்று காது கொடுத்துக் கேட்டேன்- ‘வரலாறுகள் அத்தனையும் யாரோ ஒரு மனிதனின் மூளையில் உதிக்கும்- அந்த ஒரு நொடியில் உச்சரித்த வார்த்தையில் தான் புரட்டிப் போடப் பட்டுள்ளது. வரலாறுகள் குவிகின்றன.. வார்த்தைகள் குவிகின்றன.. காற்று வீசிக் கொண்டேயிருக்கிறது, தன் அசைவுகளின் அத்தனை இடுக்கிலும் காற்று இன்றும் எப்போதும் ஒவ்வொரு வரலாறினை சொல்லிக் கொண்டே தான் நகர்கிறது.

உண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது காற்று. காற்றை தான் நாம் சுவாசிக்கிறோம்.. காற்றில்லையேல் உயிரில்லை, காற்றில்லையேல் உயிரினங்களில்லை, காற்றில்லையேல் அண்டசராசரமும் கூட இல்லாது போயிருக்கலாம்.

அண்டசராசரத்தின் சூழ்சுமத்தில் காற்றிற்கும் ஒரு முக்கிய பங்குண்டு. அந்த காற்றிடம் உற்று கேளுங்கள். காற்றுக்கு காது கொடுங்கள். காற்றிடம் கேள்வி கேளுங்கள். அமைதியாய் அமர்ந்து எல்லாம் மறந்து கண்மூடி காற்றின் ஆழம் வரை மனக்கண் கொண்டு காற்றினை பாருங்கள். காதுகளின் துவாரம் வழியே காற்றினை மட்டும் உள்வாங்கி உலகம் அத்தனையும் மறந்து, காற்றினை.. சுவாசத்தை.. மட்டும் உற்றுப் பாருங்கள். கவனியுங்கள்.

சுவாசத்தை கவனிக்கையில், எல்லாம் மறக்கையில் சுவாசத்தை மட்டும் நினைக்கையில் சுவாசத்தின் வழியே காற்றின் குரல் கேட்கும். காற்றின் ஞானமத்தனையும் சுவாசம் வழியே உள்ளூர பரவி ஓம்ம்ம்ம்..மென்ற சப்தமெழுப்பும். உடல் பொருள் ஆவி அத்தனையும் ஒன்றென தோன்றும், எல்லாமுமாய் கலந்த ஒரு நிம்மதி பெருமூச்சி ஓம்.. ஓம்..ஓமென உள்ளே ரீங்காரமிட- அமைதியாய் அமைதியாய் அந்த ஆனந்தத்தை ரசிக்கத் துவங்குங்கள்.

ரசிக்க ரசிக்க, மெல்ல மெல்ல நாம் தெளிந்து வருவதையும் வாழ்வில் வென்று வருவதையும் ஊர் பேச ஆரம்பிக்கும். மீண்டும் மீண்டும் அமருங்கள். காற்றிடம் பேசுங்கள். காற்று பேசும். நிறைய பேசும். பேச பேச காற்றின்.. சுவாசத்தின் அடி ஆழம் புரிந்துவிடும். அது புரியும்போது மனசு தானாகவே அமைதியாகும். அந்த அமைதியில் தினமும் மூழ்க மூழ்க.. உலகின் அத்தனை ரகசியங்களும் புரிந்துவிடும். அந்த அமைதியை அடையும் வழி தான் தியானம்.

தியானம் செய்யுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள். காலையும் மாலையும் தியானம் செய்யுங்கள். அரைமணி நேரமாவது தினமும் அமைதியில் ஆழ்ந்திருக்க ஆழ்ந்திருக்க வெகுவிரைவில் தியானம் கைகூடும். தியானம் கைகூடினால் வாழ்வின் ஒவ்வொரு நகர்வையும் மிக நேர்த்தியாய் நமக்குச் சொல்லித் தரும், உலகின் அத்தனை சூழ்சுமத்தையும் சொல்லும் தியானம்.

வாழ்வின் சூழ்சுமத்தின் முடிச்சிகளில் தான் வெற்றித் தோல்விகளின் வரலாறுகள் பொதிந்திருக்கிறது. அந்த வரலாறுகளை நமக்கெல்லாம் எடுத்துச் சொல்லி வாழ்வின் சூழ்சுமத்தைப் புரிய வைக்கத் தான் காற்று வீசிக் கொண்டே இருக்கிறது.

காற்றை உள்ளிழுக்கையில், சுவாசம் காற்றிலிருந்து தான் உயிர்பெருகிறதென புரிகையில், காற்றும் சுவாசமும் ஒன்றென உணர்கையில்.. ‘அண்ட சராசரமும் நிறைந்த காற்று நம் சுவாசமாய் மாறுமிடத்தில் தான் – காற்றிற்கும் சுவாசத்திற்குமிடையே தான் கடவுளெங்கோ இருக்கிறாரென புரிந்துவிடும்.

