தெருவோரம்
நடந்து சென்றேன்
இன்று குடியரசு தினம் வாவென
கொடி குத்திவிட அழைத்தார்கள்.
ஐயோ தேசிய கொடியாயிற்றே
சற்று பொறுயென்று சொல்லிவிட்டு
ஓடி –
குளித்து சுத்த ஆடை அணிந்துவந்து
தேசிய கொடியை –
மார்பின் மேல் குத்திக் கொண்டு
வீட்டிற்கு வந்தேன்;
என் ஒற்றை வயது குழந்தை
ஓடிவந்து –
கொடியை தொட்டு தொட்டுப் பார்த்தது
படாரென பிடுங்கி வாயில் வைத்து கடித்து
இரண்டாய் மூன்றாய் நான்காய் கிழித்து
கீழே வீசிவிட்டு –
ஹே… என்று சிரித்தது;
நான் கோபத்தில்
ஐயோ தேசிய கொடியாயிற்றே என
ஓங்கி ஒரு அரை விடப் போனேன்
கிழிந்திருந்த கொடித் துண்டுகள் கேட்டது-
‘நீ வெறும் கொடி குத்திக்கொண்டு
அலைய நினைத்தாய் –
அது கிழித்தாவது போட்டது!’
——————————————
வித்யாசாகர்
இலவசத் தொலைக்காட்சியில்,
நடிகர் நடிகைகளின் குடியரசு தின வாழ்த்தை,
கண்டும் கேட்டும் ,
உணர்வற்ற சடமாகித்தான் போனோம்.
LikeLike
வா.. கவி. ஒரு எழுதுகோலை தாங்கி பிடித்துக் கொள். தமிழாள் ஒரு எழுத்தாளனை சமூகப் பர்ராலனை தான் உன் மூலம் தாங்கி பிடித்துல்லால். என் கோபமும் உங்கள் கூற்றை சார்ந்தது தான்!
LikeLike
நல்ல வேளை வந்தது,
குடியரசு தினம் – உங்களை
குளிக்க வைக்க!!!
LikeLike
ஆம்; நாம் குளிப்பதையும் உண்பதையும் பொழுதை கழிப்பதையும் தான் சமூகத்தின் அக்கறையாகக் கொண்டுவிட்டோம். ஆயினும், சுயநலம் கொள்ளிலும் பிறர் வருந்தாது நடந்துக் கொள்வோமெனிலாவது; உயர்வென்றே மெச்சுவோம்!
LikeLike