காலத்தை
நிகழ்வுகளை
நினைவுகளாய் பதிந்துக்கொண்ட படம்!
சிரித்த
அழுத
உணர்வுகளின் நகலாய்
உயிர்பெற்றுள்ள –
‘என்றோ’ வான அந்த நாள்!
திரும்பக் கிடைக்காத
கடந்த காலத்தை –
காலப் பெட்டகம் தனக்குள்
குறித்துக் கொள்ளும் வித்தை!
கோழையை கூட
மிடுக்காகவும் –
துடிப்பாகவும் காட்டும்
போலி பிரதிபிம்பம்!
கடவுளையும்
காந்தியையும்
நம் வீடுகளுக்கு கொண்டுவந்த
விஞ்ஞான ஜாலம்!
விரல் சொடுக்கலில்
ஒரு வீட்டை; ஊரை
சின்ன காகிதத்தில் –
அடக்கிக்கொண்ட ஆச்சர்யம்!
என்னோடில்லாத அப்பாவை
நான் என்றோ ஓடியாடிய தருணத்தை
என் அக்காவும் நானும் –
கைகோர்த்து நடந்த நடையை கூட
நான்கு சட்டத்திற்குள் அடக்கி
என் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும்
உன்னத கண்டுபிடிப்பு புகைப்படம்!
————————————————————————
வித்யாசாகர்
விந்தையகத்தான் இருந்துவருகிறது மனித கண்டுபிடிப்புகள்.
இத்தனைக் காலங்கள் கடந்த பின்பும் அதன் மீதான மாயை குறையாமல் உள்ளது.
LikeLike
அந்த குறையாத மாயை தான் அதன் வளர்ச்சிக்கான உந்தெண்ணெய் கவி!
LikeLike
மிகவும் அருமையான கவிதை
புகைப்படம் ஒவ்வொருவரின் நிழல்படம்
மிக்க நன்றி
உங்கள் பனி மென்மேலும் தொடர்க
LikeLike
சில புகைப்படங்கள் பொய் சொன்னாலும்; நிறைய புகைப்படங்கள் உண்மை சுமந்துதான் காலத்திற்கும் நிலைத்துவிடுகிறது. தலைப்பு நீங்கள் கொடுத்தது தான் யமுனா. மிக்க நன்றி!
LikeLike