சரிவிடு –
நீயும் நானும்
காதலிக்கிறோமென்று
வைத்துக் கொள்;
ஏன்????
இல்லையேல் இறந்து
போவேனென
பயந்துப் போனாயோ?
இல்லை இல்லை
காதலுக்கு முடிவு
இறப்பில்லை என்பதை
புரிந்தவன் நீ.
வேறென்ன?
உன்னை பார்த்துக் கொண்டே
செல்லும் வேறு
நிறைய கண்களை
வேறு எந்த
தீயிட்டு எரிப்பது?
இதற்கென்ன அர்த்தம்?
அக்கறை.
காதலால் அக்கறை கொள்கிறாய்???
ஆம்; அக்கறையும்
அன்பும் மட்டுமே காதலெனில்
நானும் காதலிக்கிறேன்!
நட்பையும் காதலிக்கலாமே…
LikeLike
நட்பை காதலிக்கலாம், நட்பை நட்பாக.
LikeLike