பணம்
பணம்னு அலைந்ததுல
பொணம் தின்னும்
பொழப்பு பாரு;
கந்து வட்டி
கிந்து வட்டின்னு
ஏழை ரத்தம்
இனிக்கும் பாரு!
சுட்ட உடம்பில்
சூடு போடும் –
மிருக குணம்
தொழிலு பாரு;
வாரமானா
வந்து நிற்கும்
மாடி வீட்டு
மைனர் பாரு!
கூரை –
பிய்த்து பிய்த்து எறிந்ததுல –
வீட்ட;
உசத்தி கட்டி சிரிக்கிறாரு;
வாங்கும் வட்டி
பணமெல்லாம்
ஏழை; விட்ட சாபம்
புரிஞ்சிப்பாறு!
ஒத்த வார்த்தை
பேசாம –
மெத்தனமா
உதவி பாரு;
வட்டிகடன்
விட்டெறிந்தா
பிறவி கடன்
இல்லை பாரு!
பசி யெடுத்தா
ஈரத் துணி
துணி கிழிந்தா –
குவளை தண்ணி;
உயிரு உருகி
போகுதய்யா –
வட்டி கடன் வேணாமைய்யா;
வட்டி கொட்டி –
கொடுத்து வாழ்ந்தா
பாடை வரை; பாரந் தா(ன்)யா!
———————————————-
வித்யாசாகர்
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்
என்னும் வசனத்தில் ஒரு வேந்தனே கலங்கும் கலக்கத்துக்கு கடனை உதாரனப்படித்தி உள்ளார்கள்
அப்படியானால் சாமானியர் நம் பாடு எப்படி அதை அழகாக சொல்லி …..
உயிரு உருகி
போகுதய்யா –
வட்டி கடன் வேணாமைய்யா;
வட்டி கொட்டி –
கொடுத்து வாழ்ந்தா
பாடை வரை; பாரந் தா(ன்)யா!
கடனுக்கு இத்தனை வலிமை
சகோ
ஆம் சகோ, கடன் படாத வாழ்க்கை; வாழ்க்கையாகிறது. மீறி படும் கடன், வாழ்வின் மற்ற இன்ப துன்பங்களை மறக்கடித்து கடனை மட்டுமே முன்னிறுத்திக் கொள்கிறது! கடன்நிம்மதிக்கு எமன்!