மணமகன் : கோ.விஸ்வநாதன் மணமகள் : கு.புனிதா
நாள்: 04.02.2010
திருமண வாழ்த்து!
பூப்போல பூப்போல மனசிருக்கு
உனக்கு வாழ்வெல்லாம் இனிப்பான வளமிருக்கு;
தருசான நிலம் போல நீயிருக்க – உன்னை
உழுது எடுத்து உலகமளக்க வாழ்விருக்கு!
கடுகு மணி ரகசியம் தான் கத்திருக்க
முயற்சிக்கு மறு அர்த்தம் தெரிஞ்சிருக்க;
ஊருலகம் சேர்ந்து இப்போ வாழ்த்துதடா
உனக்கு மாலையிட்ட மங்கையையும் போற்றுதடா!
ஒரு சொட்டு கண்ணீரில் –
வாழ்த்து கணக்குதடா ,
நீ வாழ போற சிறப்பை சொல்ல –
வார்த்தை கிடைக்கலடா!
வாழ்ந்தோரின் வாழ்த்துக்களால்
மனசு பொங்குதடா;
நீ வாழ்வாங்கு வாழ பொண்ணு
கிடைத்துதடா!
நாளும் பொழுதும் வாழும் உயிரும்
ஒண்ணொன்னும் வாழ்வின் அனுபவம் தான்
அதில் நல்லதெல்லாம் கத்துகிட்டு –
உயர்ந்துக்கடா!
ஊரை விட்டு வந்தாலே பொண்ணு
யோசிக்குது;
இது கடல் தாண்டி புகுந்த உயிரு
போற்றி மெச்சிக்கடா!
பேரும் புகழும்; பார்ப்பவர் மகிழ்வும்;
சிந்தனை புதிதும்; சிங்கார சிரிப்பும்;
செல்வங்கள் பதினாறும் –
சொந்தமெல்லாம் கூடி வாழ்த்த பெற்றுக்கடா
தமிழ் போல சுற்றும் கதிர் போல
வட்ட நிலவின் மிதம் போல –
நீடூழி –
ஈருடல் ஒருயிருமாய் இருவரும் வாழுங்கடா.. வாழுங்கடா!
————————————————————-
அம்மாவும் நாங்களும்…
வணக்கம்,
குவைத் இல் உள்ள நம் நண்பர்கள் ஆகிய உறவினர்கள் அனைவரின் சார்பாக
எங்களின் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் தங்களின்
அன்பு தம்பிக்கு உரித்தாகட்டும். பதினாறு செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழட்டும். என்று மணமக்கள் வாழ நாங்கள் இங்கிருந்து அட்சதையும் மலரும் இட்டு ஆசீர்வதிக்கின்றோம்.
வாழ்க பல்லாண்டு.
நன்றி,
குவைத் வாழ் உறவினர்கள்.
LikeLike
மிக்க நன்றி என் உறவுகளே!
LikeLike
தமிழ்த்தோட்டம் நண்பர்கள் அனைவரின் சார்பாக
எங்களின் இதயம் கனிந்த நல் வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் தங்களின்
அன்பு தம்பிக்கு உரித்தாகட்டும். பதினாறு செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழட்டும். என்று மணமக்கள் வாழ நாங்கள் இங்கிருந்து அட்சதையும் மலரும் இட்டு ஆசீர்வதிக்கின்றோம்.
வாழ்க பல்லாண்டு.
நன்றி,
தமிழ்த்தோட்டம் நண்பர்கள்.
LikeLike
மிக்க நன்றி உறவுகளே!
LikeLike
மாலையோடு சேர்ந்து
மனதையும் பரிமாறி கொண்ட
இருமனங்களுக்கும்
உங்கள் வாழ்வில்
புரிதலும் புன்னகையும் ஒருங்கே அமைய
எனது வாழ்த்துக்கள்
– செந்தில் குமார்
LikeLike
மிக்க நன்றிப்பா! தம்பியிடம் உங்களின் வாழ்த்துக்கள் அனைத்தையும் தெரிவிக்கிறேன்!
LikeLike