பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில்
முள்ளாய் குத்திய பூ;
பெண்ணின் தாவணி கனவுகளில்
மங்களமாய் மணக்கும் பூ!

மரண சாலையில் –
சுனாமி குவித்த பிணங்களாய்
கசங்கி மிதிபடும் பூ;

திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால்
திருப் பிரசாதம் பூ!

தெருக்களில் கூவி கூவி விற்றவளின்
வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ;
பூ பூவென கத்தியவளின் –நிறைய நாள் பசியில் –
முட்கள் பதித்த பூ!

முழம் வாங்கி முடிந்துக் கொண்டதில்
ஏழையின் வீட்டிலும் மணக்கும் பூ;
அழகும் மணமும் மிஞ்சிய செருக்கால்
முட்களை தாண்டியும் பறிக்கப் படும் பூ!

பூத்த இடத்தின் அடையாளம் தொலைத்து
வைத்த இடத்தில் அதிகாரம் செய்யும் பூ;
காய் கனி மரமென தழைத்த – விதையின்
முதல் நிர்வாணம் – பூ!
——————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s