காற்றின் ஓசை – (3) மரமும் செடியுமென் ஜாதி..

இதற்கு முன் நடந்தது..

ஏமனின் ஐந்தாம் நாள்!

மாலனின் ஜோர்டானிய பேச்சு ஏமன் நாட்டிலும் நன்கு விளம்பரம் செய்ய பட்டு நிறைய ஏமானியர்களை கூட்டி வைத்திருந்தது ‘மனிதமும் மேன்மையும்’ இயக்கம்.

இந்த நான்கு நாட்களில் ஏமனின் அதிகபட்ச நிறை குறைகளை கணக்கெடுத்துக் கொண்டதில் ‘அந்நாட்டின் முன்னேற்றம் பற்றியும்., கடவுள் பற்றியும்., தியானம்., வாழ்க்கை., உலக நிலை..பற்றியும் மிக துல்லியமாகவும் நிறையவும் பேசினார் மாலன்.

“இறக்கம் தொலைத்த ஹிட்லரின் நினைக்கப் பெறாத கருணை தான் இன்றுவரை ஹிட்லரை கொடுமையின் உதாரண சின்னமாகவே வைத்திருக்கிறது. அதே இரக்கத்தின் வடிவமான கருணை உள்ளம் தான் தெரசாவை இன்றும் நம் அன்னையாக நினைவுறுத்துகிறது.

கருணை காற்றின் இன்னொரு பாகம். மனதின் சக்தி கருணை. கருணையுள்ள மனம் தான் மீண்டும் மீண்டும் சக்தி கொள்கிறது. கருணை மனம் கொண்டவனுக்குத்தான் வாழ்க்கை விசாலமாய் தன் கதவை திறந்து வைக்கிறது.

ஓரு மனிதனுக்குள்ளிருக்கும் அத்தனை மேன்மையையும் வெளிக் கொண்டுவர கருணை ஓரு நல்ல ஆயுதம். எப்படி காற்றில்லையேல் உயிரில்லையோ அப்படி கருனையில்லையேல் அவன் மனிதனுக்குச் சமமாக மதிக்கப் படுவதுமில்லை. அதனால் தான் கருணை காற்றின் இன்னொரு பாகமென்றேன்.”

மாலன் பேசி நிறுத்த கூட்டம் பெரிதாய் கை தட்டி ஆரவாரம் செய்தது. மாலன் அவைகளை மீறி –

“நான் உங்களுக்கு இன்னொரு செய்தி சொல்கிறேன். இதுவரை நான் கூறிய இத்தனை சம்பாஷனைகளுக்கும் உதாரணமாய் ஓரு பெண் நட்சத்திரம் இருக்கிறார். அவரை பற்றி நானிங்கு சொல்லியே ஆக வேண்டும். அவர் யாராக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?”

மாலன் இப்படி ஓரு கேள்வியோடு நிறுத்த எல்லோரும் ஆர்வ மிகுதியில் அக்கம்பக்கம் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அவர் உங்களுக்கெல்லாம் தெரிந்தவராகக் கூட இருக்கலாம்”

கூட்டம் மிக ஆர்வமாக காது கொடுக்கிறது..

“யாரென்று நினைக்கிறீர்கள் தோழர்களே..”

மாலன் இந்தியரென்பதால் சிலர் இந்திராகாந்தி என்றார்கள்.

“இல்லை இல்லை அவர் ஓரு அரேபிய பெண்மணி..”

யார் யார் பெயர்களை எல்லாமோ சொன்னார்கள். மாலன் சிரித்தவாறே –

“நானே சொல்கிறேன் அன்பர்களே.. அவர் தான் மெஹல் மோனஹ்!! ஆம், ஜோர்டானிய இளவரசி மெஹல் மோனஹ். இரண்டாம் அப்தல்லா மன்னரின் மற்றொரு மனைவிக்கு பிறந்த ஒரே தவ புதல்வி தான் அந்த நம்பிக்கையின் நட்சத்திரம்!”

கூட்டம் வெகு ஆர்வமாகி விட்டது. ஓவென கத்தி ஆரவாரம் செய்து மெஹல் மீது வைத்திருந்த பெரு மதிப்பை தங்களின் கரவொலிகளாலும் கோசங்களாலும் வெளிப் படுத்தியது.

