என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு,
என் காத்திருப்பில் பூத்த
பரிமளமே!
என் கனவுகளை சுமக்க
உறவுற்ற உயிரே!
நான் வாழாத நாட்களில் தேடிய
தேடலின் அர்த்தமே!
இனி என் மீத நாட்களின்
சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….!
சந்தமுள்ள காதலியே…
சலங்கை குலுங்கிய தமிழ்
பேச்சழகே! வா…!
இதோ-என் வாழ்வின்
புதுமைகள் –
நீ கால் பதித்த இடத்திலிருந்து
பூக்க உள்ளது … வா…!
நாட்களாய் மணிகளாய்
நிமிடமாய் நொடிகளாய்
காற்றில் கரைதலின் மிச்சத்தில்
நீயும் நானும் சேர்ந்திருப்போம்… வா…!
முதன் முதலாய் உன் பார்வை
முதன் முதலாய் உன் தொடுதல்
முதன் முதலாய் உன் முத்தம்
முதன் முதலாய்-முதலாய்-முதலாய் உன்னில்
நானாக – நான் கரையப் போகும்
கனப் பொழுதுகளுக்காய் – காத்திருக்கிறேன்… வா…!
நீ நானாகவும்
நான் நீயாகவும்
நமக்குள் நம்மை தொலைத்து
உயிரற்று போகும் வரை தேடுவோம்… வா…!
உலக சமாதானத்தின் கொடி
நம் உறவின் நெருக்கத்தில்-
இழைத்து-திரிந்து-
காலத்தின் இன்னொரு கற்பித்தலுக்காய்
பிறப்பிப்போம் வா……!
———————————————
பரிமளக் கண்ணனுக்காக வித்யாசாகர்
அருமையான வரிகள்
LikeLike
நன்றி சிவா. நலமாக உள்ளீர்கள் தானே. நலமோடிருக்க வாழ்த்துக்கள்பா!
LikeLike
நலம் நலமறிய ஆவல்…
LikeLike
இறைவன் அருளாலும்; உங்களை போன்றோரின் அன்பாலும் மிக்க நலம் சிவா!
LikeLike