ஆக, ‘காற்றிற்கும் – சுவாசத்திற்கும்’ ‘அண்ட சராசரத்திற்கும் – நமக்கும்’ இடையே இருக்கும் கடவுளை உணர.., புரிய.., காற்றின் சுவாசமாய் ஒன்றி கரைய ‘மனிதன் கடவுளாக; தியானம் ஒரு நல்ல ஆயுதமென்று” மாலன் பேசி முடித்து நிறுத்த..,

மனதில் இத்தனை நேரம் தாங்கியிருந்த அமைதியை மீறி ஜோர்டானின் மக்கள் கைதட்டி மகிழ்ந்து பிரியாவிடை கொடுத்து விமான நிலையம் வரை வந்து அவரை வழியனுப்பி வைக்க……..,

‘இதோ மாலனின் விமானம் ஜோர்டானிலிருந்து ஏமன் நாட்டிற்குப் பறக்கத் தயாராகிக் கொண்டிருந்தது.

————————————————————————————————–

காற்றின் பயணமின்னும் தொடரும்…

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , . Bookmark the permalink.

11 Responses to காற்றின் ஓசை (நாவல் – 1) தியானம்

  1. வித்யாசாகர் சொல்கிறார்:

    இனிய தோழர்களுக்கு,

    தியானம் வாழ்வினையே மாற்றியமைக்கும். நிறைய சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை பற்றி.

    அதை அனுபவத்தோடு உணர்ந்ததால் அதை எனை படிப்பவர்க்கும் உலக ரீதியாய் தர நினைத்தேன்.

    தியானம் எல்லாம் மதத்திலும் உண்டு. இந்துக்கள் ஓம் நமச்சிவாய என்பதும், கிறிஸ்துவர்கள் கர்த்தரை நோக்கி ஜெபம் செய்வதும், இஸ்லாமியர்கள் சுபான் அல்லா சொல்வதும் தியானம் தான்.

    என் நோக்கம் தியானத்தை பற்றி சொல்லி தியானம் செய்ய வைப்பது. பிறகு அதை எப்படி செய்ய வேண்டுமென்பதை அவரவர் முயற்சியும், மற்றும் அவரவர் கடைப்பிடிக்கும் மதமும் அவருக்கு தானாகவே முன் வந்து சொல்லித் தரும்.

    என் கடன், எந்த ஒரு மதத்தினைக் கொண்டும் தியானம் செய்யுங்கள் என்று சொல்லாமல் பொதுவாக தியானம் பற்றிய ஆர்வத்தை இப்-பாகத்தில் ஏற்படுத்துவதும் மற்றும் தியானம் செய்யுங்கள் என்று சொல்வதும் மட்டுமென நினைத்தேன். அதற்கு தான் காற்றினை வைத்து சொல்லியிருக்கிறேன்.

    ஓம் என்று குறிப்பிட்டது கூட ஒரு சப்தத்தை குறித்துக் காட்டவேயன்றி வேறில்லை.

    இன்னும் மனிதரின்; வாழ்வின்; உலக சூழ்சுமங்களின் ஒவ்வொரு அடையாளத்தையும் உங்களின் ஆர்வம்கண்டு விரைவில் எழுத முயல்கிறேன்.

    இந்த காற்றின் பயணத்திற்கு உங்கள் நம்பிக்கை தரும் பலமும் என் எழுதுகோலின் சக்தியாக இருக்குமென நம்புகிறேன்!

    இந்த முழு பயணத்திலும் நானுங்களிடம் வேண்டுவது.. ஏதோ ஒரு செய்தியாய் படித்து விடாமல் முழுமனதாய் ஒன்றி படித்துப் பாருங்கள் என்பதே. மிக்க நன்றி!

    பதில் எழுதுங்கள், காத்திருக்கிறேன்!

    இறைவன் அருளால்
    வித்யாசாகர்

    Like

  2. selva சொல்கிறார்:

    நல்லதொரு தொடர் நாவல் தியானத்தை பற்றி,ஆரம்பமே அருமை, இன்றைய மனித சுய மேம்பாட்டிற்கு மிகவும் தேவையானது தியானம்.மிகுந்த ஆவலுடன் அடுத்த பகுதியை எதிர்நோக்கி……

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி செல்வா. சமூகத்தின் அத்தனை அடையாளங்களையும் இயன்றளவு காட்ட துணிந்த நாவலிது. இறைவனை பற்றி சொல்ல எப்படி நம்பிக்கை தவிர வேறொன்ருமில்லையோ அப்படி தியானம் பற்றி சொல்லவும் ஆர்வம் தவிர வேறொன்றுமில்லை. அந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதே இந்த நாவலின் முதல் அத்யாயத்தின் நோக்கம், மீதமுள்ள ஒவ்வொரு அத்யாயமும் வாழ்வின் மற்ற தளங்களை காட்டுவதாகவே அமைக்கப் பட்டுள்ளது. விரைவில் வெளியிடுகிறேன்.

