நிறைய அலமாரிகளில்
பணம் அடுக்கப்பட்டு
வயிறுகளில் பசி
இறுகக் கட்டி
பட்டில் ஆடையுடுத்தி
மாற்றுப் புடவைக்கு
பிச்சையெடுத்து
விமானத்தில்
நடுக்கடலில்
பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்
வாகன நெரிசலுக்கிடையே
திருமணம் நடத்தி
முதிர்கன்னிகளை
ஆங்காங்கே திரியவிட்டு
பெண்களின் கற்பு பேசி
விலைமகள்களுக்கு –
வீடமைத்துக் கொடுத்து
ஜனநாயக தேசமென
மார்தட்டி –
எடுத்ததற்கெல்லாம்
ஜாதி கேட்டு
எம்மதமும்
சம்மதமென சொல்லி
என் மதம் உன் மதமென்று
வெட்டிமாய்ந்து
அரசியலை அழகாக பேசி
அரசியல் வாதிகள் மட்டும்
சொகுசாக வாழ்ந்து
இல்லார்க்கு
இல்லாமலே போவதும்
இருப்பவர்
தனக்கு மட்டுமே வாழ்வதும்
அப்பப்பா..
மிக உன்னதமாக
வாழ்கிறோம் நாம்;
வரலாற்றுக் குறிப்பில் நம்மை
வளரும் தேசமெனக்
குறித்துக் கொள்வோம்,
நாளைய தலை முறை
காரி துப்பட்டும்!
—————————————————–
வித்யாசாகர்
ஆம் அண்ணா மிக உன்னதமாக தான்
வாழ்கிறோம் நாம்;
வளரும் நாடு என்பதற்கு இவர்களுக்கான அளவுகோல் இது தானே,
இந்த தலைமுறையே காரி உமிழத்தான் செய்கிறது.
நம் மீது திட்டமிட்டே வகுத்த இந்த சமூக கட்டமைப்பை மாற்றியே ஆக வேண்டிய கட்டாய சூழலில் உள்ளோம்.
LikeLike
ஆம்; நிஜம் தான் கவி. நம் போற்றுதலுக்குரிய சுவாமி விவேகானந்தர் சொன்னார் “நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று. ஆனால், எழுச்சி கொள்ளும் இன்னும் நூறு இளைஞர்கள் உங்களைப் போல் சுய சிந்தனையோடு தவறுகள் கண்டு கொதித்தெழட்டும், சமூகம் காக்க முன்வரட்டும்; எந்த விவேகானந்தரும் இல்லாமலே கூட, நாடு தானே தன் குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்ளும்.
அப்படிப் பட்ட இளைங்கர்களை தேடும், உருவாக்கும் எண்ணத்திலே தான் தொடர்கிறதென் எழுத்தின்; கட்டாயப் பயணமும்,வீடு.. சுற்றம்.. வேலை.. வேறுபல கடமைகளை தாண்டியும்!
18 மார்ச், 2010 8:51 am அன்று, commena t-reply@wordpress.com
LikeLike