வெளிச்சத்தின் பிறப்பிடம்
இருட்டின் தாய் நிறம் – கருப்பு;
வண்ணங்களின் மூலாதாரம்
வாழ்வின் அஸ்தமனம் பேசும் – மொழி கருப்பு!
மூடதனம் தகர்க்க –
மூச்சு விட்ட புரட்சி நெருப்பு – கருப்பு;
சாஸ்திர சம்பிரதாய திநிப்புகளை
தகர்த்து எரித்த தீ நாக்கு – கருப்பு!
வெள்ளை போர்த்திய மனதின்
உள்ளிருக்கும் உண்மை கருப்பு;
மெல்ல மெல்ல நகர்ந்து – அமங்கள அர்த்தம் கொண்டுவிட்ட
மடத்தனம் கருப்பு!
முதிர்ச்சியின் மூல காவியம்
இனக் கிளர்ச்சிக்கு கரு சுமந்திட்ட –
ஆதி ஆதாரம் கருப்பு;
திருமண வைபவங்களில் ஒத்திவைக்கப் பட்ட –
கத்தி சுமக்காத நிறம் கருப்பு;
தெளிவு பிறக்காத புத்திக்கு –
கடைசி வரை கிடைக்கப் பெறாத ஞானம் கருப்பு;கருப்பு; கருப்பு!
—————————————————–
வித்யாசாகர்