மாலன் சொன்னார்- “ஓரு நாட்டின் இளவரசி தனது அத்தனை அடையாளங்களையும் மறைத்துக் கொண்டு, ஏழ்மை நாடுகளுக்கு உதவ தன்னையே அற்பனித்திருப்பதென்பது.. வரலாறு தன்னில் பதித்துக் கொள்ளவேண்டிய பெருமை தான்”

ஆம்.. ஆமென்றது கூட்டத்தின் கரவோசை.

“நானும் மெஹலும் விமானத்தில் சந்தித்தோம். ஏதோ வாய்-பேச்சிற்கென்ன எதையும் சொல்லலாமென்று தான் முதலில் நினைத்தேன். விமான நிலையத்திலிருந்து விடைபெறும் சமையம் மறுநாள் வந்து சந்திக்கச் சொல்லி மெஹல்அழைப்பு விடுத்திருந்தார்..”

கூட்டம் மிக உன்னிப்பாய் கவனிக்க ஆரம்பித்தது.

“மெஹலை சந்திக்க மறுநாள் சென்றேன். அவர் அங்கிருந்து என்னை சோமாலியாவிற்கு அழைத்துச் சென்றார். அவரை சந்திக்கும்வரை எனக்கு அவரொரு நாட்டின் இளவரசி என்பது தெரியாது தான்”

அவரை தெரியாதென்பதற்கு ஓரு சிலர் ஹோய் எனக் குரல் கொடுத்தார்கள்.

பரவாயில்லை நம்மூரில் நம் மேதாவிகளை அப்படி இவரை எனக்குத் தெரியாதே என்று சொல்லியிருப்பின் முட்டை பறந்திருக்கும், இங்கு குரல் தானே கொடுத்தார்கள், கொடுக்கட்டும் என்று நினைத்துக் கொண்டார் போலும் மாலன்.

“நானும் மெஹலும் சோமாலியாவில் உள்ள தையா எனும் குக்கிராமத்திற்குச் சென்றோம். இதுவரை நான் காணாத ஒரு மக்கள் தையாவின் குடிமக்கள். ஊடகம் வாயிலாக பார்த்த வறுமை கதறலை அன்று தான் நேரில் கண்டேன். அந்த மக்களின் கண்ணீர் ஒவ்வொன்றும் என் இதயத்தில் இதுவரை காணாத ஒரு புது ரத்தமாய் சுரக்க ஆரம்பித்தது.. நிறைய கொடுமைகளை கண்டு விக்கித்துப் போனேன்”

மாலன் கண்கள் சற்றுக் கலங்கியது..

“தாய் பறவை கொண்டு வரும் ஒரு வாய் உணவிற்காய், சேய் குஞ்சிகளெல்லாம் ஓடோடி வந்த காட்சியது. எல்லோருமாய் ஓடிவந்து மெஹலை சூழ்ந்துக் கொண்டார்கள். மெஹல் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே இரு பெரிய வாகனம் நிறைய உணவுப் பொருள்களையும் இன்னொரு வாகனம் ஆடைகளையும் கொண்டு வந்து இறக்கியது. மெஹல் அங்குள்ள முக்கியமானவர்களை அழைத்து என்னென்னவோ கூறினால், அவர்கள் அரபு மொழியில் பேசிக் கொண்டார்கள். மெஹல் ஏதோ கட்டளை இடுகிறாள் அவர்களுக்கு, அவர்கள் சிரம் தாழ்ந்து அவளுடைய கட்டளையை ஏற்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. மெஹல் என்னையும் அழைத்து அவர்களிடம் அறிமுகப் படுத்தினாள். இருவரும் தனியாக வந்து ஓரிடத்தில் அமர்ந்தோம்”

ஏமானியர்களுக்கு மெஹல் ஒரு நாட்டின் இளவரசி, மிக அழகானவள், பெரிய பிரசுத்தி பெற்றவள் என்பது மட்டுமே தெரிந்ததிருந்தது. அதற்கான காரணங்களையும் மாலன் விளக்க ஆரம்பிக்க தூர நின்றவர்கள் கூட அருகில் வந்து சூழ நின்று கொண்டார்கள் மாலன் அங்கு அதற்கப்புறம் நடந்தது அத்தனையையும் விவரிக்கிறார்..

