40. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

நீ யாரோடோ
பேசிக் கொண்டே
செல்கிறாய்.

அது நானாக
இருக்கக் கூடாத
என்றொரு ஆசை.

நானாக இருந்தால்
என்னசெய்வேன் –
என்கிறாயா???

வேறென்ன செய்வேன்
காதலிப்பேன்
காதலிப்பேன்
அப்படி காதலிப்பேன்!

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

10 Responses to 40. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

 1. Sundar சொல்கிறார்:

  It is not நானாக இருந்தாள் should be இருந்தால்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   தூக்கத்தை தொலைத்து மட்டுமல்ல, வேலைகளுக்கு இடையே கிடைக்கும் மீச்சிறிய; ஓய்வுமெடுக்கப்-படாத உழைப்புகள் தான் இங்கே எழுத்துக்களாய் பதிக்கப் பட்டு; உங்களின் வாசிப்பிற்குப் பின் கவிதையாக காத்துக் கிடக்கிறது தோழர்.

   இடையே எழுத்துப் பிழை வந்துவிட்டது. நிறையவும், சிலசமயம் காண்கிறேன் திருத்திக் கொள்கிறேன். எனினும் பணி பளுவிற்கிடையே எழும் உணர்வலைகள் கண்களை மறைத்து ஏமாற்றித் தான் விடுகையில் இப்படி சில எழுத்துப் பிழை மட்டுமல்லாது பொருட்பிழை கூட சிலசமயம் நேர்ந்து விட்டிருப்பதை பின்னால் அறிகிறேன்.

   தயைகூர்ந்து இந்த அன்பு சகோதரர் சுந்தரை போல் பெரிய மனது செய்து ஏதேனும் பிழை திருத்தம் தென்பட்டால் தெருவியுங்கள் தோழர்களே..

   சுந்தர் அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

   Like

 2. Tamilzhan சொல்கிறார்:

  அது அவன் காதலனேடு பேசிக்கொண்டுருந்தால்..?

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஒன்னும் செய்யான் பற்றில்லா.. பட்சே; நல்லா சிந்திக்கிறீங்க!

   என்று நகைச்சுவைக்காய் சொன்னாலும், பெண்களை தூர நின்று பார்க்கும் சிலர் இப்படித் தான் தவறாக கற்பனை செய்துக் கொள்கிறார்கள்; பின் அவர்கள் வருந்துவதில் எல்லோருமே ஆட்பட்டுவிடுகிறோம் என்பதையும் இங்கே வருத்தத்தோடு நினைவு கொள்கிறேன்.

   இந்த கவிதைகளெல்லாம் இதை பார்த்து காதலிக்க அல்ல. காதலித்தவர்கள் அசைபோட. காதலிப்பவர்கள் யோசித்து நடைபோட..

   ஒன்றிரண்டு கவிதைகள் பரவசம் கூட்ட எழுதினாலும் ஒன்றிரண்டு கவிதைகளில் இது தான் காதல். இப்படி இருந்தால் காதலி. இல்லையேல் வருத்தம் புரி; வேண்டாமென விட்டுவிடும் தெளிவு கொள் என்று ஆங்காங்கே கெஞ்சும் நோக்கம் தான் எனக்கானது.

   வருகைக்கு மிக்க நன்றி அன்பரே!

   Like

   • Tamilzhan சொல்கிறார்:

    நல்ல விளக்கம் ஜீ அப்படியே நம்ம தளத்துக்கும் வந்துட்டு போங்க ஜீ…!!

    Like

   • வித்யாசாகர் சொல்கிறார்:

    நான் பிற வலைதளங்களுக்கு வரப் போவதில்லை என்று சொல்லவில்லையே. வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஈகரையின் வளர்ச்சி மகிழ்ச்சியையே தருகிறது. ஆனால், எழுதுவதில்லை என்று முறையிட்டிருக்கிறேன் ஜி. எங்கிருந்தாலும் உங்களின் நினைவுகள் உண்டு.

    என் அடுத்த ஒரு புத்தகமே ஈகரை உறவுகளுக்குத் தான் சமர்ப்பணம் செய்வதாக எண்ணம் கொண்டுள்ளேன். நன்றி மறப்பது நன்றன்று!

    Like

 3. Tamilparks சொல்கிறார்:

  அருமையாக உணர்ந்து எழுதியுள்ளீர்கள், பாராட்டுக்கள்

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   உணர்ந்ததும் வாழ்ந்ததும் ஒரு காலமுண்டு; அதை பகிர்வதில் தோழமை வளர்த்து வாழ்வின் நல்ல வழி பேணுவதே ஒரு எழுத்தாளனின் கடனென நினைக்கையில்; அனைவரின் ஆர்வம் கருதி காதல் ஜொலிக்கிறது நம் வலையில். நூறு கவிதை வரை தொடரும் இக் காதல் பயணம்.

   பின்….

   பின் யோசிப்போம். வருகைக்கு நன்றி தமிழ்த்தோட்டம்!

   Like

 4. விஜய் சொல்கிறார்:

  என்ன வெறி…

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   இது பெரு ஏக்கமென்று சொல்லலாம் விஜய். வெறிக்கு அன்பு தெரியாது காமம் குழைந்திருக்கும் வெறியில். காமக் கண் கொண்டவர்களுக்கு இத்தனை காதலிக்க வராது! இது ஒரு ஆழமான அன்பு!

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s