காவியங்களாய்
பல காதல் –
காலங்காலமாய் உண்டு!
கால்கொலுசின்
சப்தம் கேட்டு
காதல் வந்த நம்
உள்ளூர் கதைகளும்
உண்டு!
ஜாதி எரிந்து
உயிர் கொளுத்திய
அரக்கத் தன –
சம்பவங்களும் உண்டு!
மதம் தனக்கு
இரையாக்கிக் கொண்ட
காதலர்களின் கதறலில்
பெற்றோர் –
தனக்கான மானத்தை
மட்டும் வென்று
மனிதம் கொன்ற அவலமும் உண்டு!
ஒருதலைக் காதலென்றும்
தோற்றுப் போன –
அர்த்தம் புரிந்தும்,
பிரிவில் மீளாத இதயங்கள்
தன்னை தானே கொன்று
விஷ குப்பிகளை விநியோகம் செய்த
அறியாமைகளும் ஏராளமுண்டு!
தோழமை வஞ்சம் தீட்டி
விதைத்த நஞ்சால்
பிரிந்த இதயம் பிளந்து
உயிர் துறந்த துரோகங்கள்
ஒவ்வோர் ஊரின் எல்லையிலும்
நினைவுகளாய் –
ஒட்டிக் கொள்ளாமலில்லை!
பெற்ற பிள்ளையின்
மனசு நோகுமோ,
பாடம் கெடுமோ;
நம் சந்தேகத்தில் குழந்தை
மனம் வெந்து சாகுமோ
என்றெல்லாம் நம்பிய பெற்றோரின்
மூச்சை அடக்கி –
ஊர்விட்டோடி சுயநல சொர்க்கம் பூண்ட
காதல் கசப்பில் கதகதத்த
அசிங்க பிழைப்புகள் ஆங்காங்கே
தென்படாமலில்லை!
இதெல்லாம் தாண்டி
யார் மனமும் நலுங்காத
மீளாக் காதலாய்
காலம் வென்ற
ஏதோ ஒருசில
நொடிப் பொழுதுகளை எண்ணி
இதயம் திறந்து வாழும்
என்னை போன்றவனுக்காய் – வா;
காதலி –
காதலின் மொத்த அர்த்தத்திற்கும்
அன்பொன்றே தீர்வென –
வென்று காட்டுவோம்,
காதலை வென்று தீர்ந்ததில்
காலம்காலமாய் முரசு கொட்டாமல்
மூட்டை பையில் முடைந்து போன
பெண்ணியத்தால் –
தலைகுனிந்து – நடக்கும்
ஏதோ ஓர் பெண்ணின்
சுதந்திரத்தையாவது –
நம் காதலின் கற்பித்தல்
மீட்டுத் தரட்டும்; வா!
தங்களின் எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…? தொடர் மிகவும் அருமை, என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது,
கவி வரிகள் அனைத்தும் மிகவும் அருமை
LikeLike
மிக்க நன்றி தமிழ். மெய்சிலிர்த்தலில் சற்று மெய் உணரவும் வேண்டுகிறேன்!
LikeLike
எப்படித் தான் இப்படியெல்லாம் எழுதுகிறீர்களோ.. காதலை உங்கள் கவிதையில் கற்கிறோம்.. நன்றி வித்யா..
LikeLike
அப்படியா; நல்லது தான் எனினும், என் சிந்தனையை மட்டும் பெற்று தீர ஆராய்தலில் மட்டுமே எதற்கும் இறுதி முடிவு கொள்ளுங்கள் மனோ. மிக்க நன்றி! எனக்குத் தெரிந்ததை சரி என்று நினைத்தளில் தான் நீள்கிறது என் பயணம். எனவே சரியா என்பதை நீங்கள் தரப் படுத்திக் கொள்வதே உயர்வு! வளமையானதும்!
