42. இப்படி ஒருமுறை காதலித்துப் பாருங்க!

மனோ: காதலென்றால் என்ன?

மகி: எனக்கென்ன தெரியும்,
நீ தான் அப்படியெல்லாம்
பீத்துற

பீத்துலடி அசடு
நெசம்மாவே நானுன்னை
காதலிக்கிறேன்

அப்ப நீயே
சொல்லு –
காதல்னா என்ன?

ம்ம்ஹ்..ஹூம்
நானென்ன காதல்னா என்னன்னு
டிப்ளோமா வரை
படிச்சிட்டு வந்தா காதலிக்க முடியும்

அப்படியா
காதலுக்கு கூட
டிப்ளோமா இருக்கா

அசடு அசடு
அதில்ல

சரி விடு
காதல்னா என்ன சொல்லு?

மூடின கண்ணை திறந்தா
திறந்த கண்ணை மூடி
கண்ணுக்குள்ள பார்த்தா
காதல் தெரியும்;
அதுக்கு மனசு முழுக்க
அன்பிருக்கணும்.

அன்பிருந்தா???????????

அன்பிருந்தான்ன்னா
அன்பிருந்தா காதல்;
அவ்வளவு தான்.

ஹே……………………
பாரேன் பாரேன்
இந்த பட்டிக் காட்டானுக்கு
இதலாம் பேசவருமா?

பட்டிக்காடோ
பணமோ இல்லடி
காதலை நிர்ணயிக்கிறது;
மனசு!

மனசு தான் காதல்னா
இத்தனை காலமா
சமூகம் எதிர்க்குமா?
வயசும் காதல்.

வயசில்லாம
காதலில்ல,
ஆனா –
மனசு தான் காதல்.

சரி விடு,
வயசும்
மனசும்
காதல்னு வெச்சிக்கலாம்.

விட்ரதென்ன –
வயசுக்கும்
மனசுக்கும்
கண்ணு திறந்திருந்தா
வருவது தான் காதல்.

கண்ணு திறக்காத
வயசும் மனசும் கூட
இருக்கா?

ம்ம்ம்ம்ம்ம்…..
அன்புன்னா என்னன்னு
சரியா சொல்லிக் கொடுத்தா,

தேவையானவரை
அன்பை கொடுத்து
வளர்த்திருந்தா…,

பெண்களை
நட்பை
வாழ்வின் லட்சியங்களை
புரியிற மாதிரி விளங்கவைத்தால்,

ரசனையின் அர்த்தத்தை
உறவுகளின் அருமையை
பிரிவின் வலியை
எப்படி வலிக்கும்னு சொல்லிக் கொடுத்தா,

பெண்ணை தாய்மையோடும்
சகோதரியுணர்வோடும் பார்த்து
உடல் போதை அளவை
இதுவரை; இங்கிருந்து தேவைன்னு
புரியவைத்தால்
வயசின்.., மனசின்.. கண்
அந்தளவுக்கு உடனே திறந்துக்காது.

அப்போ –
காதலிக்கிறவங்க இதலாம்
புரியாம தான்
காதலிக்கிறாங்களா?

இருக்கலாம்.
ஏன்னா காதலிக்கிறவங்களுக்கு
இது காதல்ன்ற ஒரு
வார்த்தையே
அவசியமியில்லை;
ஆனா சொல்லிக்கிறாங்க.

சொல்லிக்காம எப்படிடா
காதலிக்கிறேன்னு
ஒருத்தர் கிட்ட ஒருத்தர்
வெளிப் படுத்தறது?

அது சொல்லிக்காம
நிகழும்.
சொல்லிக்கறதெல்லாம்
அவசியமிருக்காது மகி;
என்னமோ கடையில வாங்குற
கத்திரிக்கா மாதிரி..
விடு விடு.. இந்த காலம்
இப்படித் தான்.

அப்போ –
நான் உன்னிடம்
காதலிப்பதாவும்
நீ என்னை –
காதலிப்பதாகவும் சொன்னதெல்லாம்????

நமக்கெல்லாம்
காதலிக்கவே தெரியலை
நம் காதல்லாம் இப்படித் தான்
சினிமா மாதிரி.

அவன் பெருசா ஏதோ
சொல்லுவான்னு பார்த்தேன்
இப்படி பச்சையா ஒத்துக்குவான்னு
நினைக்கல.
அவன் சொல்வதை
கேட்கவும்
திரும்ப எதையோ சொல்லவும்
வெட்கமாக இருந்தது.
நம்மல சுத்தின உலகம்
அப்படித் தான் –
நினைவு தெரிஞ்சிட்டா சினிமான்னும்
வயசு பதினாறை தொடும் முன்னே
காதல் காதல்னும்..
ச்சே ச்சே லட்சியமே இல்லாம
சுத்துற நிறைய பேர்.., பாவம்.