“எதையோ உனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாய் மெஹல்”

“ஆம். நிறைய வைத்திருக்கிறேன், அதனால் தான் கேட்டேன் என்ன செய்தீர்களென்று”

“போனது போகட்டும் மெஹல் அதை பிறகு பேசுவோம்”

“வேறென்ன வேண்டும் மாலன்?”

“இவர்களெல்லாம் சோமாலியர்கள் தானே, உன் குடி அல்லாதவர்கள் தானே? இவர்..”

“போதும் நிறுத்துங்கள் மாலன், யார் சொன்னது இவர்கள் என் குடி இல்லையென”

“நீங்கள் ஜோர்டானியர் இல்லையா?”

“ஆம். ஜோர்டானிய சிறுக்கி தான் நான்; எப்படியேனும் போகட்டும். அவர்கள் மனிதர்களில்லையா?”

“மனிதர்களெனில்?”

“மனிதர்களெனில் என் ஜாதி. ஓவ்வொரு மிருகமும் என் ஜாதி. காக்கை குருவி எறும்பு வரை.. அசைந்து அசைந்து நன்றி கெட்ட மனிதர்களுக்கு உணவு தரும் நன்றியுள்ள மரம் செடி கொடி வரை என் ஜாதி மாலன். யார் சொன்னது இந்த சோமாலியர் என் ஜாதியில்லை என்று?”

மாலன் பேசவில்லை, அவர் இத்தனை கோபத்தை அவளிடம் எதிர் பார்க்கவில்லை.

“மன்னிக்கவும் மாலன். ”

“இவர்களெல்லாம் உன்னிடம் இத்தனை அன்பும் தாய்மையும் போன்ற மரியாதையையும் வைத்துள்ளார்களே எப்படி, யாரிவர்களென்ற அர்த்தத்தில் தான் மெஹல் அப்படி கேட்டேன், நீ ஏன் இத்தனை கோபப் படுகிறாய்.. ”

“இது கோபமில்லை மாலன் அக்கறை. இந்த பாவப் பட்ட என் மனிதனிடம் காட்ட கடவுள் ஓவ்வொரு மனிதரின் ரத்தத்திற்குள்ளும் கரைத்து வைத்திருக்கும் என் பங்கிற்கான அக்கறை மாலன் இது. எங்கு உதவி வேண்டி ஒரு உயிர் தவிக்கிறதோ அங்கு மனிதன் ஒருவனாவது இருக்கவேண்டுமென்று இனியும் என்றிந்த அத்தனை மனிதனும் புரிந்து கொள்கிறானோ அன்று மட்டுமே மடியும் நீங்கள் சொன்ன அந்த எந்நாட்டிலும் காணும் குறை”

“ஆம் உண்மை தான் தோழி.., உன் கோபம் ஒரு தாய்க்குரியது. என்னை மன்னித்து விடு.., இப்போது சொல் நானென்ன செய்ய வேண்டும்?”

“முடியாது மாலன், அதை நான் சொல்லலாகாது, அது உங்கள் கடமை. அழும் மனிதர்களை கண்டு கண்ணீர் வர மறுத்தால் வரவேண்டாம்.. விட்டுவிடுங்கள், ரத்தம் வடியும் ஏழைகளை கண்டாலாவது ஒரு சொட்டு கண்ணீர் வராது உங்களுக்கு???

மாலன் பேசவில்லை, அவளை பேசவிடும் நோக்கில் மெஹலை பார்த்தார்.

“வரும். நிச்சயம் பார்ப்பவர் மனிதரெனில் வரும். அந்த கண்ணீர் உங்களுக்கு எவ்விடம் வருகிறதோ அந்த முதல் சொட்டு சொல்லும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை..மாலன்”

“மெஹல் என்னை என்ன கல்நெஞ்சன் என்று நினைத்து விட்டாயா? உன்னிடமிருந்து நான் நிறைய கற்று கொள்ள விரும்புகிறேன் எனவே நீ பேசு. ஆனால் உன்னை பற்றி நான் முழுமையாக தெரிந்துக் கொள்ள முயல்வது கூடவா தவறு..?”

