சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

தெருவுக்கு தெரு டாஸ்மாக்
வீட்டுக்கு வீடு தொலைகாட்சி
மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி
மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு
மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை!

படிப்பு முடியும் முன்னரே பாரின்
படித்து முடித்தாலும் வெட்டி சோறு
பாதி நாள் வேலைக்கு போனால் –
மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி
சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!

காமம் தெறிக்கும் பார்வை
காசு பிடுங்கும் அவசரம்
மாடி வீட்டு மீதேறி நின்று –
கீழிருப்பவன் மேல் எச்சில் உமிழத் துடிக்கும்
வெறி பிடித்துத் திரிபவர்களுக்கு –
ஒரு துளியும் வெட்கமில்லை!

முளைச்சி மூனெல விட்டா சினிமா
மூச்சு விடவும் கால் கழுவவும் ஜோசியம்
நாள்காட்டி பேர் சொல்லி –
நேரங்களை தொலைக்கும் மூட தனம்
வீட்டுக்கும் சோத்துக்கும் வாஸ்த்து பார்க்குற ஒருத்தனுக்கும்
வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமேயில்லை!

வாய் கூசாம கேட்கும் லஞ்சம்
ஏமாந்தவன் வண்டி மடக்கும் அசிங்கம்
போலீசுக்குப் பக்கத்துலையே நடக்கும் கொலை
அரசியல் வாதின்னா கொம்பு முளைத்த திமிரு
அரசு வேலை கிடைத்துவிட்டால் –
வங்கியிலும் தபால் நிலையத்திலும் கூட
அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்

என் தேச கொடி கனகம்பீரமாய்
பட்டொளி வீசி பறக்க உழைத்த
அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
——————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

15 Responses to சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

  1. raguraj சொல்கிறார்:

    சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!

    என் தேச கொடி கனகம்பீரமாய்
    பட்டொளி வீசி பறக்க உழைத்த
    அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

    innum en illiganin desa bakthikku idayam nirandha vazhthukkal

    Raghuraj
    President and Founder
    Sudarvamsam

    Like

  2. ப‌க‌ல‌வ‌ன் சொல்கிறார்:

    அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
    கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்

    ம‌ன்னிக்கவும் ந‌ண்ப‌ர் பூசாரி என்று த‌ய‌வு செய்து குறிப்பிட‌ வேண்ட‌ம். பூசாரி என்ப‌து நாட்டார் தெய்வ‌ங்க‌ளுக்கு பூஜை செய்ப‌வ‌ர்க‌ளை குறிக்கும். அவ‌ர்க‌ள் யாரும் இவ்வ‌ள‌வு தைரியமாக‌ க‌ருவ‌ரைக்குள் செய்ய‌ மாட்டார்க‌ள். ஏனென்றாள் அவ‌ர்க‌ளுக்கு தெய்வ ப‌ய‌ம் இருக்கும்.

    இவ‌ர்க‌ளை குருக்க‌ள் அல்ல‌து (அ)சாமி அல்லது அர்ச்ச‌க‌ர், அய்ய‌ர், பார்ப‌ன‌ர் என்று குறிப்பிட‌வும் இப்ப‌டி உய‌ர் தெய்வ‌ங்க‌ளுக்கு பூஜை செய்ப‌ர்க‌ள் தான் இவ்வாறு செய்வார்க‌ள்.

    எங்க‌ள் அய்யா பெரியாருக்கு பின்ன‌ர் இவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே தெய்வ‌ம் இல்லை என்ற உண்மை ந‌ன்றாக‌ தெரியும்.

    அத‌னால் தான் இவ‌ர்க‌ளால் கோவிலுக்குள் கொலையையும், க‌ற்ப‌ழிப்புக்க‌ளையும் தைரிய‌மாக‌ செய்ய‌ முடிகிற‌து.

    க‌விதை ந‌ன்றாக‌ உள்ள‌து.

    வாழ்த்துக்க‌ள்.

    ப‌க‌ல‌வ‌ன்
    குவைத்.

    Like

  3. 4TamilMedia Tamilnewspot சொல்கிறார்:

    இந்தக் கவிதையை எங்கள் தளத்தில் வெளியிட தங்கள் அனுமதி வேணடுகிறோம்.

    நன்றி!

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      தாராளாமாக வெளியிடுங்கள். இங்கிருந்து (www.vidhyasaagar.com) எந்த கவிதை வேண்டுமானாலும் எடுத்து நீங்களும் வெளியிடலாம். எழுத்து நாலு பேருக்கு சென்றடையத் தான் தூக்கத்தை விற்று வாங்குகிறேனே என் சகோதரத்துவமே.

      நன்றியறிவிக்கிறேன். தொடருங்கள்!

      Like

  4. ராஜ ராஜ சோழன் சொல்கிறார்:

    தவறு செய்பவகளுக்கு இது ஒரு நல்ல பாடமான கவிதை அண்ணா. அருமையான கவிதை அண்ணா.

    ராஜ ராஜ சோழன்

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; இது கண்ணியத்தோடு வாழும் அத்தனை பேரையும் தாண்டி; தவறு செய்பவர்களுக்கு மட்டும் உறுத்த வேண்டி எழுதிய கவிதை!

      நல்லவர்களுக்கு நிச்சயம் புரியுமென்றே நம்புவோமப்பா. மிக்க நன்றி சோழா!

      Like

  5. A.Venkatesan சொல்கிறார்:

    very good, The people will be come back one days

    Like

  6. swetha சொல்கிறார்:

    very nice poem

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s