சின்ன
சின்னதாய் தான்
ஆசை –
உன்னை தொட்டுப் பார்க்க,
உன்னை –
பார்த்துக் கொண்டேயிருக்க,
உன்னிடம் –
நிறைய பேச,
உன்னோடு வாழ,
என் காலம் முழுதும்
உன்னோடு மட்டுமே கழிய;
இதத்தனைக்கும் – நீ
ஒன்று சேய் போதும்
என்னை காதலி!
சின்ன
சின்னதாய் தான்
ஆசை –
உன்னை தொட்டுப் பார்க்க,
உன்னை –
பார்த்துக் கொண்டேயிருக்க,
உன்னிடம் –
நிறைய பேச,
உன்னோடு வாழ,
என் காலம் முழுதும்
உன்னோடு மட்டுமே கழிய;
இதத்தனைக்கும் – நீ
ஒன்று சேய் போதும்
என்னை காதலி!
மறுமொழி அச்சிடப்படலாம்
கவிதைன்னா இப்படி எழுதணும்.
இல்லைனா என்ன மாதிரி சும்மாவே இருந்துடலாம் ..
மனுஷன் என்னாமாய் எழுதராறைய்யா …
காதலில் விழாதவனையும் வீழ (விரும்ப) வைக்கும் கவிதைகள்…
This is what i quote in my mail by giving ur site link to my friends.
LikeLike
காதல் ஒரு உணர்வு தோழர். ரசிக்க தக்க, உள்ளூர அனுபவிக்கத் தக்க, ஆண்டாண்டு காலம் நினைவில் கொள்ள தக்க அன்பு காதல். அது எழும் எழும் இடம் பொருள் ஏவலறிந்து மெச்சப் படுகிறது.
உங்களின் பாராட்டுக்களில் காதல் கவிதையாய் ஊறத் துடிக்கிறது. ஆனால் பயமும் கொள்கிறது மனம். காதல் யார் சொல்லியும் வரக் கூடாதது. விருப்புவெருப்பறிந்து இணையும் இதயங்களில், அன்பினால் மட்டும் எல்லாம் மறந்து துறந்து மலர்வது காதல். அதன் பின்னும் அதை சிந்தித்து ஏற்க; மறுக்க; திடம் கொள்ள வேண்டிய சமுதாயத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்ற விளக்கத்தை சொல்லி வைக்கிறேன் தோழர்.
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
LikeLike
very nice
LikeLike
சின்ன சின்ன வார்த்தையில் – பெரிய பெரிய மனசிருக்கு;
பெரிய பெரிய மனசிற்கு – சின்ன சின்ன வார்த்தையிலும் வார்த்தைகளற்றுப் போவதிலும் உணர்வின் புரிதல் – உணர்வற்றுப் போதலில்லை..
மிக்க நன்றி உமா!
LikeLike
நல்ல ஆணை.. ஆம்…அதுபோதுமே.அங்குத்தானே சிக்கல்.
LikeLike
இருவர் மனத்திலும் முழு அன்பிருந்தால்; சிக்கலை அன்பு தீர்த்துவிடும் விஜய்!
LikeLike