நீ சிரித்துப் பாடிய பாட்டெங்கே
உன் சிரித்த முகமெங்கே
நீ வளர்த்த வீரமிங்கே –
கண்ணீர் விட்டழுகிறதே;
உன் கருணை முகமெங்கே
காற்றில் தீராத உன் பாடல் – தொலைந்துப் போனதெங்கே
விடியாத ஈழ இருட்டில் மேலும் –
நீ பிரிந்த சேதி வலிக்கிறதே;
பெற்ற – தாய் காட்டுமுன் பாசமெங்கே
கொதித்தெழுமுன் கோப துடிப்பெங்கே
உயிர் மூச்சடிங்கி நீ போன தூரமாய் –
நெஞ்சம் கனக்கிறதே; கனக்கிறதே;
எந் தலைவனுக்குத் தந்த தோளெங்கே
போர் கணைகள் படைக்கும் திறமெங்கே
நீ பாடி வளர்த்த புரட்சியின் –
மீதி நினைவுகள் மிஞ்சி எரிக்கிறதே;
எம்; இந்திய முதல் பாசறை ஆண்ட துணிவெங்கே
உன் வெடிமருந்து புலமை போனதெங்கே
ஆயுதம் படைத்து நீ விட்ட ஆயுள்
இருபது – வருடம் கடந்தும் சுடுகிறதே; சுடுகிறதே;
உனை தேடிப் பார்த்த இடமெல்லாம்
நீ இறந்த தடமே கிடைக்கலையே –
நீ காற்றாய் கலந்த உண்மை மட்டும்
வெடித்த – சப்தம் கூறி அடங்கியதே;
காலம் கூறும் கதைகளையெல்லாம்
வரலாறு எழுதிக் கொள்ளும்; கொள்ளட்டுமே
ஈழதேசம் உள்ளவரை – பொன்னம்மான்
இருப்பதாகவே உள்ளம் நம்பும்; நம்பட்டுமே! நம்பட்டுமே!!
———————————————————-
வித்யாசாகர்
வலிக்கிறது…… வார்த்தை வர மறுக்கிறது
LikeLike
ஆம்; வலியில் புடம் போடவேண்டிய புரட்சி வீரனின் நினைவு தினமல்லவா. வலிப்பதில் தான் நாம் விழித்து வீருகொண்டெழ வேண்டும்!
LikeLike