LikeLike
எல்லாம் கவிதைகளையும் படித்தேன், எல்லாமே நல்லாருக்கு. வாழ்த்துக்கள் வித்யாசாகர் அவர்களே. இதோடு நிறுத்தப் போவதாக சொல்கிறீர்களே நிறுத்த வேண்டாம் இன்னும் நிறைய எழுதுங்கள். நாங்கள் தொடர்ந்து படிக்கிறோம். பாராட்டுக்கள். கல்யாணி.K
LikeLike
முழுதாக நிறுத்த எந்த எண்ணமும் இல்லை கல்யாணி அவர்களே, காதல் ஒன்றே நம் பயணத்தின் நோக்கமும் இல்லை இல்லையா? இருப்பினும் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் தொடரும்! மிக்க நன்றி கல்யாணி!
LikeLike
விழுந்து விழுந்து காதலித்தீர்களோ? அருமையான கவிதை.
LikeLike
மரணம் பற்றி எழுத இறக்க வேண்டிய அவசியம் எழுதுபவர்களுக்கு இல்லை எனினும்; காதலில் மரணித்து உயிர் பெறுள்ளேன்! வருகைக்கு நன்றி மாதவன்!
LikeLike
too nice..
LikeLike
நீ………ண்ட நன்றி சலீம். தயை கூர்ந்து அதை arumai என்று தமிழ் உச்சரிப்பில் சொல்லலாமே. தவறாக எண்ணாதீர்கள்.. தமிழை உயிராக கொள்ளவேண்டாம்; நம் மொழியாக மட்டுமேனும் உணர்வோம் சலீம்! மிக்க நன்றி!
LikeLike
காதல் காதல் காதல் இன்னும் எத்தனை பேரு என்ன எல்லாம் எழுதுவீங்களோ. . எழுதுங்க. வேற எதனா உருப்படியா எழுத வரலைனா என்னை போல எழுதாமையே இருக்கலாம்ல.
L.மார்க்ஸ்
சென்னை
LikeLike
காலம் கடந்தும் தீராத வலி காதல் திரு மார்க்ஸ். வெறும் காதல் பற்றி மட்டுமே எழுதுவது என் நோக்கமும் அல்ல. இருப்பினும் உங்களால் ஒரு உறுதி தர இயலுமா………. உங்கள் மகனோ மகளோ உங்கள் பிரிவின்றி அதாவது உங்கள் ஜாதியின்றி, வேறு ஏதேனும் பிற்படுத்தப் பட்டதாய் மனிதன் தன் மேல் அறுத்து வகுத்து வைத்திருக்கும் பிரிவிலிருந்து, அதாவது ஜாதியிலிருந்து காதலித்தால் அதும் தக்க வயதில் எல்லாம் புரிந்து மனம் செய்துக் கொள்ள விரும்புவதாய் சொன்னால் சம்மதிப்பீர்களா?
நான் சம்மதிப்பேன். ஆனால், அவன்/அவள் அந்த விருப்பத்தை எந்த பருவத்தில் கொள்ளல் வேண்டும் என்பதே இக்கவிதைகளின் நோக்கம் என்பதை தயவுசெய்து ஏற்க கோருகிறேன். ஏற்க மறுப்பினும்; அதுவன்றி என் பயணத்தின் நோக்கம் வேறல்ல.
காடும் மலையும் மனிதனின் துடிக்கும் இதயம் அத்தனையும் எனக்காக துடிக்க நான் எக்கணமும் நினைக்கவில்லை; ஆயினும் அத்தனை இதயத்திற்காகவும் காடு மலை மண் ஊன்றி செல்கிறது இச் சமூகத்திற்கான என் துடிப்பு! வருகைக்கும் உங்களின் சமூக சீர்கெடல் கண்டு கொதிக்க முயலும் கோபத்திற்கும் மிக்க நன்றி!
