பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!
ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;
ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து –
மனிதம் நிலைப்பதே இயற்கை;
கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்கி; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;
கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து –
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!
——————————————————————-
வித்யாசாகர்
“கோபம வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்கி; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி”
அழகான ஆனால் அழமான வரிகள் அண்ணா, இயற்கை இப்படி செய்யாவிடில் ,மனிதன் இயற்கையை கொன்று செயற்கையை வாழ முற்படுவான் ,அது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதையும் அறியாமல்
LikeLike
மிக்க நன்றிப்பா. உங்களின் ஆம் என்பதில் மெய்பட்டும்; ஆஹா என்பதில் தான் கவிதையும் ஆகிறது என் எழுத்து..
LikeLike