சற்று –
நிமிர்ந்து பார்..
பாரடி;
என் முகத்திலென்ன
முட்களா பதித்திருக்கிறேன்
நீ பார்த்தால் –
குத்திவிட; பார்..
பாரடி;
நீ நீட்டி முழக்கிய
காதல் – ஸ்வாரஸ்யங்களுக்கு
யார்வந்து –
தடை சட்டம் போட்டார்களோ
போட்டிருக்கலாம்,
நானென்ன செய்தேன்?
பார்த்தாய் –
சிரித்தாய் –
பேசினாய் –
நான் காதலொழுகப் பேசியதை
ரசித்தாய் –
எழுதிய என் டைரிகளையெல்லாம்
கொண்டுபோய் படித்துவிட்டு
பதிலுக்கு –
ஆமென்று சொல்லாமல்
அத்தனைக்கும்
வெட்கத்தை பரிசளித்தாய் –
காதலிக்கிறேனென்று நான் சொன்ன
வருடமித்தனை கடந்தின்று –
தீ பார்வை சுமந்தென்னை
சுட்டெரித்தாலும் பரவாயில்லை
சுடாமல் செல்கிறாயே;
ஒரு முறை என்னை
ஏனென்று கேட்கும்
ஒரு பார்வைக்குக் கூடவா
உனக்குள் நானில்லை???
போ… செல்…
சென்று கடைமுனையில் கூட எனை
திரும்பிப் பார்க்காதே, போ..
நாளை யாரேனும்
நான் வேறு யாரையோ
திருமணம் செய்துக் கொண்டதாய்
சொல்வார்கள்;
வேறு யாரேனும்
என்னை காதலிப்பதாய்
சொல்வார்கள்;
சொல்கையில் –
ஒருசொட்டுக் கண்ணீர்
உனை மீறி சிந்துவாயெனில், பார்;
மாட்டாயெனில் – போ.. போ..
உன் கல் மனசிற்கு
நான் காதலித்த நாட்கள்
பரிசாகிப் போகட்டும்!
உன் மவுனத்திற்கு
என் மரணம் ஒரு சொட்டாய்
உன் கண்ணீரில் சிந்தட்டும்!!
—————————————–
வித்யாசாகர்
மிகவும் அருமை அண்ணா,சொல்ல வார்த்தைகள் இல்லை நெஞ்சை தொட்டன
LikeLike
நெஞ்சு சுடும் வலி உள்ளே வலிக்கையில்; இதுபோன்ற உணர்வுகளை உள்வாங்கும் நேரம் வார்த்தைகளற்றுத் தான் போகிறது. குற்றம் காலத்தின் மேலெனக் கொள்வோம் செந்தில். எல்லாம் சரியாகும், வருந்தாதீர்கள்.
கடவுள் உண்டெனக் கொண்டு உறுதியோடிருப்போம்!
LikeLike
anna super kadal kavidai supera eruku
LikeLike
மிக்க நன்றி சோழா..
உங்களால் எத்தனை ரசிக்க முடிகிறதோ; அத்தனை எழுதவும் எனை போன்றோரை பண்படுத்துகிறீர்கள் என்றர்த்தம். வருகைக்கு நன்றி!
LikeLike