என் எழுதுகோலை
பிடுங்கிக் கொள்வதாய்
எதிரே நின்று –
நிறைய பறவைகள் கத்துகின்றன;
என்னை பற்றியும்
எழுது – என்கின்றனவா,
என்னிடம் –
பாடம் கேள் என்கின்றனவா
புரியவில்லை!
என் எழுதுகோலை
பிடுங்கிக் கொள்வதாய்
எதிரே நின்று –
நிறைய பறவைகள் கத்துகின்றன;
என்னை பற்றியும்
எழுது – என்கின்றனவா,
என்னிடம் –
பாடம் கேள் என்கின்றனவா
புரியவில்லை!
மறுமொழி அச்சிடப்படலாம்
ஒரு வேளை அவையும் தங்களைப் போல கவிதை எழுது ஆசைப்படுகின்றனவோ!
LikeLike
அவை ஒவ்வொன்றும் கவிதை; கவிதைகள் அவைகளின் போதனையும்!
LikeLike
கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
LikeLike
மிக்க நன்றி குணசீலன்!
LikeLike
அவைகளிடம் நிறைய கற்க வேண்டும் தான்.
LikeLike
அவைகளை பார்த்ததில் பாதி கற்றோம். மவுனத்தின் வீரியம் அவைகளின் மொழி புரிந்துக் கொள்ள இயலாததில் வெளிப் படாமலில்லை!
மிக்க நன்றி கவி..
LikeLike
தங்களின் கவிதை அழகை ரசித்த பறவைகள், அது தங்களின் திறமையா அல்லது பேனாவின் திறமையா என அறிய ஆசைப்படுகிறது கவியே!!!
LikeLike
வாழ்வின் கொடுமைகள் தானென; அந்த பறவைகளுக்கு எப்படி சொல்வேன்!
LikeLike
ம்ஹும்
என்னைப்போல் சுதந்திரம் மனிதனுக்கு உண்டா எழுத்துலகில் தானும்…
என்று கேட்கின்றன…..
LikeLike
சுதந்திரத்தின் நீல அகலம் சில இடங்களில் குறுக்கப் பட்டும், சில இடத்தில் தானாகவே எடுத்துக் கொள்ளப் பட்டும் தான் ராதா, இன்றைய எழுத்துலகம் இயங்குகிறது.
போகட்டும், எழுத சுதந்திரம் உண்டா, இல்லையா ‘என்று கேட்பவன் சாமானியனாகி விடுகிறான். சுதந்திரத்தை கையில் எடுத்து, அதன்மூலம் பிறருக்கும் பிறருக்கு சுதந்திரத்தை கொடுக்க முடிந்தவனே படைப்பாளியாகிறான்.
எழுத்தாளனாகவும்!
LikeLike