      மீதமுள்ள அன்பர்களின் ஆர்வம் பொருத்து நாவலுக்கான கூடுதலும் குறைவும் நிர்மாணிக்கலாம். மற்றவை இயற்கையின் நியதிக்குட்படுமென நம்புவோம். இறைவன் துணை என நம்புகிறேன்.

      தொடர்ந்து இயன்றளவு தங்களின் விமர்சனங்களை தர அனைத்து தோழர்களையும் கேட்டுக் கொள்கிறேன்..

      நன்றிகளுடன்..

      வித்யாசாகர்

      Like

  3. பிரகாஸ் சொல்கிறார்:

    உண்மை வரலாறு தெரிய வேண்டுமா? காற்றிடம் கேளுங்கள். காற்று வேறெங்குமில்லை, நமக்குள் தானிருக்கிறது.

    இந்த கற்றுக்குள்ளும் பல பரிமானங்கள் உள்ளது சகோ

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      வணக்கம் சகோ.. அன்பு வணக்கம்!

      நலமாக உள்ளீர்களா.. மலேசியா சிங்கப்பூரென சென்றிருந்தோம். அதனால் தான் ஒரு சின்ன இடைவெளியாயிற்று. ஆம்; காற்றின் வேகம் அறிந்தவர்களுக்கெல்லாம் அதன் சூழ்சுமமும் அறிய முடியுமானால் வாழ்வின் நீள அகலத்திலிருந்து, காரண காரியம்வரை அறிந்துவிடும். அதை ‘தனித்து உள்ளிழுத்து உணரும் தியானம் மற்றும் சுவாச பயிற்ச்சியிலும், அதின்றி; கடைபிடிக்கும் கண்ணியம் ஒழுக்கத்திலும் அறிந்துக் கொள்ளலாமென்று எண்ணுகிறேன் சகோ.

      Like

  4. Arul murugan சொல்கிறார்:

    Thanks for activating my interest on meditation.
    Could you tell me what are the benefits a human can get thro’ medidation? Hany any persons attained these benefits?
    Is it possible to get some extra-ordinary powers to fight against injustice and help people to always live honestly and happily?

    தியனத்தில் என் கவனத்தை திருப்பியதற்கு நன்றி.

    தியானத்தினால் மனிதனுக்கு என்னென்ன பயன் பெற இயலுமென சொல்ல இயலுமா? யாராவது அப்படி பெற்றுள்ளார்களா? அநீதிக்கு புறம்பாக போராடி, அப்பாவி மக்களை எப்பொழுதும் நேர்மையாகவும் மகிழ்வாகவும் வைத்துக் கொள்ளும் அபார சக்தியை தியானத்தால் பெற முடியுமா?? ?

    Like

  5. வித்யாசாகர் சொல்கிறார்:

    வணக்கம் அருள்முருகன்,

    நீங்கள் கேட்டதின் பேரில் “தியானமும் கடவுளும்” என்றொரு கட்டுரை எழுதிக் கொண்டுள்ளேன். விரைவில் வெளியிடுகிறேன். உங்களின் புரிதலுக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றிகள்.

    தியானத்தை, செய்ய மட்டுமே நினைத்தால்; ஆர்வம் கொண்டால் போதும், தியானம் செய்வதற்கான வழியையும் தெரிதலையும் தியானமே ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதே தியானத்தின் சிறப்பு!

    Like

  6. வித்யாசாகர் சொல்கிறார்:

    //தியனத்தில் என் கவனத்தை திருப்பியதற்கு நன்றி.

    தியானத்தினால் மனிதனுக்கு என்னென்ன பயன் பெற இயலுமென சொல்ல இயலுமா? யாராவது அப்படி பெற்றுள்ளார்களா? அநீதிக்கு புறம்பாக போராடி, அப்பாவி மக்களை எப்பொழுதும் நேர்மையாகவும் மகிழ்வாகவும் வைத்துக் கொள்ளும் அபார சக்தியை தியானத்தால் பெற முடியுமா?? ?//

    http://vidhyasaagar.com/2010/10/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%88-13-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE/

    Like

  7. babu சொல்கிறார்:

    Eventhough i learnt TM meditation, i did not pursue it citing so may flimsy reasons.. .After reading you are article , i again stated practising it. Thank you .

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க மகிழ்ச்சி சகோதரர் திரு பாபு. தியானம் பெரிய பலம். கண்டிப்பாக செய்யுங்கள். இன்னும் தியானம் பற்றி பொதுவான கருத்துக்கள் பதிவு -7 க்கு மேல் பதியப் பட்டுள்ளது. எழிலிருந்து பதினைந்து வரை தியானம் ஆன்மிகம் கடவுள் போன்ற பொதுக் கருத்துக்களே பேசப் பட்டுள்ளன. படித்து தங்களின் கருத்தை பதிவு செய்யுங்கள்..

      மிக்க அன்பும் வாழ்த்தும் நன்றிகளுடன் நிறைகிறேன்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக