உன் கைப்பையில்
என்னென்னவோ
வைத்திருக்கிறாய்
இடையே என் புகைப்படம் கூட
வைத்திருப்பதாய் –
உன் தோழி சொன்னாள்;
உன் காதலின் அர்த்தம்
நீ திரும்பிப் பார்க்காமல் செல்வதில்
வலிக்கத் தான் செய்தது;
சரி போடி என
விட்டுத் தான் பார்த்தேன் –
நீ அலைந்து அலைந்து என்னை
தேடியதில் –
உயிர் கொள்கிறது
உனக்கான காத்திருப்பு!
காத்திருப்பில்தான் காதலிருப்பு.
LikeLike
ஆம்; வருகைக்கு மிக்க நன்றி!
LikeLike