நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு
உடல் சுட்டு இன அடையாளம்
காண்பித்தவன்!

இரத்தம் சுடும் உறவிருந்தும்
ஒதுங்கி நின்ற தமிழகத்தில் –
யுத்தம் புகும் உணர்வூட்டியவன்!

தொப்புள் கொடி உறவறுத்து
ஈழத் தமிழ் இனத்திற்காய் –
தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்!

யார் குற்றமும் பகிராமல்
என் போன்ற இளைஞன் குற்றமென
நெற்றி பொட்டில் நெருப்பெய்தி அறிவித்தவன்!

தமிழர்கள் எங்கோ கொன்று குவிக்கப் படுவதை;
செய்தித் தாள், வார இதழ், வானொலி, தொலைகாட்சி,
இணையமெல்லாம் தலைப்பு செய்தியாகி
சூடு சொரணையோடு
எல்லோரையும் – திரும்பிப் பார்க்க வைத்தவன்!

குடும்பத்தின் பெயர்
தேசத்தின் விலாசம்
என் மக்களின் எல்லை –
ஈழம் வரையென எரிந்து கருகி கர்ஜித்தவன்!

தன் உயிர் சுட்ட
நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!

ஏது செய்தும்; என்ன செய்வோம்
ஈழம் விட்டெங்கோ சென்று –
இனி அவன் நினைவு நாளில்
மறவாமலொரு மாலை போட்டு – நினைவு கொள்வோம்!
———————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

2 Responses to நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

  1. munusivasankaran சொல்கிறார்:

    //தன் உயிர் சுட்ட
    நெருப்பின் அனலில் அவன் முகம் பொசுக்கி
    நம் பனியன்களுக்கும் போஸ்டர்களுக்கும்
    படம் வரைந்துக் கொள்ள – உயிர் மை கொடுத்தவன்!//

    இனி… அவன் படத்தை பார்க்கும்போதெல்லாம் அவன் பற்றியெரிந்த வாசம் நினைவில் வரும்….

    Like

    • வித்யாசாகர் சொல்கிறார்:

      நினைவில் வரணும். அவனின்; உயிர் விட்டதற்கான அவசர அவசியம் இன்னும் நிறைய பேருக்கு புரியத் தான் வேண்டியுள்ளது. எல்லோருக்கும் புரிந்துவிடுமெனின், இனி உயிர்விட இருக்கும் முத்துக் குமாரர்களையும் உறவுகளையுமாவது காத்துவிடலாம்!

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s