உலகெல்லாம்
எத்தனையோ பேர்
காதலிக்கிறார்கள்;
காதலில் தோல்வி
என்கிறார்கள்;
காதலால்
தற்கொலை என்கிறார்கள்;
காதலித்தால்
தனிக் குடும்பமாய்
போவோம் என்கிறார்கள்;
காதல் ஏதோ
கொடுப்பதும்
வாங்குவதும் என்கிறார்கள்;
அதலாம் தான்
காதலென்றால் –
யாரேனும் கேட்கும் போது
நீயும் நானும்
காதலிப்பதாய்
சொல்லவே சொல்லாதே.
காதலிப்பது –
யாரிடமும் சொல்வதற்கல்ல
காதலிக்க.
காதலென்பது –
எனக்கும் உனக்குமான
அன்பை
உடனுள்ளோருக்கும்
பறைசாற்ற.
காதலென்பது
எங்கோ பிறந்து
எப்படியோ வளர்ந்து சேரும்
இரண்டு ஆண் பெண்
பாலினத்திற்குள் இருக்கும்
உறவை –
மனதால் சேர்த்துவைக்க.
காதலென்பது
நமக்குள்ளிருந்து
சமூகம் வரை எட்டி-
ஜாதிமத பேதம் களைந்து
காதலாய்.. காதலாய்.. காதலாய் பரவ!
o.k. nnnnaaaa…
LikeLike
ஆமென்றதில், கவிதை மெய்ப்பிக்கப் பட்டது. மிக்க நன்றி!
LikeLike
காதல் வரிகள் அருமை, வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை, அருமை
LikeLike
நீங்கள் அருமை அருமை என்று சொல்லும் ஒவ்வொரு அருமையும் என்னை மானசீகமாய் வாழ்த்தும். அதைவிட வேறு வார்த்தை என்ன தமிழ், மிக்க நன்றி!
LikeLike
நீங்கள் அருமை அருமை என்று சொல்லும் ஒவ்வொரு அருமையும் என்னை மானசீகமாய் வாழ்த்தும். அதைவிட வேறு வார்த்தை என்ன தமிழ், மிக்க நன்றி!
LikeLike
மிக்க நன்றி உவைஸ் யூ லிப்பே! மெச்சுதலில் மனம் இன்னும் மேலே வாவென வாழ்த்தத் தானே செய்கிறது!
LikeLike