எத்தனை லட்சியங்கள்
உனக்கும் எனக்கும்;
படிக்க வேண்டும்
நன்றாக வளர வேண்டும்
சமூகம் புரியவேண்டும்
எதையேனும் சாதித்து –
நான் – இன்னார் பிள்ளையென்று
சொல்லல் வேண்டும்
திருமணத்திற்கு முன்
என் உறவுகளுடனான இருப்பை
முழுதாய் வாழவேண்டும்
என் அன்பில் பிணைந்தென் குடும்பம்
உன்னை முழுதாய் ஏற்கும் வரை
உனக்காய் –
காத்திருக்கவும் வேண்டும்.
இதலாமென்ன
எனக்கான லட்சியங்களா?
இல்லை இல்லை
நானென்பதன் அர்த்தம்
நீயும் தானே!
IT IS GOOD
LikeLike
மிக்க நன்றி ஜெய்! தொடர்ந்து படிங்க. கருத்துக்களை தெரியப் படுத்துங்கள். கருத்துகள் எழுதுபவரையும் வாசிப்பவரையும் செதுக்கும்!
LikeLike
லட்ச்சியக் காதலோ…
LikeLike
லட்சியமற்றிருப்பவர்களுக்கான லட்சியம் சொல்லும் காதல்!
LikeLike
உண்மைதான் லட்சிய காதல்
LikeLike
மிக்க நன்றி தமிழ்!
LikeLike