LikeLike
superb, மிகவும் அருமை
LikeLike
மிக்க நன்றி சிவா. மிகவும் அருமை நெஞ்சின் ஆழம் வரை தொடுகிறது. பிறகெதற்கிந்த superb? அதற்க்கும் மனசு வேண்டும் என்கிறீர்களோ.. அக்காவும் வீட்டாரும் நலம் தானே. வாழ்த்தியதாகவும் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்!
LikeLike
உங்களின் எழுத்தின் வீரியம் கொஞ்சம் கலங்கடிக்கிறது. இத்தகைய பிரயோகமா!!! மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படவேண்டாம், தங்களுக்கு எழுதவேண்டாம் என்று நினைத்தாலும், அத்தகைய நினைப்பை புறம் தள்ளிவிடுகிறது உங்களின் வார்த்தைகள். என்ன சக்தி வார்த்தைகளில்.., ஒரு சங்கக்கால புலவனைப்போல வார்த்தைகள் கூர்மையாக… மன்னனின் உயிரையே பறிக்கவல்லதைப் போல பார்க்கிறேன் உங்கள் எழுத்தில். தமிழில் இப்படி ஒரு வேகமா (?) புயலாக.. ?
//எனக்குத் தெரிந்ததை சரி என்று நினைத்தலில் தான் நீள்கிறது; என் பயணம். எனவே சரியா என்பதை நீங்கள் தரப் படுத்திக் கொள்வதே உயர்வு! வளமையானதும்//
இதைப் படிக்குங்கால், இந்த பதிலே ஒரு…, என்ன சொல்வது…, ஒரு தர்க்கரீதியாகவும்.. அழகான நடையாகவும், படிக்க படிக்க திகைப்பும், உங்கள் எழுத்தின்மேல் ஒரு ஆர்வமும் ஏற்ப்பட வழிவகுக்கிறது!
//காதலில் மரணித்து உயிர் பெறுள்ளேன்//
நம்பமுடியவில்லை…ஆண், பெண்ணின் வெளித்தோற்றமே கவர்தலுக்கு முதல்படி என்றால், அதையும் மீறிய நிறைய இருக்கிறதோ….? நிராகரிப்பா / அல்லது போராட்டமா… நம்பமுடியவில்லை.
//ஏதோ ஒருசில
நொடிப் பொழுதுகளை எண்ணி
இதயம் திறந்து வாழும்
என்னை போன்றவனுக்காய் – வா;
காதலி –
காதலின் மொத்த அர்த்தத்திற்கும்
அன்பொன்றே தீர்வென –
வென்று காட்டுவோம்//
காதலை கொடுக்க ஒரு நல்ல நண்பனால் முடியாது…. ஆனால் நல்ல சுத்தமான அன்பை கொடுக்கமுடியுமே… அதுவும் ஒருவகையில் நிகறற்றதே. அப்படிப்பட்ட நட்ப்பிற்கே இங்கு வழி இல்லையே…(?)
//வெறும் காதல் பற்றி மட்டுமே எழுதுவது என் நோக்கமும் அல்ல. இருப்பினும் உங்களால் ஒரு உறுதி தர இயலுமா………. உங்கள் மகனோ மகளோ உங்கள் பிரிவின்றி அதாவது உங்கள் ஜாதியின்றி வேரு ஏதேனும் பிற்படுத்தப் பட்டதாய் மனிதன் தன் மேல் அறுத்து வகுத்து வைத்திருக்கும் பிரிவிலிருந்து அதாவது ஜாதியிலிருந்து காதலித்தால் அதும் தக்க வயதில் எல்லாம் புரிந்து மணம் செய்துக் கொள்ள விரும்புவதை சொன்னால் சம்மதிப்பீர்களா?//
இதுதானே இங்கு காலம் காலமாக பொக்கிசமாக கட்டிகாக்கப்படுகிறது, வரட்டு கெளரவம். அனைத்தும் மாற்றத்துக்கு உட் பட்டதே.. ஆனால் மாறாத ஒன்று உண்டென்றால் அது இதுதான். எத்தனை வளர்ச்சியை கண்டிடினும், வளர்ச்சி இல்லா ஒரு கட்டுமானம்… மனிதனை மனிதன் காலில் போட்டு நசுக்கும் கலாச்சாரம்…, மாறாத ஒன்று உண்டென்றால், அது நீங்கள் கூறியதுதான்..