காதல் கொடுத்து வாழ்க்கையை
வாங்கணும்,
வாழ்க்கைய கெடுத்து
காதல் வாங்குற நிறையபேர்
நம்ம சுத்தி உருவாவறாங்க.

காதல் அநிச்சயா எழாம
செயற்கையா இருக்கு.

தற்கொலை
பெற்றோர் தவிப்பு
லட்சியமின்மை
புத்தி சிதறல்
பெண்களை போதையா
பார்க்கும் மனோபாவம்
இதுக்கெல்லாம் காரணம் இந்த காதலும்
அதை வைத்து சம்பாதிக்கத் துணியும்
திரைப்படங்களும் தானோன்னு தோணுது.

இருந்தாலும் –
காதல் இனிப்பதாகவே
ஒரு உணர்வோடு வளர்ந்து விட்ட
என்னால் அவனிடம் எதிர்த்து
பேசமுடிய வில்லை தான்.

வாவென அவனின்
கைகோர்த்து நடந்து
அவன் தோள் மேல்
சாய்ந்துக் கொள்கையில்
ஏதோ இதமாகவும்
மனதிற்கு இது தேவையாகவும் இருந்தது.

இந்த தேவை தான்
எல்லாவற்றையும் மறக்கடிக்கிறதோ என
நினைத்த நினைப்புகளில்
அவனை இறுக்கமாக இறுக்கிப்
பிடித்துக்கொள்ள

காலில் படும் புள் வெளியின்
ஈரம் சிலிர்ப்பேற்படுத்தியதும்
மேலே விழுந்து நனைக்கும்
பணி மழையில் –
நானும் அவனும் நனைந்து போனதும்
காதலால் தானே!!

என்ன மகி
அமைதியா வர

ஒண்ணுமில்ல மனோ
நீ தூண்டிவிட்டதன் விளைவு

சரி, நேரமாயிடுச்சி
நான் சொன்னதெல்லாம்
நினைவிருக்கட்டும்
இதோடு நாம ஐந்து
வருடம் பொருத்து தான் சந்திக்கப் போறோம்.

இந்த ஐந்து வருடம் தான்
நம் அன்பின் வலிமையை
உலகிற்கு காட்டப்போது

இந்த ஐந்து வருடத்துல
உனக்கான அடையாளத்தை
நீ ஏற்படுத்து.
எனக்கான அடையாளத்தோடு நானுன்னை
சந்திக்கிறேன்.

உலகம் நம்மை புகழும் புகழ்ச்சியில்
நம்ம அப்பாம்மா
நம்ம அன்பை புரிந்து
நம்மை சேர்த்து வாழவைப்பாங்க.

ஆமாம் மனோ,
நம் காதல் நம் வாழ்க்கைக்கானது.
போய்ட்டுவா..

அவன் கையசைத்து விட்டு
திரும்ப வந்து கட்டி
ஆலிங்கனம் செய்துவிட்டு
அதோ போகிறான்.

ஒரு பெண்ணிற்கும் தக்க
அடையாளத்தை ஏற்படுத்தும் ஆண்கள்
இனி புறப்பட்டுவிடுவார்களென
கையசைத்துவிட்டு
ஐந்து வருடம் கழித்து சந்திக்கப் போகும்
நம்பிக்கையில் –
எனக்குள் அவனும்
அவனுக்குள்
நான் மட்டுமாய்
இருவரும் விடை கொள்கிறோம்!
————————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in காதல் கவிதைகள். Bookmark the permalink.

12 Responses to 42. இப்படி ஒருமுறை காதலித்துப் பாருங்க!

 1. uumm சொல்கிறார்:

  hello what is this….suupperbaaa……

  Like

 2. Mano.. சொல்கிறார்:

  என்னை கதாநாயகனாக்கி விட்டீர்கள் வித்யா? அருமையான விளக்கங்களையும்; காதல் எந்த அளவிற்கு அவசியமென்பதையும்; வாய்கிழிய பேசும் பெண்ணடிமை ஒழிப்பை மிக யதார்த்தமாய் சொன்ன வித்யாவிற்கு பாராட்டுக்கள்.

  இன்னும் நிறைய எழுதுங்கள் வித்யா. படிக்க ஆவலாக காத்து இருக்கிறோம். ஒரு மாணவனாக என் நன்றிகள் பல வித்யாவிற்கு.

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   நன்றிகளை வெறும் எழுத்துக்களால் மறைத்துவிடமுடியவில்லை மனோ. வாழ்க; வளர்க! நான் பெற்ற நன்வழிகளை எனை படிப்போருக்கு வழங்குவதே என் பணி. கடன். அது சற்று தெருமுனை சுற்றியாவது உங்களை போன்றோரை வந்தடையும். எதற்கும் தீர்ப்பெழுதுவது எவருக்கும் வேண்டாதது, இங்கிருந்து சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதே என்னால் இயன்றது. காரணம், என்னை காட்டிலும் உங்களுக்கு நல்லா முடிவு கிடைக்கலாம். என்னை காட்டிலும் நீங்கள் மலர்ச்சியாக சிந்திக்கலாம்.

   சிந்தியுங்கள் மனோ. நம் சிந்தனைகள் ஒன்று கூடி நாளைக்கான நல்லா சமுதாயத்தை உருவாக்கித் தரட்டும்! மிகக் நன்றி!

   Like

 3. C.Rajarajacholan சொல்கிறார்:

  காதல் செய்பவர்கள் பிரியும் போது ஏற்படும் சுகமான இனிமையான நினைவுகளை அருமையாக சொன்ன வித்யா அண்ணாவிற்கு என் வாழ்த்துக்கள்……….

  Like

 4. விஜய் சொல்கிறார்:

  //தற்கொலை
  பெற்றோர் தவிப்பு
  லட்சியமின்மை
  புத்தி சிதறல்
  பெண்களை போதையா
  பார்க்கும் மனோபாவம்
  இதுக்கெல்லாம் காரணம் இந்த காதலும்
  அதை வைத்து சம்பாதிக்கத் துணியும்
  திரைப்படங்களும் தானோன்னு தோணுது//

  //வயசு பதினாறை தொடும் முன்னே
  காதல் காதல்னும்..
  ச்சே ச்சே லட்சியமே இல்லாம
  சுத்துற நிறைய பேர்.., பாவம்//

  //அது சொல்லிக்காம
  நிகழும்.
  சொல்லிக்கறதெல்லாம்
  அவசியமிருக்காது மகி;
  என்னமோ கடையில வாங்குற
  கத்திரிக்கா மாதிரி..
  விடு விடு.. இந்த காலம்
  இப்படித் தான்//

  //ஏன்னா காதலிக்கிறவங்களுக்கு
  இது காதல்ன்ற ஒரு
  வார்த்தையே
  அவசியமியில்லை//

  //பெண்ணை தாய்மையோடும்
  சகோதரியுணர்வோடும் பார்த்து
  உடல் போதை அளவை
  இதுவரை; இங்கிருந்து தேவைன்னு
  புரியவைத்தால்
  வயசின்.., மனசின்.. கண்
  அந்தளவுக்கு உடனே திறந்துக்காது//

  அன்புன்னா என்னன்னு
  சரியா சொல்லிக் கொடுத்தா,
  தேவையானவரை
  அன்பை கொடுத்து
  வளர்த்திருந்தா…,
  பெண்களை
  நட்பை
  வாழ்வின் லட்சியங்களை
  புரியிற மாதிரி விளங்கவைத்தால்//

  //ரசனையின் அர்த்தத்தை
  உறவுகளின் அருமையை
  பிரிவின் வலியை
  எப்படி வலிக்கும்னு சொல்லிக் கொடுத்தா//

  wow…. enna solrathu..

  காதலைப்பற்றிய சரியான புரிதல் இல்லாத இளம்வயதினர் கண்டிப்பாக படித்தல் நன்று. அவ்வளவு அருமையாக வடித்திருக்கிறீர்கள். உரை நடையா, கவிதையா…அருமையான அறிவுரை. அழகான விளக்கங்கள். எனக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு வரியும் உணர்ந்து அனுபவித்து வார்த்தைகளுக்காக/படைப்பிறகாக மட்டும் அல்லாமல் உணர்வுபூர்வமாக வந்திருக்கிறீர்கள். வெகு நேர்த்தி. கருத்தின் ஆழம் மிக அழகாக கையாளப்படட்டிருக்கிறது. இரண்டு காரக்டரின் மூலமாக ஒரு உயர்ந்த அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது இங்கு. ஒரு குரு நாவலை படித்தளவு கருத்து. அருமையான பிரக்டிகலான உறை. எனது பாராட்டுகள்

  நூலாக பப்ளிஸ் பண்ணலாமே

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   உங்கள் அன்பிற்கும் சமூக அக்கறைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி. உங்களை போன்றோருக்காகத் தான் என் எழுத்து. அழகாக வரிவரியாக உள் வாங்கியுள்ளீர்கள். இன்னும் நிறைய படியுங்கள். நிச்சையம் இதிலுள்ள நல்ல பதிவுகள் புத்தகமாக வந்துகொண்டே தான் இருக்கும்.

   மிக்க நன்றி விஜய்!

   Like

 5. siva சொல்கிறார்:

  superb…. அருமை அருமை … fantastic…

  Like

 6. munusivasankaran சொல்கிறார்:

  //காதலிக்கிறவங்களுக்கு
  இது காதல்ன்ற ஒரு
  வார்த்தையே
  அவசியமியில்லை//

  காதல் கடலில் விழுந்தேன்; இதோ ஒரு முத்து கிடைத்தது!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s