“தவறில்லை என்ன தெரியவேண்டும் கேளுங்கள்”

மாலன் பேச வாயெடுப்பதற்குள்.. அவளே –

“இவர்கள் யாரென்று கேட்கப் போகிறீர்கள் அவ்வளவு தானே?”

“அதான் கூறினீர்களே யாரென்று. போதாதா?”

மெஹல் சிரித்துவிட்டாள்.

“கோபமா மாலன்?”

“உன்னிடம் கோபம் கொண்டால் நான் மனிதனில்லை மெஹல்”

“சரி சரி.. உங்களுக்கான பதில் இதோ,
உங்களை நான் இங்கு அழைத்து வந்த நோக்கம் என்னை பற்றி சொல்வதற்கல்ல. உங்கள் கேள்விக்கான விடையை நேரில் காண்பிக்க..”

“மெஹல் நான் உங்களிடம் எத்தையோ கேள்விகளை கேட்டேன் ஒன்றிற்குக் கூட..”

“பதில் சொல்லவில்லை என்கிறீர்களா மாலன்? நேற்று விமான நிலையத்தில் வைத்து ‘இது சமூக மொத்தத்தின் குற்றம் தனியாக நான் என்ன செய்ய’ என்றீர்களே அதற்கான பதிலை நேரில் காட்டத் தான் உங்களை இத்தனை தூரம் அழைத்து வந்தேன். நான்கு மக்களை நேரில் சந்தித்து பேசுபவர் நீங்கள்..”

மாலன் அவளை பெருமையாகப் பார்த்தார்.

“நான்கு மக்களை நேரில் சந்தித்து பேசுபவர் நீங்கள். உங்கள் மூலம், ‘முடியும் என்பதற்கு கருணை எப்படி ஆயுதமாகிறதென்று புரிய வேண்டாமா? அதற்குத் தான் அழைத்து வந்தேன்”

“பேசாமல் நீயும் என்னோடு வந்து விடு மெஹல்.”

“ஏன்?”

“நீ தான் நிறைய பேசுகிறாயே மெஹல். என்னை விட நன்றாகவும் பேசுவாய்”

“அது உங்கள் பணி. ஏன் வேலை அதல்ல. வாருங்கள் காண்பிக்கிறேன்..”

அவள் அவனுடைய கையை பிடித்து இழுக்க..

” எங்கே மெஹல், உன் சமூக பணி பறந்து விரிந்து இருக்கிறதோ”

“ஆம். நாமிப்போது இங்கிருந்து மரீன் என்னும் வேறொரு ஊருக்குச் செல்லப் போகிறோம்.. கிட்டத்தட்ட 4 மயில் தூரத்தை நடந்து கடக்கவேண்டும், அதும் ஊருக்குள் புகுந்தல்ல, இந்த பாலைவனம் வழியாக நடந்து போகவேண்டும்.. வாருங்கள் போவோம்”

“நடந்து நான்கு மயிலா, ஏன் மெஹல்?”

“சொல்கிறேன். அங்கு வந்து பாருங்கள். அங்கு உங்களின் அத்தனை கேள்விக்கான பதிலும் ரத்தம் வற்றி போய் சிலையாக காத்துக் கிடக்கிறது..
——————————————————————————————————-
எப்படி வந்ததந்த ரத்தம்? எங்கிருந்து வந்தது? ஏன் வந்தது? அடுத்த பதிவில் பாப்போம்.. அதுவரை…. காற்று வீசும்..தோழர்களே….

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காற்றின் ஓசை - நாவல் and tagged , , , , , , . Bookmark the permalink.

2 Responses to காற்றின் ஓசை – (3) மரமும் செடியுமென் ஜாதி..

  1. C.Rajarajacholan சொல்கிறார்:

    oru nimada kavidai mikavum arrumai

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      படிக்கும் வழக்கம் முடிக்கும் நேரம் கருதியே நாட்கள் நகர்கிறதே; எத்தனை எழுதினாலும் நிமிடமும் நொடிப் பொழுதுகளின் அளவிலான படைப்புகளே உள்ளம் வெகுவாய் தொடுகிறதே; எனினும் எழுத்து என் தாகம் லட்சியம் உயிர் வரை ஊன்றிய வேர். ஊடுருவும் வரை ஊடுருவட்டும்! மிக்க நன்றிப்பா!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s