விஜய்
LikeLike
அப்பாடா…!
காலம் மனசு அக்கறை அன்பு பண்பு இத்யாதி இத்யாதி இத்யாதி…… இன்னும் என்னென்ன எல்லாம் சொல்லலாமோ; அவைகளை எல்லாம் சுமந்த வார்த்தைகள் உங்களுடைய வார்த்தைகள்.
இத்தனை எழுதுகிறேனா நான் என்றெல்லாம் என்னை மெச்சிக் கொள்ள விரும்பவில்லை விஜய். இன்னும் எழுதலாம் என்ற சம்மதத்தை மட்டும் உங்களிடமிருந்துப் பெற்றுக் கொள்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.. உங்களை போன்றோரால் என் பயணம் வரலாறுவரை நீளுமென நம்பிக்கை கொள்ளத் துணிகிறேன்.
நன்றி; நன்றி; நன்றி!
LikeLike
கவிதை அருமை.
அதனினும் சிறப்பு மறுமொழிகளை எதிர் கொள்ளும்விதம்.
வாழ்த்துகள்! அண்ணா.
LikeLike
மிக்க நன்றிபா கவி. உங்களிடமெல்லாம் பேசுவதில் புத்திக் கூர்மை கொண்டு விடுகிறது போல்!
LikeLike
வணக்கம் வித்யாசாகர்
நீங்கள் எழுதலாம். நான் உங்கள் எழுத்தை குறை சொல்லவில்லை. நானும் உங்கள் எழுத்தின் ரசிகன் தான். காதல் மட்டுமே வாழக்கை இல்லையே என்று தான் நினைத்தேன். அதற்க்கு நீங்கள் எழுதிய விளக்கத்தை எனக்கெதிராக நான் எடுக்கவில்லை.. மாறாக இச் சமூகத்திற்கான பதில் என்று கொள்வேன். தொடர்ந்து எழுதுங்கள். உங்களின் படைப்புகள் உலகளாவி வர வாழ்த்துக்கள்!
L.மார்க்ஸ்
LikeLike
வணக்கம் மார்க்ஸ். எங்கோ சிறகடித்துப் பறக்கும் சுதந்திர உணர்வை அடைந்தேன், எங்கோ ஒரு முட்டுக் கட்டை விழுந்து போனதோ எழுத்திற்கு, யாரும் வருந்தும் படி குறையென்று சொல்லி மறுக்கும் அளவிற்கு எதையோ செய்துவிட்டேனோ என்று வருத்தமே அடைந்தேன், அதன் மீட்சியாய் உங்கள் பதிவு; மனதிற்குள் மகிழ்வாய் நிறைகிறது. மிக்க நன்றி.
உயிர் மூச்சு உள்ளவரை எழுத்தின் பயணம் கண்ணீராகவாவது உங்கள் மனங்களில் கரையும்!
LikeLike
பிங்குபாக்: கவிதை கலைஞர்கள் « தமிழ் நிருபர்
உங்கள் தளத்தில் என்னையும் அழைத்துள்ளமைக்கு மிக்க நன்றி காயத்ரி.
http://tamilnirubar.org/?p=9730
தொடர்ந்து வாருங்கள்.. இன்னும் நிறைய பேசுவோம் இந்த பயணத்தில்!
LikeLike
அருமையான பதில்கள் நண்பரே
LikeLike
மிக்க நன்றி தமிழ்; நீங்களெல்லாம் கூட இருக்க என் தமிழுக்கென்ன குறை வந்துவிடும்!
LikeLike
பிங்குபாக்: செண்பகமே செண்பகமே ..2 « தமிழ் நிருபர்