கொசு (10)

சாக்கடை பிரிதிநிதிகளின்
பறக்கும் பட்டாளம்;

சமூக சீர்கேடர்களின்
கண்ணெதிர் ஆதாரம்!

பசிக்கு நோய் பரப்பும்
குழந்தைகளின் எம அவதாரம்;

விரட்டி விரட்டி விட்டாலும்
நசுக்கும் வரை ஓயாத அற்பத்தின் விலாசம்!

மனிதன் செய்யும் தவறுகளுக்கு
இயற்கை – மறைமுகமாக தீட்டிய
டிங்கு காய்ச்சல் திட்டம்;

சூரியன் அற்ற பொழுதுகளில்
ரத்தம் குடிக்கும் – கொசு – எஜமானியம்!

திட்டம் வேண்டாம் –
தட்டிவிட்டால் போதும்
மடியும் கொசு சமாச்சாரம்;

எத்தனை திட்டம் தீட்டியும்
ஓயாது பொலிந்த –
கொசு கொடுமை சாம்ராஜ்யம்!
——————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s