கொட்டிப் பெறாதவர் மனம் தான் எட்டித் துடிக்கிறது எல்லோருக்கும் உதவ. தேசம் எதுவாயினும் என்ன உயிர் விலைமதிப்பற்றது தானே, எனில்; வாருங்கள் ஒருமுறை மீண்டும் ஒற்றுமை கொள்வோம்.
ஒரிசாவை சேர்ந்த சகோதரி ஜெயஸ்ரீ என்பவருக்கு இரத்தப் புற்றுநோயாம். முற்றிலும் குணம் பெற ஒரு கோடி வரை ஆகுமாம். இருபத்தைந்து லட்சம் வரை தயாராகிவிட்டது. இன்னும் எழுபத்தைந்து லட்சமே நிர்ணயிக்க உள்ளது அவரின் உயிரை.
சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம் தோழர்களே. நம்மால் ஆனதை அந்த சகோதரிக்குத் தந்துதவுவோம். நான் ஐந்தாயிரம் வரை தர முன்வருகிறேன்.
உங்களால் ஆனதை நீங்களும் தந்துதவுங்கள். இதோ அவரின் உயிர் காக்கும் பணியில் நமக்கு தெரிந்த ஒரு சகோதரி ஒருவர் ஜெயஸ்ரீயின் முழு விவரம் தெரிவிக்க வலை ஒன்றினை திறந்து அதில் மொத்த தகவல்களையும் கொடுத்துள்ளார்.
விவரங்களை பிறருக்கும் அனுப்பி உதவுங்கள்.
பிறரையும் உதவ முன்வர சொல்லுங்கள்.
தன்னால் இயன்றதை செய்யுங்கள், ஒன்றுமே இயலாத போதில் இறை நம்பிக்கை உண்டெனில் இறைஞ்சி அவர் உடனே குணம்பெற வேண்டுங்கள். அதுவும் இல்லையெனில் அவர் விரைவில் குணம் பெற்றுவிட நீங்களே வாழ்த்தி, குணம் பெருவாரென்று மட்டுமேனும் நம்புங்கள்.
நம் நம்பிக்கையின் அதிர்வலைகளில் அவரின் தேவைகள் பூர்த்திக் கொண்டு நலம் பெறட்டும்!
உதவும் நெஞ்சங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகளுடன்..
வித்யாசாகர்
very help full message for the pationt
பெரு மதிப்பிற்குரியோர் மிக்க நன்றி!
அந்த சகோதரி ஜெயஸ்ரீயின் கணவர் இச் சமுதாயமாகிய நம்மிடம் உதவி கேட்டு வந்துள்ளார். உதவ மனமுள்ளோர் அவருடைய வலைத்தளம் சென்று பாருங்கள். அங்கு மருத்துவ செலவு உதவியோர் விவரம் அனைத்தும் கொடுக்கப் பட்டுள்ளது. இயன்றவரை பிற நண்பர்களுக்கும் அறியப் படுத்துங்கள் மேச்சுதலை மீறி யாரேனும் ஒருவர் உதவ முன் வந்தாலும் நாம் பதிவிட்டதன் அர்த்தம் நிறைவாகும். நாம் பெரிதாக செய்ய வேண்டும் என்றில்லை. ஒவ்வொருவரும் ஆயிரம் தர அவசியமில்லை. ஆயிரம் பேர் பத்தோ இருபதோ தருவோம். சிறு துளிகள் நிறைந்து பெரு வெள்ளமாகும். பேருதவியாகும். மிக்க நன்றிதோழர்!
Please spread the wolrd about this webpage to everyone and do the needful for the same.